உலக பெற்றோர்கள் தினம் இன்று | வயதான பின்னர் பெற்றோருக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன தெரியுமா ?

இளமையில் தனிமை என்பது அனைவரும் விரும்பி ஓடுவது. அதுவே முதுமையில் கிடைத்தால் அதை விட வறுமை வேறெதுவும் இல்லை.

உலக பெற்றோர்கள் தினம் இன்று | வயதான பின்னர் பெற்றோருக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன தெரியுமா ?
இளமையில் தனிமை என்பது அனைவரும் விரும்பி ஓடுவது. அதுவே முதுமையில் கிடைத்தால் அதை விட வறுமை வேறெதுவும் இல்லை.
  • Share this:
உலக பெற்றோர் தினம் தினம் இன்று. தினம் தினம் அன்றாடம் உழைத்து குழந்தைகளின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு வயதான பின்னர் கிடைக்கும் பரிசு தனிமை. இளமையில் தனிமை என்பது அனைவரும் விரும்பி ஓடுவது. அதுவே முதுமையில் கிடைத்தால் அதை விட வறுமை வேறெதுவும் இல்லை.


பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு குழந்தைகள் வேறேதும் செய்யத்தேவையில்லை. உங்களுக்கான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி தினமும் அவர்களுடன் உறவாடுகள். அவர்களுக்கான தனிமை எண்ணம் வராமல் இருக்க நான் உங்களுடன் உள்ளேன் என்பதை எப்போதும் தெரிவியுங்கள்.


சிறு வயதில் பெற்றோரின் பேச்சை கேட்டு நடந்த நாம் நமக்கென சம்பாதிக்க தொடங்கியதும், வீட்டில் முடிவெடுக்கும் சில விஷயங்களில் சுயநலமாக பெற்றோர் சம்மதம் இன்றி எடுக்க பழகுவோம். எப்போதும் வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் வீட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் அவர்களின் பேச்சை கேட்டு நடப்பது பெற்றோருக்கு நாம் தரும் மரியாதையாக பார்க்கப்படும்.வயதான பெற்றோருக்கு இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சனை, 1. பணம், 2. அன்பு. பணம் என்பது அவர்களுக்கு தேவை படும் பட்சத்தில் குழந்தைகள் என்றாலும் கேட்க தயங்குவர். இவ்விரண்டும் வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு தாராளமாக எளிதாக கிடைக்க செய்வது குழந்தைகளின் கடமை.


வயதான காலத்தில் வீட்டில் இருந்து மன அழுத்தம் வரமால் இருக்க பெற்றோரை மகிழ்விக்க, அவர்களின் பிறந்த தினம், திருமண தினம் என வீட்டில் சிறு சிறு நிகழ்வுகளையும் அவர்ளுடன் இணைந்து கொண்டாடலாம்.
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading