Happy friendship day 2020 : ஊரடங்கு, சமூக இடைவெளி காலத்திலும் மூழ்காத ஷிப் ஃபிரெண்ட்ஷிப் : எப்படி தெரியுமா..?

ஊரடங்கு, யாரையும் சந்திக்க முடியாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் , வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என எத்தனை கட்டுப்பாடுகள். இதையெல்லாம் அசால்டாகக் கடந்ததற்கு ஒரே காரணம் நண்பர்கள் மட்டும்தான்.

Happy friendship day 2020 : ஊரடங்கு, சமூக இடைவெளி காலத்திலும் மூழ்காத ஷிப் ஃபிரெண்ட்ஷிப் : எப்படி தெரியுமா..?
ஃபிரென்ட்ஷிப்
  • Share this:
உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்திருந்தன. அடுத்து என்ன செய்யப் போகிறோம்..வாழ்வா சாவா என நினைத்து பயந்து கொண்டிருந்தன. ஆனால் அந்த தருணத்திலும் இளைஞர்கள் பட்டாளம் மட்டும் பப்ஜி, லூடோ கிங் என மொபைல் கேம்ஸ் என்ற உலகத்தில் மூழ்கியிருந்தன. இதற்கு ஒரே காரணம் ஃபிரெண்ட்ஷிப்

இந்த கொரோனா பயம் என்பது அவர்களுக்கும் இல்லாமல் இல்லை. ஆனால் அதை மடைமாற்ற இளைஞர்கள் கையிலெடுத்த விஷயம்தான் இந்த மொபைல் கேம்ஸ்.

ஊரடங்கு, யாரையும் சந்திக்க முடியாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் , வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என எத்தனை கட்டுப்பாடுகள். இதையெல்லாம் அசால்ட்டாகக் கடந்ததற்கு ஒரே காரணம் நண்பர்கள் மட்டும்தான்.


இந்த லாக்டவுனில் விட்டுப்போன , பேச நேரமில்லாத நட்புகள் கூட இணைந்தன என்றே சொல்லலாம். இதனால் அவர்களின் நட்பு வட்டாரமும் அதிகரித்துள்ளது. நேருக்கு நேர் சந்தித்து பேசியிருந்தால் கூட இவர்களின் நட்பின் ஆழத்தை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்த சமூக இடைவெளி என்பதுதான் அவர்களின் உறவின் ஆழத்தை உணர்த்தியுள்ளது.



இதுகுறித்து ஐடி ஊழியரான குரு என்பவரிடம் கேட்டபோது, “வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது கல்லூரி நண்பர்கள், பள்ளி நண்பர்களிடம் பேச நேரமிருக்காது. வேலை, அலுவலகத்தின் சக ஊழியர்கள் இவர்களுடனான பேச்சுகள்தான் அதிகம் இருக்கும். இந்த ஊரடங்கில் அலுவலகத்தையே மறந்து மீண்டும் பள்ளி, கல்லூரி பருவத்திற்கு சென்ற அனுபவம் கிடைத்தது. அவர்களுடன் குழுவாக வீடியோ காலில் பேசுவேன். கேம்ஸ் விளையாடுவேன்.இதனால் இந்த ஊரடங்கு மிகவும் மகிழ்ச்சியாகக் கடந்தது. தற்போது மீண்டும் வேலைக்குக் கிளம்பிவிட்டோம். இருப்பினும் வாட்ஸப்பில் குழு உருவாக்கி அதில் அனைவரும் இணைப்பில் உள்ளோம் என தன் லாக்டவுன் அனுபவத்தை பகிர்கிறார்.

அதேபோல் லாஜிஸ்டிக்ஸில் பணிபுரியும் கௌசல்யா என்பவரிடம் கேட்டபோது “ இந்த லாக்டவுனில் ஏற்றுமதி இறக்குமதி இல்லாததால் வேலை இல்லை. வீட்டில்தான் முற்றிலும் நேரம் கழிந்தது. இந்த லாக்டவுனில் கேம்ஸ் மட்டும்தான் நேரத்தைக் கழிக்க உதவியது. கேம்ஸ் என்பதைவிட நண்பர்களுடன் பேசிக்கொண்டே கேம் ஆடுவதும், பள்ளி நாட்களில் அவர்களுடன் எப்படி பேசுவோமோ அந்த உரையாடல்கள் கொஞ்சமும் மாறாமல் பேசிக்கொண்டும், திட்டிக்கொண்டும் விளையாடினோம்.



மற்ற நேரங்களில் பழகும் நண்பர்களுடன் ஃபார்மலாகத்தான் பேச முடியும். சௌகரியமாக இருக்காது. இதே பள்ளி, கல்லூரி எனில் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம். சண்டையிடலாம். அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ளலாம். இதனால் மீண்டும் அந்த நாட்களுக்குள் சென்றதைப் போல் இருந்தது” என்கிறார்.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த லாக்டவுன் என்பது பல பழைய விஷயங்களைக் கிளறியுள்ளது. குறிப்பாக நட்பு, கணவன் மனைவி, அம்மா , அப்பா என பல உறவுகளின் ஆழத்தை உணர வைத்துள்ளது என்றே சொல்லலாம். பொருளாதார அடிப்படையில் மந்தநிலையை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த உறவுகளால் உண்டாகியிருக்கும் மன மாற்றம் ஒவ்வொரு வருடமும் இப்படியான லாக்டவுனை எதிர்ப்பார்க்கிறோம் என்கின்றனர். ஏனெனில் இது உறவுகளை கையாள்வது மட்டுமன்றி வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மன மகிழ்ச்சியை உண்டாக்குகிறது என்கிறார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading