பாலியல் கல்வி என்பது இன்றைய உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதைப்பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதை கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் மீதான வன்முறைகளை குறைக்க பாலியல் கல்வி முறை பள்ளிகளிலேயே கொண்டுவர வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது. இதில், செக்ஸ் என்றால் ஆண், பெண் இருவருக்கும் இடையே நடைபெறும் உறவு மட்டுமே என்பது பலருடைய எண்ணம். ஆனால், லெஸ்பியன் (Lesbian), டிரான்ஸ்ஜென்டர் (transgender), கே செக்ஸ் (gay sex), பை செக்ஸூவல் (bisexual) என பல வகைகள் உண்டு.
ஒவ்வொருவருக்கும் இருக்கும் பாலின ஈர்ப்பின் அடிப்படையில் செக்ஸில் இத்தனை பிரிவுகள் உள்ளன. ஒரு சிலருக்கு பாலின ஈர்ப்பு என்பதே இருக்காது. ஒரு சிலருக்கு இருபாலின ஈர்ப்பு என்பதும் இருக்கும். இதில் டெமி செக்ஸூவல்( demi sexual) என்ற ஒரு பிரிவும் உண்டு. அவர்கள், தங்களுடன் நெருங்கி பழகியவர்களுடன் மட்டுமே செகஸ் வைத்துக்கொள்வார்கள். குறிப்பாக நண்பர்கள், காதலன், காதலி உள்ளிட்ட நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் மீது மட்டுமே அவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் பெண்ணாகவும் இருக்கலாம், ஆணாகவும் இருக்கலாம்.
நெருங்கிய ஆண் நண்பன் ஒருவன், தன்னுடன் நெருங்கி பழகும் ஆண் நண்பனுடன் மட்டுமே செக்ஸ் வைக்க விரும்புவான். நெருங்கிய தோழியுடன் மட்டுமே மற்றொரு தோழி செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவாள். இதுமட்டுல்லாது, நெருங்கிய தோழியுடன், நெருங்கிய தோழன் செக்ஸ் வைத்துக்கொள்வது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
டெமி செக்ஸூவல் பிரிவைச் சேர்ந்தவர்கள், மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்புவோருடன் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார்கள். இவர்கள் உடனடியாக யாருடனுடம் நெருங்கிப் பழகமாட்டார்கள். ஒருவருடன் ஆழமான உறவைப் பேணுவதற்கு இவர்களுக்கு சிறிது காலம் தேவைப்படும். அப்படி, பழகிய பின்பு நட்பைத் தாண்டிய உணர்வு ஏற்படும். மனதுக்குள் நெருங்கிப் பழகலாம் என்ற உணர்வு ஏற்பட்டு, பின்பு அவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற உணர்வு ஏற்படும் இத்தகைய உணர்வு ஏற்பட்டால், நீங்கள் டெமி செக்ஸூவல் என்று அர்த்தம்.
மனைவிக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைகிறதா..? உங்களுக்குள் சந்தேகம் எழுகிறதா..?
1. நெருங்கிய நட்பு வட்டம்
உங்களுக்கென்று ஒரு நெருங்கிய நட்பு வட்டம் இருக்கும். அதில், யாரோ ஒருவர், நீங்கள் அதிகம் நம்பிக்கை கொண்ட நபராக இருப்பார். அவரிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலை ஒரு கட்டத்தில் உருவாகும். அப்போது, அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று ஒரு எண்ணம் உங்களுக்குள் உருவாகும். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பார்க்கும்போது அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்று பலமுறை உங்களுக்குள் சிந்தித்திருப்பீர்கள். அப்படி தோன்றினால் நீங்கள் டெமி செக்ஸூவல்.
2. ஒருவர் மீதான ஈர்ப்பு
இயல்பாக, உங்களுக்கு ஒருவர் மீது ஈர்ப்பு எடுத்தவுடனேயே வந்துவிடாது. அப்படி, உங்களுக்கு ஒருவர் மீது ஈர்ப்பு வந்துவிட்டால் நிச்சயம் உங்களின் நம்பிக்கையை பெற்றவராக மட்டுமே இருப்பார். ஏன் அவர் மீது மட்டும் இத்தகைய ஈர்ப்பு என்று யோசித்துப்பார்த்தால், உங்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப்போனவராகவும், நீங்கள் ஒருபோதும் அவரை வெறுத்து இருக்க மாட்டீர்கள். அதனால், அவர் மீது உங்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.
3. உறவில் குழப்பம்
இரண்டு பேர் நன்றாக பழகிக்கொண்டிருக்கிறீர்கள். மிகவும் நட்பாக இருக்கும்போது, ஒரு கட்டத்தில் உங்கள் உறவு, எதார்த்தத்தையும் மீறிய நிலையில் பயணித்துக்கொண்டிருப்பீர்கள். நண்பர்களாக இருந்தாலும், நாம் ஏன் இப்படி இருக்கிறோம். சாதாரணமாகவே நண்பர்கள் இப்படியா இருப்பார்கள் என்று யோசிக்கத் தொடங்குவீர்கள். அப்படியான யோசனை உங்களுக்குள் வந்தால், கண்டிப்பாக நீங்கள் இருவரும் டெமி செக்ஸூவலர்.
4. அயலர்கள் மீது நாட்டம் இருக்காது
உங்கள் நெருங்கிய வட்டத்தைக் கடந்து பார்க்கும்போது உங்களை ஈர்க்கக் கூடிய நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். யாரேனும் ஒருவரைப் பார்த்தால் அவர்களை பிடிக்கும், ஆனால் உங்களின் மனதுக்கு நெருக்கமானவராக அவர் இருக்க முடியாது.
5. நண்பர்களின் நக்கலை எதிர்க்கொள்ள நேரிடும்
நீங்கள் அடிக்கடி நண்பர்களின் கேலிகளை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் திடீரென யாருடனும் உங்களுக்கு நெருக்கம் ஏற்படாது என்பதால், ரொம்ப அடக்கமானவனாக இருக்கிறியே என கேலி செய்வார்கள். உங்கள் நம்பிக்கையை வென்றவர்களுடன் மட்டுமே பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்புவீர்கள் என்பதால், அது ஓர் இரவிலோ, பகலிலோ நடந்து விடாது. அதனால், விரைவாக யாருடனும் செக்ஸ் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் மாட்டீர்கள். இதுவே, அவர்கள் உங்களை கேலி செய்வதற்கான காரணமாக இருக்கும்.