முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தம்பதியருக்குள் நல்லுறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும்..? நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள்

தம்பதியருக்குள் நல்லுறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும்..? நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள்

ஆண், பெண் உறவுக்குள் சண்டை இல்லாத வாழ்க்கை இருக்க முடியாது. ஆனால், எதற்காக சண்டையிடுகிறோம், சண்டையிடும் போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது. குறிப்பாக, சண்டை என்பது அர்த்தம் உள்ளதாகவும், அதன் மூலமாக உங்கள் பார்ட்னர் எதோ ஒன்றை கற்றுக் கொள்வதாகவும் இருக்க வேண்டும்.

ஆண், பெண் உறவுக்குள் சண்டை இல்லாத வாழ்க்கை இருக்க முடியாது. ஆனால், எதற்காக சண்டையிடுகிறோம், சண்டையிடும் போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது. குறிப்பாக, சண்டை என்பது அர்த்தம் உள்ளதாகவும், அதன் மூலமாக உங்கள் பார்ட்னர் எதோ ஒன்றை கற்றுக் கொள்வதாகவும் இருக்க வேண்டும்.

மூளையில் நடக்கும் பயோகெமிக்கல் மாற்றங்கள் காரணமாக, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நம் அன்புரியவர்களிடம் நிறைய குறைபாடுகளும், அவர்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகளும் நமக்குள் தோன்றும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மனிதர்களுக்கு இடையேயான நல்லுறவு வளர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். வலுவான பந்தத்தை கட்டமைக்க ஏராளமான முயற்சிகள் தேவைப்படும். குறிப்பாக, நமக்குள் காதல் ஏற்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமான உணர்வு ஆகும். ஆனால், மூளையில் நடக்கும் பயோகெமிக்கல் மாற்றங்கள் காரணமாக, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நம் அன்புரியவர்களிடம் நிறைய குறைபாடுகளும், அவர்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகளும் நமக்குள் தோன்றும். சுருக்கமாக சொல்வது என்றால், பழக, பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழியை நினைவில் கொள்ளலாம்.

ஆனால், ஒரு நல்லுறவு அமைய வேண்டும் என்றால், நாம் நமது பார்ட்னரை ஒவ்வொரு நாளும் நேசிக்க வேண்டும். அவர்களது நிறை, குறைகளை, குணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆண், பெண் இடையிலான நல்லுறவை வலுப்படுத்த சில அடிப்படை குணாதிசயங்கள் அவசியம் என்று மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்பதும், ஏற்காமல் போவதும்

மனிதர்களுக்கு இடையேயான பந்தம் எல்லா சமயத்தில் ஒத்த கருத்துடன் நீடித்து விடாது. எண்ணற்ற சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். ஆனால், நம் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு கிடைக்காத போது மோதல் நிகழுகிறது. ஆகவே, அனைத்து சமயத்திலும் நம்முடைய கருத்துக்களை முன்வைப்பதற்கும், நம் பார்ட்னரின் கருத்துக்களை முன்வைப்பதற்கும் இருவருக்கும் இடையே பாதுகாப்பான வரைமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடைமுறைக்கு உகந்த எதிர்ப்பார்ப்புகள்

நம் அன்புக்கு உரியவர் தானே என்ற உரிமையில், நமது பார்ட்னரிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளை நாம் முன்வைக்கிறோம். அதில் சில எதிர்ப்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கின்றன. உணர்வுப்பூர்வமாக, உடல் ரீதியாக ஒரு நபர் எல்லா சமயத்திலும் நம்மை முழுமையாக திருப்தி செய்து விட முடியாது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். நடைமுறைக்கு எது உகந்ததோ, அவர்களது திறனுக்கு எது முடியுமோ அதை மட்டும் எதிர்பார்த்தால், நமக்கான திருப்தி கிடைக்கும். அது இருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

நட்பில் ஏற்படும் பொறாமையை ஹேண்டில் செய்வது எப்படி?

உணர்ச்சிகரமான பந்தம் உருவாக்குதல்

நமது பார்ட்னரிடம் நாம் எல்லா நேரத்திலும் ‘நீயுண்டு, நான் உண்டு’ என்று நடந்து கொள்ள வேண்டியதில்லை. இருவருக்கும் ஃப்ரீ டைம் கிடைக்கும்போது வேடிக்கையாக பேசுவதும், விளையாட்டுத் தனமாக நடந்து கொள்வதும் இருவருக்கும் இடையேயான பந்தம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். அதே சமயம், இந்த விளையாட்டுகள் விபரீதமாக மாறிவிடக் கூடாது என்ற எல்லைக் கோட்டை வகுத்து செயல்பட வேண்டும்.

ஆறுதலாக இருப்பது

நம் பார்ட்னர் மனச் சோர்வு அல்லது உடல் சோர்வு அடையும் சமயத்தில் நாம் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். குறிப்பாக, அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக அவர்கள் மனம் நொந்து போய் இருந்தால் நமது ஆறுதல் மிகுந்த வார்த்தைகள் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும்.

First published:

Tags: Love, Marriage Life, Relationship Tips