Home /News /lifestyle /

Man child - இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கணவர் ஒரு ‘வளர்ந்த குழந்தை’ தான்..!

Man child - இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கணவர் ஒரு ‘வளர்ந்த குழந்தை’ தான்..!

கணவன் - மனைவி உறவு

கணவன் - மனைவி உறவு

ஏதாவது செய்யச் சொன்னால், அதைத் தட்டிக் கழிப்பதற்கு காரணங்கள் இருந்து கொண்டே இருக்கும். பில் கட்ட கடைசி தேதி, முதலீடு முடிவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்களை ஏதேனும் செய்யச் சொல்லி செய்யவில்லை என்றால் அதற்கு ஏதேனும் சாக்குகளை கூறுவார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வளர்ந்த குழந்தை என்று முதிர்ச்சி இல்லாதவர்களைக் கூறுவது வழக்கம். வயது தான் ஆகிறதே தவிர, அறிவும், வயதுக்கு ஏற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று கொஞ்சம் கூடத் தெரியவில்லையே என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதில், பெரும்பாலும் கணவன் மனைவி உறவில் அடிக்கடி ஏற்படும் சிக்கல் இது!

குழந்தை மாதிரி நடந்துக்கறீங்களே, இவ்வளவு வயசாகுதே கொஞ்சமாவது பொறுப்பிருக்கா, இப்படி யாராவது சின்ன புள்ளதனமா நடந்துப்பாங்களா என்று கணவர்கள் அவரவர் மனைவியரிடம் திட்டு வாங்குவார்கள். ஆங்கிலத்தில் இதை ‘manchild’ என்று கூறுவார்கள். உங்கள் கணவரும் அப்படி ஒரு வளர்ந்த குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகள் இது தான்.

பொறுப்பில்லாமல் இருப்பது

சின்ன சின்ன விஷயம் முதல் பெரிய முடிவுகள் எடுப்பது வரை, எதிலுமே பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது, பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வது, உங்கள் கணவர் manchild என்பதற்கான அறிகுறி ஆகும்.

எதை கேட்டாலும், சொன்னாலும் தவிர்க்க சாக்கு சொல்வார்கள்

ஏதாவது செய்யச் சொன்னால், அதைத் தட்டிக் கழிப்பதற்கு காரணங்கள் இருந்து கொண்டே இருக்கும். பில் கட்ட கடைசி தேதி, முதலீடு முடிவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்களை ஏதேனும் செய்யச் சொல்லி செய்யவில்லை என்றால் அதற்கு ஏதேனும் சாக்குகளை கூறுவார்கள். தன்னுடைய தவறுகளை மறைக்க பலவிதமான சாக்குகளை சொல்லி, உங்களை கன்வின்ஸ் செய்ய முயற்சிப்பார்கள்.



எப்போதும் பணப் பிரச்சனைகள் இருக்கும்

முதிர்ச்சி இல்லாமல் இருப்பவர்களுக்கு வரவு செலவுகளை திட்டமிட முடியாது. எப்போதுமே பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கடன் இருந்து கொண்டே இருக்கும். சம்பாதிப்பதை விட அதிக செலவுகள் செய்வார்கள் அல்லது சம்பாதிப்பதை சரியான முறையில் செலவிட முடியாமல் திணறுவார்கள்.

நம்பலாமா கூடாதா என்று நினைக்க வைப்பார்கள்

ஒரு உறவின் பலமாக இருப்பதற்கு பரஸ்பர நம்பிக்கை வேண்டும். ஆனால், உங்கள் கணவர் பொறுப்பே இல்லாமல், அல்லது அவரை நம்பி எந்த விஷயமும் செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் போது, உறவு பாதிக்கப்படும். கணவர் ஆதரவாக இருப்பார், அல்லது அவரே செய்து முடிப்பார் என்று நம்பி ஒரு வேலையை கொடுக்கும் போது, அதை செய்யாமல் தட்டிக்கழிப்பது அவர் மீது நம்பகத்தன்மையை குறைக்கும்.

உங்களிடம் பாலியல் உணர்ச்சி மற்றும் ஆசை குறைந்துவிட்டதா? - அதை இயற்கையாக மீட்டெடுப்பது எப்படி?

தவறு செய்வதை சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

குழந்தைகள் அடம் பிடிப்பதை அனைவரும் பார்த்திருக்கிறோம். சில குழந்தைகள் அவர்கள் செய்வது தவறு என்று சொன்னால், சரி என்று ஏற்றுக்கொண்டு புரிந்து கொள்வார்கள். ஆனால், சில குழந்தைகள் என்ன சொன்னாலும் பிடிவாதமாக இருப்பார்கள். அது போல உங்கள் கணவரும்! எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.



எப்போது என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசுவார்கள்

உங்கள் கணவர் வளர்ந்த குழந்தை என்றால், எப்போது என்ன பேச வேண்டும் தெரியாது. சூழ்நிலையை புரிந்து கொண்டு, பேச வேண்டுமா இல்லை தவிர்க்க வேண்டுமா, என்பது கூட தெரியாமல் பேசிவிடுவார்கள். குழந்தைகளுக்கு சொல்வது போல, எங்கே எப்படி பேச வேண்டும், எப்படி பேசக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கும்படியான சூழலில் கொண்டு வருவார்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Relationship Tips

அடுத்த செய்தி