Children's Day: கேட்ஜெட் இல்லா ஒரு மணி நேரம்.. குழந்தைகளோடு எப்படி செலவழிப்பது..?

குழந்தை மற்றும் பெற்றோருக்கான உறவை பலப்படுத்தவே இந்த முயற்சி..!

Children's Day: கேட்ஜெட் இல்லா ஒரு மணி நேரம்.. குழந்தைகளோடு எப்படி செலவழிப்பது..?
கேட்ஜெட் இல்லா ஒரு மணி நேரம்
  • News18
  • Last Updated: November 13, 2019, 7:36 PM IST
  • Share this:
குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளியை உருவாக்கும் இந்த கேட்ஜெட்டுகள் நவீன காலத்து சாபம் எனலாம். இதன் பயன்பாடு குழந்தை மற்றும் பெற்றோருக்கான உறவையே சிதைத்துவிட்டது.

எனவேதான் அரசாங்கமே இதை சரிகட்ட குழந்தைகள் தினத்தன்று கேட்ஜெட் இல்லாமல் ஒரு மணி நேரம் குழந்தைகளோடு விளையாட அறிவுறுத்தியுள்ளது. அப்படி இந்த ஒரு மணி நேர முயற்சியில் ஏதாவது ஒரு பெற்றோர் கேட்ஜெட் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்தாலே அது இந்த முயற்சியின் வெற்றியே..!

நாளை 7.30 மணி முதல் 8.30 மணி வரை எந்தவித கேட்ஜெட்டுகளும் பயன்படுத்தாமல் முற்றிலும் குழந்தைகளுடன் மட்டுமே விளையாடி ஒரு மணி நேரத்தை செலவழிக்க வேண்டும். எப்படி அந்த ஒரு மணி நேரத்தை பொழுதுபோக்கலாம் என்று பார்க்கலாம்.


முதலில் உங்களுடைய செல்ஃபோன், டிவி , கேட்ஜெட்டுகளை தனியாக வைத்துவிடுங்கள். உங்கள் குழந்தையின் கேட்ஜெட்டுகளையும் தனியாக வையுங்கள்.

உங்கள் நண்பர்கள் அல்லது குடியிருப்புப் பகுதியில் உள்ள மற்ற பெற்றொரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இணைத்துக்கொள்ளுங்கள். இதனால் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நகைச்சுவையான விளையாட்டுகள் அதாவது கேட்ஜெட்டுகள் இல்லாத விளையாட்டுகளாக இருக்க வேண்டும். நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து விளையாடினாலே ஆர்வத்தோடு விளையாடுவார்கள். அப்படி எந்தெந்த விளையாட்டுகள் இருக்கின்றன என்று பட்டியலிடுங்கள். அப்போதுதான் இடைவேளை இல்லாமல் ஃபன் பண்ண முடியும்.

பாட்டு, இசை, நடனம் என உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்துவது, குழந்தையின் திறமையை வெளிப்படுத்துவது என கலகலப்பான நேரமாக மாற்றுங்கள்.

இப்படி இந்த ஒரு மணி நேர கேட்ஜெட் இல்லா நேரத்தை வாரத்திற்கு ஒரு முறையேனும் பின்பற்றுவது உங்களுக்கும் குழந்தைக்குமான இடைவெளி நீங்கி நல்ல உறவாக மேம்படும். இதனால் உங்களுக்கும் ஸ்ட்ரெஸ் ஃபிரீ, ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும். குழந்தைகளும் தனிமையை உணர மாட்டார்கள். ஆக்டிவாக இருப்பார்கள்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: November 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading