• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உணவுக்கட்டுப்பாடு முதல் நடை பயிற்சி வரை: கொரோனா காலத்தில் உங்கள் பாலியல் ஈடுபாட்டை எப்படி அதிகரிக்கலாம்?

உணவுக்கட்டுப்பாடு முதல் நடை பயிற்சி வரை: கொரோனா காலத்தில் உங்கள் பாலியல் ஈடுபாட்டை எப்படி அதிகரிக்கலாம்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா காலத்தில் பாலியல் விருப்பம் குறைந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனை அதிகரிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

  • Share this:
டாக்டர் ஜெயின் எழுதிய கட்டுரையில், கோவிட் தொற்றுக்குப்பின் ஏற்படும் பாலியல் விருப்பம் மீதான குறைபாடு பற்றி விவரித்துள்ளார். அதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.

செக்ஸ் என்பது ஒவ்வொருவருடைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதைப் பற்றிய பேசுவதோ, சந்தேகங்கள் இருந்தால் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோ இந்திய வீடுகளில் இன்றும் பெரிய களங்கம் விளைவிப்பவை மற்றும் அவமானத்துடன் தொடர்புடையவை. இதன் விளைவாக, பெரும்பாலான நபர்கள் பாலியல் ரீதியான சுகாதார பிரச்சினைகளை கையாள அல்லது தகவல்களைக் கண்டுபிடிக்க சுயமாகவே முயற்சிக்கின்றனர். இந்நிலையில், பாலியல் ஆரோக்கியம் குறித்து, பெரும்பாலும் சரிபார்க்கப்படாத ஆன்லைன் தரவுகளின் நாடுகிறார்கள் அல்லது தங்கள் நண்பர்களின் ஆதராமில்லாத ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்.

பாலியல் ஆரோக்கியம் குறித்து பரவியிருக்கும் தவறான தகவல்களை சரி செய்ய, News18.காம் ஒவ்வொரு வாரமும் ‘லெட்ஸ் டாக் செக்ஸ்’ என்று தலைப்பில் பாலியல் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விளக்குகிறது. இந்த பகுதி மூலம் பாலியல் பற்றிய உரையாடல்களைத் தொடங்கலாம் மற்றும் பாலியல் நுண்ணறிவு மற்றும் நுணுக்கத்துடன் பாலியல் ரீதியான சுகாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம். கோவிட்-19 தொற்றால் உலகெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது, தம்பதிகள் மீண்டும் இணைவதற்கும், அவர்களின் காதல் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கலாம்.

இருப்பினும், ஆய்வுகள் முடிவுகளை நம்ப வேண்டும் என்னும்போது, மேலே கூறியிருப்பது பொருந்தாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை, மருத்துவ சேவையை அணுகுவதில் இருந்த சவால்கள் மற்றும் நம்முடைய வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி, அல்லது கோவிட் தொற்றால் நாம் நேசித்தவர்களின் இழப்பு ஆகிய அனைத்தையும் கையாள்வதில், நாம் அனைவரும் சோர்வடைந்து, மன அழுத்தத்துடன், பதட்டத்துடன் இருக்கிறோம். ஆகையால், கடந்த சில ஆண்டுகளில் பாலியல் விருப்பம் குறைந்துள்ளது என்று பலர் தெரிவித்தால் ஆச்சரியமில்லை. அவர்களின் காதல் வாழ்க்கை கிட்டத்தட்ட சிதைந்துவிட்டது என்று கூறலாம்.

மனஅழுத்தம் இருக்கும்போது உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது. ஈடுபட்டாலும் திருப்தியாக இருக்காது. அவர்கள் ரிலாக்சாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தால் மட்டுமே உடலுறவில் ஈடுபட முடியும். இருப்பினும், இந்த கட்டத்தில், மக்கள் அதீத பதட்டமாக, ஒரு விதமான படபடப்புடன் இருக்க பல காரணங்கள் இருப்பதால், அனைவரும் அமைதியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு சிறப்பானதல்ல. குறைந்த பாலுணர்வு, அல்லது பாலுணர்வு தோன்றாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே, ஒரு தீர்வை கண்டுபிடிப்பதற்கு உங்களின் சிக்கலை அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.

கோவிட் தொற்றுநோய் பாதிப்புக்குப் பிறகு, பாலியல் உணர்வு குறைந்தது போல உணர்ந்தால், அவர்கள் உடனடியாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொற்றுநோய் பயம் மற்றும் அதீத மன அழுத்தத்தைத் தூண்டியிருக்கும். மேலும் அதிகப்படியாக உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும், அதிக அளவு மன அழுத்த ஹார்மோன்களை தூண்டி, பாலியல் விருப்பம் குறையக் காரணமாகின்றன. இந்த சூழ்நிலையை சரிசெய்ய, உங்களுக்கு மகிழ்ச்சியான ஹார்மோன்கள் தேவைப்படுகின்றன. அதாவது டோபமைன், ஆக்ஸிடோஸின், செரோடோனின் மற்றும் எண்டார்பின் ஆகிய ஹார்மோன்கள் நம்மை மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் உணரவைக்கின்றன. மேலும் இது பாலியல் உறவுக்கான ஊக்கத்தையும் அளிக்கின்றன.

டோபமைன், என்பது ஒரு ஃபீல்-குட் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உங்கள் மூளையின் வெகுமதி அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக, ஒரு டிரான்ஸ்மிட்டராக செயல்படுகிறது. டோபமைன் ஹார்மோன், நினைவோல், மோட்டார் சிஸ்டம் செயல்பாடு மற்றும் பல மகிழ்ச்சிகரமான உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆக்ஸிடோஸின், 'லவ் ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. இது பிரசவம், தாய்ப்பால் மற்றும் தாய்-குழந்தை பிணைப்புக்கு மிகவும் அவசியம். இந்த ஹார்மோன் உறவுகளில் நம்பிக்கை, அன்பு மற்றும் பிணைப்பை மேம்படுத்தவும் உதவும். மேலும் ஆக்ஸிடோஸின் அளவு, உடல் ரீதியான செயல்பாடுகளான முத்தம், கட்டிப்பிடித்தல் மற்றும் உடலுறவு ஆகியவற்றின் போது, அதிகரிக்கும்.

செரோடோனின் மற்றொரு மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும். இதுவும் ஒரு டிரான்ஸ்மிட்டர். இந்த ஹார்மோன் உங்கள் மனநிலையையும், உங்கள் தூக்கம், பசி, செரிமானம், கற்றல் திறன் மற்றும் நினைவகத்தையும் சீராக்க உதவுகிறது. கடைசியாக, எண்டார்பின்கள். இது உங்கள் உடலின் இயற்கையான வலி நிவாரணியாகும். இது உங்கள் உடல் வலி, மன அழுத்தம் அல்லது அசௌகரியத்தை நீக்கும். நீங்கள் சாப்பிடுவது, வேலை செய்வது அல்லது உடலுறவு கொள்வது போன்ற வெகுமதி வழங்கும் செயல்களில் ஈடுபடும்போது எண்டார்பின் அளவும் அதிகரிக்கும்.

இந்த நான்கு மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிப்பதன் மூலம், உங்கள் லிபிடோவை கணிசமாக அதிகரிக்கலாம். உங்கள் மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிப்பதற்கான முதல் படி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பதை உணர வேண்டும். 'சிரிப்புதான் சிறந்த மருந்து' என்ற பழைய பழமொழி யாருக்குத் தான் தெரியாது! சிரிப்பது, ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்தாது, ஆனால் இது கவலை அல்லது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. டோபமைன் மற்றும் எண்டார்பின் அளவை அதிகரிப்பதன் மூலம் சோகமான மனநிலையை மேம்படுத்தலாம்.

மன அழுத்தம் ஏற்படும் இடம் அல்லது மூலத்திலிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. போதுமான தூக்கம், மது அருந்துவதைக் குறைப்பது அல்லது 20 நிமிட நடைப்பயிற்சி, ஓட்டம், பைக் சவாரி அல்லது பற்ற உடல் ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், உங்கள் பாலியல் இயக்கத்தை அதிகரிக்க முடியும்.

ஸ்ட்ரெட்சிங், தியானம் மற்றும் சமூகத் தொடர்புகள் போன்ற அமைதியாக்கும் பயிற்சிகளும் பெரிய அளவில் உதவும். இந்த எளிய நடைமுறைகள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, உங்கள் செரோடோனின், டோபமைன் மற்றும் எண்டார்பின்களின் அளவையும் அதிகரிக்கும்.

இவற்றுடன், உணவு செய்ய வேண்டிய மாற்றங்களும் உள்ளன. இது உங்கள் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பை மேம்படுத்தக்கூடும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நம் உடலை (நம் மூளை உட்பட!) பாதிக்கும். எனவே, பல்வேறு சத்தான உணவுகளை சாப்பிடுவது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சாதகமாக பாதிக்கிறது, இதனால் நோயை எதிர்க்கும் சக்தி மேம்பட்டு, ஆற்றல் அதிகமாகி, மகிழ்ச்சியை உணர முடிகிறது.

மிகவும் ருசியான அல்லது நீங்கள் விரும்பும் ஒன்றை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் பெறும் மகிழ்ச்சியான மனநிலை, எண்டார்பின்களுடன் டோபமைன் உற்பத்தியைத் தூண்டும். நீங்கள் விரும்பும் ஒருவருடன் உணவைப் பகிர்வது மற்றும் உணவு தயாரிப்பதில் ஒன்றாக ஈடுபடுவது, ஆக்ஸிடோஸின் அளவை அதிகரிக்கும்.

சில உணவுகள் ஹார்மோன் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மகிழ்ச்சியான ஹார்மோன் ஊக்கத்திற்கான, உணவு திட்டமிடலில் பின்வருவதை சேர்க்க வேண்டும்: காரமான உணவுகள் எண்டார்பின் உற்பத்தியைத் தூண்டும். தயிர், பீன்ஸ், முட்டை, குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சிகள், காபி மற்றும் பாதாம் ஆகியவை டோபமைன் உற்பத்தியோடு தொடர்புடைய சில உணவுகள். டைரோசின் நிறைந்த உணவு உங்கள் மகிழ்ச்சியான ஹார்மோன்களையும் அதிகரிக்கும். ஏனெனில் டைரோசின் ஒரு என்சைம் உதவியுடன் டோபமைனாக மாறும் தன்மை கொண்டது. டைரோசின் முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிகளவில் காணப்படுகிறது.

டைரோசினுடன் சேர்ந்து செரோடோனின் அதிகரிக்க பாதாம், ஓட் மீல், டார்க் சாக்லேட்டுகள் மற்றும் க்ரீன் டீ உதவுகிறது. ஓட்ஸ், சீஸ், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற டிரிப்டோபனில் அதிகமாக இருக்கும் உணவும், செரோடோனின் அதிக சுரப்போடு தொடர்புடையது. புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளான, தயிர், கிம்ச்சி, மற்றும் சார்க்ராட் போன்றவை ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கும்.

ஒரு நல்ல செக்ஸ் வாழ்க்கைக்கு, காதல் மிகவும் முக்கியமாகும். ஒருவரிடம் ஈர்க்கப்படுவது ஆக்ஸிடாஸின் உற்பத்திக்கு வழிவகுக்கும். முத்தம், அணைப்பு அல்லது உடலுறவு போன்ற உடல் ரீதியான செயல்பாடுகள் அனைத்தும், ஆக்ஸிடாஸின் வெளியாகும் என்று உறுதியாக சொல்ல முடியும்முறைகள்.

நீங்கள் அக்கறை கொண்ட ஒருவருடன் நேரத்தை செலவிடுவது ஆக்ஸிடாஸின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நெருக்கம் மற்றும் நேர்மறையான உணர்வுகளை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நீங்கள் மகிழ்ச்சியாகவோ, ஆனந்தமாகவோ அல்லது இன்பமாகவோ உணர முடியும்.

அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்களை நீங்கள் உணர விரும்பினால், நடனம் மற்றும் செக்ஸ் எண்டார்பின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே போல, ஆர்காசம் எனப்படும் பாலியில் உறவில் கிடக்கும் இன்பமும், டோபமைன் வெளியீட்டைத் தூண்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எவ்வாறாயினும், இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் பாலியல் விருப்பத்தின் தீவிர பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது. எனவே, இவை உங்கள் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால, தயவுசெய்து ஒரு பாலியல் நிபுணரை அணுகவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: