உறவுகளைப் புரிந்துகொள்ள துவங்குவோம்: வைரலாகும் ரம்ஜான் தின சிறப்பு வீடியோ!

இந்த கருத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தக் கூடிய வீடியோ.

news18
Updated: June 4, 2019, 8:46 PM IST
உறவுகளைப் புரிந்துகொள்ள துவங்குவோம்: வைரலாகும் ரம்ஜான் தின சிறப்பு வீடியோ!
ரம்ஜான் தின வாழ்த்துகள்
news18
Updated: June 4, 2019, 8:46 PM IST
ரம்ஜான் கொண்டாட்டம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ’காதி டிட்டர்ஜண்ட்’ யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

ரம்ஜான் என்றாலே குடும்பங்கள் இணைந்து, அன்பு செலுத்தி, சண்டைகளை மறந்து, கூட்டாக விருந்து உண்டு, கவலைகளை மறந்து கொண்டாடுவதுதான். இன்றைய குடும்ப அமைப்புகளில் இதுபோன்ற சூழலை பார்ப்பது அரிது. இதற்குக் காரணம், வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க தனிக் குடித்தனம் செல்வதுதான்.
பொதுவாக மகள்- மருமகள் மற்றும் மகன் - மருமகன் என்றாலே நிச்சயம் பாரபட்சங்கள் இருக்கும். அது உறவுகள் தொடங்கிய காலகட்டத்திலிருந்து இன்று வரை நீடித்திருக்கும் புரிந்துகொள்ள முடியாத உறவு.

இந்த உறவுகள் இன்று வரை எதிரும் புதிருமாக இருக்கக் காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள விரும்பாததே. இந்த பாரபட்சம் தகர்த்தெரியப்பட்டால் பல குடும்பங்கள் இன்று கூட்டுக் குடும்பங்களாக சண்டைகளின்றி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஒரு புரிதலை இந்நன்னாளிலிருந்து தொடங்குங்கள் என முன்னெடுக்கும் விதமாக இருக்கிறது இந்த வீடியோ.Loading...

இந்த வீடியோவில் மகன் மற்றும் மகளைப் பெற்ற பெற்றோர் ரம்ஜானை முன்னிட்டு இருவரின் வீடுகளுக்கும் செல்கின்றனர். முதலில் மகள் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு மருமகன் இருவருக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார். சமைத்துத் தருகிறார். மறுநாள் அணியவிருக்கும் ஆடையை மகளுக்கு அயன்ர் செய்து தருகிறார். இதையெல்லாம் பார்த்த அம்மா, தன் மகளை மருமகன் எவ்வளவு பாசமாகப் பார்த்துக்கொள்கிறார் என பெருமை கொள்கிறார்.

Eid Mubarak 2019: ரம்ஜானை சிறப்பிக்கும் உணவுகள் மற்றும் ரெசிபீஸ்!

அடுத்ததாக மகன் வீட்டிற்குச் செல்கின்றனர். மகன் கறை படிந்த சட்டையுடன் கதவைத் திறக்கிறார். என்ன கறை என்று அம்மா கேட்க கிட்சனில் வேலையாக இருந்தேன் என்கிறார். உடனே அம்மாவிற்குக் கோபம் வந்து அவள் இல்லையா என்கிறார். உடனே அப்பா, இதே மகளுக்கு மருமகன் செய்த போது பெருமையாகப் பேசினாய். மகன் மருமகளுக்குச் செய்யும்போது ஏன் திட்டுகிறாய். நல்ல கணவனாக இருக்கிறானே என்று பெருமையாகத்தானே நினைக்க வேண்டும் என்கிறார். பின் தன் தவறை உணர்ந்து சமாதானமடைந்த அம்மா மருமகளிடம் அன்பாகப் பேசுகிறார். வீடியோ நிறைவு பெறுகிறது.எனவே... இந்தக் கருத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தக் கூடிய வீடியோ. அனைவரும் இனி உறவுகளைப் புரிந்துகொள்ள இந்த நல்ல நாளிலிருந்து முடிவெடுப்போம்..! ரம்ஜான் தின வாழ்த்துகள்!

இதையும் படிக்க :

Eid Mubarak 2019: ரம்ஜானை சிறப்பிக்கும் உணவுகள் மற்றும் ரெசிபீஸ்!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...