• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பார்ட்னர் உங்களை ஏமாற்றுகிறாரோ என சந்தேகிக்கிறீர்களா..? இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!

பார்ட்னர் உங்களை ஏமாற்றுகிறாரோ என சந்தேகிக்கிறீர்களா..? இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!

மாதிரி படம்

மாதிரி படம்

'மைக்ரோ மோசடி' (‘micro-cheating’) என்ற சொல்லை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இது நம் வாழ்வில் நாம் கற்பனை செய்துகூட பார்க்காத படி நாம் பிறரால் அதிகம் ஏமாற்றப்படுவதை குறிக்கும் சொல்.

  • Share this:
நம் வாழ்க்கையில் சோஷியல் மீடியாவின் தாக்கம் மிகவும் முக்கியமானதாக மாறி விட்டது. அதனால் அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிந்து கொள்ளவும் உணரவும் நாம் பல நேரங்களில் தவறவிடுகிறோம். இவ்வகையான பல சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களால் பல உறவுகள் வீழ்ச்சியடைகிறது. குறிப்பாக உங்கள் துணை உங்களிடமிருந்து எதையாவது மறைகிறார் என்பதை எளிமையாக கண்டறியலாம். 'மைக்ரோ மோசடி' (‘micro-cheating’) என்ற சொல்லை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இது நம் வாழ்வில் நாம் கற்பனை செய்துகூட பார்க்காத படி நாம் பிறரால் அதிகம் ஏமாற்றப்படுவதை குறிக்கும் சொல்.

உணர்ச்சிபூர்வமான துரோகத்தின் ஒரு சிறிய செயல் தான் இது, இருவரின் உறுதியான உறவுக்கு வெளியே உங்கள் துணை வேறு ஒருவருடன் ஈடுபடுவது. இருப்பினும், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமலேயே உறவில் தங்கள் துணையை நம்பி தொடர்ந்து இருக்கின்றனர். நீங்கள் அதிகமாக நம்பும் உங்கள் துணை உங்கள் உறவுக்கு வெளியே வேறு ஒரு நபரிடம் நெருக்கமாக பழகும் செய்தி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இதை முதலில் நீங்கள் உறுதிப்படுத்துவது முக்கியம் எனவே உங்கள் துணை உங்களை மைக்ரோ மோசடி அதாவது ஏமாற்றுகிறாரா என்பதை பின்வரும் டிப்ஸ்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்...டேட்டிங் ஆப்ஸ்கள் ஆக்ட்டிவாக இருக்கிறதா (Dating apps are still on) :

பலருக்கும் சிறந்த வாழ்க்கை துணை டேட்டிங் ஆப்ஸ்களில் துவங்குகிறது. ஆனால் வாழ்க்கைத் துணை அமைந்து விட்ட பிறகும் ஒரு சிலர் இந்த டேட்டிங் ஆப்ஸ்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் ஒரு தவறான அறிகுறிதான். ஆகவே இதை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் இதை நன்கு ஆராய்ந்து அலசிட வேண்டும். இல்லையென்றால் எப்பொழுதும் இது உங்களுக்கு சிக்கல்தான்.

சமூக ஊடகங்களில் அவர்களின் முன்னாள் காதலர்/காதலியைப் பின்தொடரவும் (Follow their exes on social media):-

உங்கள் பாட்னர் சமூக ஊடகங்களில் தங்கள் முன்னாள் காதலர்/காதலியைப் பின்தொடர்ந்தால், நீங்கள் அதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பாட்னர் இன்னும் முன்னாள் காதலர்/காதலியுடன் நண்பர்களாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் உறவில் இருக்கலாம். அவர்களின் இடுகைகள் மற்றும் படங்களை விரும்புவது அல்லது கருத்து தெரிவிப்பது போன்றவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மைக்ரோ மோசடியில் (micro-cheating) சிக்கிகொள்வீர்கள். உங்கள் துணை எப்போது பார்த்தாலும் போனே கதியென இருக்கிறாரா? அப்படியானால் ஏதோ வில்லங்கம் இருக்கிறது. சமூக ஊடகங்களே கதியென்று இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றுவதற்கான முதல் அறிகுறி. எனவே இங்கு தான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.எப்போதும் போனில் எதையாவது செய்துகொண்டே இருப்பது (Occupied with their phone way too much):-

உங்கள் பாட்னர் வழக்கமான நேரத்தை விட அவர்களின் போன்களில் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், அதில் ஏதோ நிச்சயமாக தவறு இருக்கிறது. உங்கள் துணை அவர்களின் போனில் ஏதேனும் செயல்பாட்டில் மும்முரமாக இறங்கி இருந்தால் அதில் இருந்து அவரை விலக்கி உங்களிடம் நேரத்தை செலவழிப்பதற்கு முதலில் கேளுங்கள் அவர் மறுத்தால் உங்களின் இந்த செய்முறையை நீங்கள் கவனமாக கையாள வேண்டும். உங்கள் துணையின் கைப்பேசியை நீங்கள் எடுக்க முயற்சித்தால், அவர் கண்களில் டென்ஷனை காண முடிகிறதா? ஆம் எனில், அவர் உங்களிடம் மறைக்கும் ஏதோ ஒரு விஷயம் உள்ளது.

இந்த 5 ராசிக்காரர்கள் மன்னிப்பாங்க, ஆனால் மறக்கமாட்டார்களாம்..அவர்கள் யார் யார் தெரியுமா?

தவறான தகவல்தொடர்புகள் (Constant miscommunications):-

உங்கள் பார்ட்னருடன் அவர்களின் நடத்தை பற்றி உட்கார்ந்து பேசுவது என்பது ஒரு சரியான விருப்பமாகும், ஏனெனில் அவர்களின் நடத்தை சந்தேகத்திற்குரியது என்று நீங்கள் சொல்ல முயற்சிக்கும்போது விவாதம் பெரிதாகும் பின்னர் அவர்களின் உறவு முற்றிலும் முறிந்து போகும் அபாயமும் உள்ளது. அவர்களுடன் தனியாக உட்கார்ந்து நடந்ததை விளக்கமாக சொல்ல சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு சண்டையிட்டால் நிலைமை தலைகீழாக மாறும் வாய்ப்பு உள்ளது. அவரின் சோசியல் மீடியா டைம்லைனில் அவர் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் கூட அவர் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால் அவர் உங்களை ஒதுக்கி வைத்துள்ளார் என பொருள் தரும். இதுவும் கூட இயல்பானது அல்ல. ஆனால் இதை நீங்கள் தவறாமல் அவரிடம் செக் செய்துகொள்ளவேண்டும்.தனியாக இடங்களுக்குச் செல்லுங்கள் (Go to places alone):-

உங்கள் பாட்னர் வெளியில் செல்லும்போது குறிப்பாக திருமணம், பண்டிகை போன்ற இடங்களுக்கு தனியாக செல்கிறார் என்றால் அதை நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனெனில் உங்கள் துணை உங்களை மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க முயற்சிக்கிறாரா, என்பதை நீங்கள் அறிவது அவசியம் அப்படி அவர் செய்கிறார் என்றால் அவருடன் உட்கார்ந்து இந்த விஷயத்தைப் பற்றி தெளிவாகப் பேசுவது அவசியம். உங்கள் கூட்டாளருடன் கைகோர்த்து நடப்பது உங்களுக்கு பாதுகாப்பையும் அன்பையும் தருகிறது ஆகவே அதை செய்ய ஒருபோதும் தவறாதீர்கள்.

ஒரு புதிய உறவின் தொடக்கம் என்பது ஒருவருக்கொருவர் இடையில் உண்டாகும் புரிதலில் ஆரம்பிக்கிறது. 2 நபர் ஒரு புதிய உறவில் இணையும்போது ஒருவரைப் பற்றி மற்றொருவர் புரிந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையில் நம்பிக்கை பிறக்கிறது. இந்த நம்பிக்கை காலப்போக்கில் வளர்ந்து கண் மூடித்தனமான நம்பிக்கையாக மாறுகிறது. நீங்கள் கண்மூடித்தனமாக ஒரு நபர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையை அவர் உடைக்கும் போது நினைத்து பார்க்க முடியாதவையெல்லாம் நடக்கும். ஆகவே எப்போதும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: