Home /News /lifestyle /

ஒருவரை மன்னிக்க போராடுகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கு உதவலாம்..!

ஒருவரை மன்னிக்க போராடுகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கு உதவலாம்..!

மன்னிப்பு

மன்னிப்பு

உண்மையான மன்னிப்பு என்பது அனைத்து எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட வேண்டும். அதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட முடிவை எதிர்பார்க்க முடியாது.

ஒருவரை மன்னிப்பது என்பது ஒரு கடினமான விஷயமாகும். மன்னிப்பு கேட்பவன் மனுஷன் மன்னிக்க தெரிந்தவன் பெரிய மனிதன் என்று விருமாண்டி படத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறுவது போல, நமக்கு ஒருசிலர் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்வதில் பெரிய போராட்டத்தை சந்திக்கிறோம். குறிப்பாக வாழ்க்கை ஏற்கனவே உங்களுக்கு மோசமான அனுபவங்களை கொடுத்திருக்கும் போது பிறரை மன்னிப்பது என்பது எளிதானதாக இருப்பதில்லை.

ஆக்ஸ்போர்டு அகராதியில் கூட மன்னிப்பு என்ற வார்த்தைக்கு "மன்னிக்கும் அல்லது மன்னிக்கப்படும் செயல் அல்லது செயல்முறை" என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தெரிந்தோ தெரியாமலோ மற்றொருவரை காயப்படுத்தும் போது அல்லது தீங்கு விளைவிக்கும் போது அந்த தவறை உணர்ந்து குறிப்பிட்ட நபரிடம் மன்னிப்பு கேட்பார்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மன்னித்துவிடும் மனப்பான்மையில் இருப்பதில்லை. ஆனால், ஒருவரை மன்னிப்பதால் கிடைக்கும் உணர்வினை குறித்து ஒருவர் பேசியுள்ளார். ஒரு சக்திவாய்ந்த TEDx என்ற பேச்சரங்கத்தில் பேசிய, எழுத்தாளரும் ஸ்டோரிடெலருமான சாரா மொன்டானா தனது குடும்பத்தில் இரண்டு மரணங்களுக்கு காரணமான ஒருவரை மன்னிக்க முயற்சிக்கும் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த நபர் அவரது தாய் மற்றும் சகோதரரை கொலை செய்து விட்டார். அது அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது.

https://youtu.be/mEK2pIiZ2I0

இருப்பினும் ஒரு மனிதனுக்கு ஏற்படும் சில மோசமான சூழ்நிலைகள் மற்றும் அதன் வெவ்வேறு விதங்களை பற்றி அவர் கற்பனை செய்து பார்த்ததாக கூறினார். அதன் பின்னர் சாரா மன்னிப்பின் பாதையில் செல்ல முடிவு செய்ய நினைத்ததாக கூறினார். அப்போது, தனது குடும்பத்தை கொன்ற கொடூரன் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

நீங்கள் ஒருதலை காதல் செய்கிறீர்களா என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்..

ஆனால் அவளால் அந்த நபரை காப்பாற்ற எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சிறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கையை உணர்ந்தபோது, ​​தன் குடும்பத்தை கொன்றவன் எவ்வளவு துன்பப்படுகிறான் என்பதை உணர்ந்ததாகவும் சாரா தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது குடும்பத்தை அழித்தவரை நான் ஏன் மன்னிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த சாரா, ஏதோ என்னைத் தூண்டியது என்று கூறினார். மன்னிப்பைத் தேடுவதை நோக்கித் தூண்டியது என்ன என்பதைப் பற்றி அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, இது மூன்று காரணங்களுக்காக இருந்தது. நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன்.



மற்றவர்களை மகிழ்விப்பதை நான் விரும்புகிறேன். மேலும் பாதிக்கப்படக்கூடிய, கோபமான, குழப்பமான, முட்டாள்தனத்தை நான் வெறுக்கிறேன். ஆனால் மன்னிப்பு என்பது ஒரு வலிமையான சக்தியாக மாறிவிடும். இதனை என்னும் போது மேற்கண்ட காரணங்கள் எதுவும் மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு வலுவாக இருக்காது." என்று கூறினார்.

மேலும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்தாவது, “காதலைப் போலவே. உங்கள் உந்துதல் சுயநலமாக இருந்தால், குணப்படுத்துவது போன்ற ஒரு நல்ல சுயநலம் கூட, இறக்கும் நட்சத்திரத்தைப் போல தானாகவே சரிந்துவிடும்" என்று விளக்கினார்.

கனவுகள் பற்றி அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 சுவாரஸ்யமான விஷயங்கள்..

பின்னர் மேலும் அவர் கூறியதாவது, "அப்படியானால் ஏன் அதை செய்ய வேண்டும்? ஏன் மன்னிக்க வேண்டும்? சுயநலத்தோடு நாம் ஒருவரை மன்னித்தால் அது உங்களை குணப்படுத்தாது; அது உங்களையோ மற்ற நபரையோ காப்பாற்றாது; அது உங்களை ஒரு நல்ல நபராக மாற்றாது. ஏன்னென்றால் மன்னிப்பு உங்களை விடுவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.



"உண்மையான மன்னிப்பு என்பது அனைத்து எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட வேண்டும். அதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட முடிவை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் பதிலளிப்பதை நீங்கள் ஏற்க முடியாது. அதன் மறுபக்கத்தில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. மன்னிப்பு உண்மையில் தந்திரமானது. நாம் குணமடைந்தால் மட்டுமே சரியாகப் பயன்படுத்தப்படும் கருவிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்” என்று சாரா வலியுறுத்தினார்.

துக்கம், வலி, கோபம், அதிர்ச்சி போன்றவை எல்லாவற்றையும் விட்டுவிட நீங்கள் தயாராக இருந்தால், மன்னிப்பது எப்போதும் உங்களை நிரூபிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று அவர் கூறி முடித்தார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Forgiveness, Relationship Tips

அடுத்த செய்தி