திருமண வாழ்க்கை என்பது பல ஏற்ற, இறக்கங்களை உள்ளடக்கியது. அவ்வபோது கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் உருவாகுவது சகஜமான விஷயம் தான். இருப்பினும், போதுமான அன்பு, புரிந்துணர்வு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை இல்லை என்றால் திருமண வாழ்க்கை போர் அடிக்கத் தொடங்கி விடும்.
அதே சமயம், சண்டையடித்துக் கொள்ளும் தம்பதியருக்கு இடையே பிணைப்பை உருவாக்கும் சில விஷயங்களும் இருக்கின்றன. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிறது என்றால் நீங்களும் அவற்றை கடைபிடிக்கிறீர்கள் என்றே அர்த்தம். அப்படி இல்லாவிட்டாலும் இனி கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆண்டுதோறும் சுற்றுலா செல்வது
உங்கள் இருவருடைய வாழ்க்கை எந்த அளவுக்கு பிசியானது என்றாலும் சரி. வேலைப் பளு எவ்வளவு அதிகம் என்றாலும் திட்டமிட்ட சுற்றுலா ஒன்றை முன்னெடுக்க மறக்காதீர்கள். சுற்றுலா செல்லும் சமயங்களில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவும், மகிழ்ச்சியாக இருக்கவும், அரட்டை அடிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் புத்தம்புது லொகேஷனில் இருவருக்கும் இடையே இனம் புரியாத காதல் மலரத் தொடங்கும்.
நிதி சார்ந்த விஷயங்களை விவாதிக்கவும்
நிதி சார்ந்த பிரச்சினைகள் தான் நிறைய தம்பதியரின் பிரிவுக்கு காரணமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் எந்தவொரு முதலீடும் உங்கள் பார்ட்னருக்கு தெரியாமல் இருக்கக் கூடாது. இது என்னுடைய சம்பாத்தியம் என்று பிரித்து பேசக் கூடாது. நிதி சார்ந்த இலக்குகள் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
உங்கள் செக்ஸ் வாழ்க்கை செம்ம கிக்காக இருக்க இதை முயற்சி செஞ்சு பாருங்க..!
செக்ஸ் வாழ்க்கை
தம்பதியர் இருவரும் இணைந்திருக்கும் சமயங்கள் மிகவும் சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். உடலும், மனமும் ஒன்றிணைந்து இருவரும் ஒன்று சேரும்போது, எல்லை கடந்த காதல் உணர்வை அனுபவிக்க முடியும்.
சேர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்
டிவி நிகழ்ச்சிகளில் உங்கள் இருவருக்கும் பிடித்தமானது எது என்பதை தேர்வு செய்து, அதை நீங்கள் இணைந்து பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் சமயங்களில் ஒருவர் தோள் மீது மற்றொருவர் சாய்ந்து பார்ப்பதும், பிடித்தமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே பார்ப்பதும் புதிய உற்சாகத்தை கொடுக்கும்.
வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்
வீடு சுத்தமாக இருப்பதற்கும், ஒற்றுமையான வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனத் தோன்றும். ஆனால், இதற்கென தனி நேரம் ஒதுக்கி, வீடு சுத்தம் செய்யும் வேலையை இருவரும் பகிர்ந்து செய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள், பொறாமை ஆகியவற்றை கடந்து செல்வதற்கான வாய்ப்பு இதில் கிடைக்கும். குறிப்பாக, சுத்தமாக இருக்கின்ற, அலங்கரிக்கப்பட்ட வீட்டை பார்க்கும்போது இருவர் மனதிலும் அமைதி தோன்றும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage Life, Relationship Tips