• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? உங்களுக்கான ஒரு கைட்லைன் பதிவு!

தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? உங்களுக்கான ஒரு கைட்லைன் பதிவு!

உங்களை எப்போதும் நீங்கள் பிஸியாக வைத்திருங்கள். அதுவே தேவையில்லாத பல மன அழுத்தங்களை குறைக்கும்.

  • Share this:
தனிமை என்பது எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதோவொரு சமயத்தில் நடப்பதுதான். நாம் மிகவும் நம்பிய ஒருவர் நம்மை ஏமாற்றும் போதோ அல்லது நம்முடைய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத போதோ உறவில் விரிசல் ஏற்படுகிறது. இது தனிமைக்கு கொண்டு செல்கிறது. தனிமையில் ஒருவர் என்ன யோசிக்கிறார்,எதை பற்றி நினைக்கிறார் என எதையுமே கண்டுபிடிக்க இயலாது. ஒவ்வொருவரும் பல்வேறு வகையான தனிமையில் இருக்கிறார்கள்.

தனியாக இருப்பதற்கும், தனிமையில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. சிலர் தங்களைச் சுற்றி நிறைய மக்கள் இருந்தும் தாங்கள் தனிமையாக இருப்பதாகவே உணர்வார்கள். உங்கள் நண்பர் தனிமையினால் பாதிக்கப்பட்டால் முதலில் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எதை செய்தாலும் மனதளவில் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேசுவதற்கு அழுத்தம் தர வேண்டாம்.

காதல் தோல்வி அடைந்தவர்களிடம் அதுகுறித்து கேட்க கூடாது. அது பழைய நினைவுகளை மீண்டும் அவர்களுக்கு நியாபகப்படுத்தும். அவர்களின் தனிமையை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான தீர்வுகளை தரலாம். மீண்டும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இது உதவலாம். உதாரணமாக இரு காதலர்கள் இடையே யாருக்காவது ஒருவருக்கு ஈகோ பிரச்சனை ஏற்படுவதே தனிமைக்கு கொண்டு சென்று விடும்.



அவன் பேசட்டும் முதலில், இல்லை அவள் பேசட்டும் என பிரச்சனை தோன்றி பூதாகரமாக மாறிவிடும். ஈகோ இருந்தால் முதலில் அதை ஒழித்து விடுங்கள்.அதுவே பல பிரச்சனைகளுக்கு முதல் காரணம்.இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து வெளியேறுவது மிக முக்கியமான விஷயமாகும். உங்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள பிற வேளைகளில் மூழ்கி விடுங்கள்.

உங்களை எப்போதும் நீங்கள் பிஸியாக வைத்திருங்கள். அதுவே தேவையில்லாத பல மன அழுத்தங்களை குறைக்கும். மற்ற நோய்களை போலவே இதுவும் ‘மரபியல்’ காரணங்களால் ஏற்படலாம்.காதல் தோல்வி, திருமணம் ஆகாதவர்கள் என பெரும்பாலானோர் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தை பருவத்திலோ, இளம் பருவத்திலோ என எந்த பருவத்திலும் ஏற்படலாம். உறவுகளின் பிரிவே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Must Read | இனி மழைக்காலம்… உங்க கார பத்திரமா பாத்துங்கோங்க!! இதோ சில டிப்ஸ்..!

மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதை தடுக்கிறது. இதில் இருந்து வெளியே வர நாம் பல்வேறு முயற்சிகளை செய்ய வேண்டும். பிரிந்து போன உறவு மீண்டும் வருதல் அல்லது அவர்களின் இடத்தை மற்றொருவர் நிரப்புதல் என பல சூழ்நிலைகள் இருக்கிறது.தனிமை என்பது வெறுமையான சூழல் இல்ல.அதுவும் ஒரு வகையான இனிமை தான்.

மற்றவர்களுடன் சகஜமாக பேச பழக வேண்டும். உங்களுக்கு உங்கள் மீது உள்ள சந்தேகங்களை நீக்க வேண்டும். உதாரணமாக உங்கள் மீதான சந்தேகங்களை பிறரிடம் கூறி அதற்கான தீர்வுகள் என்ன என்று கேட்டு அதனை தீர்க்க வேண்டும். மனதில் ஓடும் எல்லா விதமான கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நபரிடமே கேட்டு, அதற்கான பதிலை வாங்கி விட வேண்டும். ஏனென்றால் பல்வேறு கேள்விகள் கேட்காமல் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு இருப்பதாலேயே பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகிறது. மருத்துவரிடம் சென்று சரியான ஆலோசனையை பெற்று இதில் இருந்து மீளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: