• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Happy Teddy Day 2021 : இன்று Teddy day.. உங்கள் அன்புக்குரியவர்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சிப்படுத்தலாம்..

Happy Teddy Day 2021 : இன்று Teddy day.. உங்கள் அன்புக்குரியவர்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சிப்படுத்தலாம்..

டெட்டி டே

டெட்டி டே

சாக்லெட் டே, புரோபோஸ் டே, ரோஸ் டே போன்ற நாட்களுக்கு அடுத்தபடியாக நேசத்துக்குரியவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான நாள் டெட்டி டே.

  • Share this:
அன்பிற்குரியவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண்பதை தவிர வேறு எதில் நமக்கு மகிழ்ச்சி கிடைத்துவிடப்போகிறது. ஒரு மகிழ்ச்சியான நாளில் அவர்களுக்கு வித்தியாசமான சர்ப்ரைஸ் கொடுத்தால் இன்னும் கூடுதல் சந்தோஷம் நமக்கு ஏற்படும். பிப்ரவரி மாதம் என்றால் உடனே நமக்கு ஞாபகம் வருவது பிப்ரவரி 14 காதலர் தினம் தான். ஆனால், உங்கள் காதலரை மகிழ்ச்சிப்படுத்த அதற்கு முன்னதாக இன்னொரு நாளும் இருக்கிறது. அதுதான் பிப்ரவரி 10, டெட்டி டே (Teddy day).

சாக்லெட் டே, புரோபோஸ் டே, ரோஸ் டே போன்ற நாட்களுக்கு அடுத்தபடியாக நேசத்துக்குரியவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான நாள் டெட்டி டே. இந்த நாளில் நீங்கள் வித்தியாசமான டெட்டி பியர் ஒன்றை உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளித்து, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணலாம். அதிலும், உங்கள் எண்ணத்தில் உதிக்கும் தேன் சொட்டும் அன்பு வார்த்தைகளை எழுதி, அவர்களுக்கு பரிசளிக்கும்போது, உங்கள் அன்பில் மெழுகுபோல் உருகி மெய்சிலிர்த்துவிடுவார்கள். அத்தகைய பொன்னான நேரத்தை பெறுவதற்கு ஒரு நாளை நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்கு சரியான நாள் பிப்ரவரி 10.

மெசேஜ், ஸ்டேட்டஸ் மற்றும் வாழ்த்து அட்டைகள் (Graatings card) எல்லாவற்றிலும் டெட்டியை மெசேஜ்ஜாக பரிசளியுங்கள். ஏனென்றால், வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்களின் உற்ற நண்பாக, விளையாட்டு தோழனாக இருப்பது, மனம் விட்டு பேசக்கூடிய தோழியாக இருப்பது டெட்டி பியர்கள். அவற்றுடன் காதல் வார்த்தைகளை இணைத்து, பரிசாக கொடுத்தால், நிச்சயம் உங்கள் இருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக கூட அது இருக்கும்.



காதலர்களுக்கு மட்டுமல்லாது, காதலை சொல்ல முடியாமல் நீண்ட நாள் தவிப்பவர்களும் இந்த டெட்டி நாளில், சூப்பரான டெட்டி பியரை வாங்கி, உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு பரிசாக கொடுத்து இம்பரஸ் பண்ணலாம். அந்த டெட்டி பியர் மூலம் உங்களின் எண்ணத்தை தெரியப்படுத்தும்போது, உங்கள் மீதான அபிப்பிராயம், அன்பு அவர்களின் உள் மனதில் ஆழமாக பதிந்து, இம்பரஸ் ஆகிவிடுவார்கள்.

சிலர் டெட்டி பியரை வாங்கிவிடுவார்கள். ஆனால், அதில் என்னென்ன சுவையான வார்த்தைகளை சேர்ப்பது என்ன யோசித்துக்கொண்டே இருப்பார்கள். நாம் கொடுக்கும் டெட்டி பியர் மூலம் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என என்பதற்காக மூளையை கசக்கி பிழிவார்கள்.



உண்மையாக சொல்வதென்றால், எளிமையாக,ஓரிரு வார்த்தைகளில் உங்கள் எண்ணத்தை பளிச்சென்று புரிய வைக்கும்படி எளிமையாக எழுதி கொடுத்தால் போதும்., உங்களின் நேசத்துக்குரியவர் உங்களின் அன்பை புரிந்துகொள்வார். நண்பர்களுக்கும் டெட்டி பியரை பரிசாக கொடுத்து மகிழ்விக்கலாம்.

உதாரணமாக, * நான் இல்லாத தருணங்களின் இந்த டெட்டி பியர் என் அன்பின் வெற்றிடத்தை நிரப்பும், ஸ்வீட் ஹார்ட்! ஹேப்பி டெட்டி டே மை டியர் (Happy Teddy day my dear!)

* கியூட்டாக இருக்கும் டெட்டி பியர் போலவே நீயும் இருக்கிறாய் அன்பே! ஹேப்பி டெட்டி டே!

*டெட் டி பியர் எப்போதும் நம்முடைய பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்கும் சிறந்த நண்பராக இருக்கும். என்னைப்போலவே, ஹேப்பி டெட்டி பியர் டே தோழி!

இவை போன்று உங்களுக்கு மனதுக்கு பிடித்த சில வார்த்தைகளை உள்ளப்பூர்வமாக எழுதிக்கொடுத்து, இந்த டெட்டி பியர் டே நாளை, உங்கள் உறவின் மறக்க முடியாத, மகிழ்ச்சியான தருணங்களின் ஒன்றாக மாற்றிக்கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: