காதலில் இந்த ஐந்து நிலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் பிரேக் அப்தான்

எதிர்மறை சிந்தனைகள் உதிக்கத் துவங்கும்போதுதான் காதல் முறிவிற்கான விதை விதைக்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: June 26, 2019, 3:49 PM IST
காதலில் இந்த ஐந்து நிலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் பிரேக் அப்தான்
காதல் முறிவு
Web Desk | news18
Updated: June 26, 2019, 3:49 PM IST
ரொமாண்டிக் காதல் வாழ்க்கை திடீரென முறிவிற்கு வருகிறதெனில் அது எளிதில் நிகழ்வதல்ல. அதேபோல் முறிவை திடீரெனக் காதலர்கள் முடிவெடுத்து விடுவதுமில்லை. சில படிகளைக் கடந்த பின்புதான் காதல் முறிவிற்கு வருகின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

டென்னஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் காதல் முறிவிற்கு ஐந்து படிகள் இருக்கின்றன என்றும் அதை இன்றைய இளைஞர்களிடம் செய்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

முதல் நிலை என்பது காதல் மலர்ந்த பருவம். அந்த சமயத்தில் காதலர்களுக்குள் பிரேக் அப் என்கிற வார்த்தையே இருக்காது. அதைக் கிட்டத்தட்ட ஹனிமூன் பருவம் என்கிறது அந்த ஆராய்ச்சி.
இரண்டாம் நிலையில் நம் காதல் சிறப்பாகத்தான் செல்கிறதா என்ற கேள்வி எழும். துணையிடம் குறை கண்டுபிடித்துச் சண்டையிடத் தோன்றும். காதலில் குறை இருப்பது போல் தோன்றும்.

மூன்றாம் நிலையில் காதலில் காதலனுக்கோ காதலிக்கோ பிரேக் அப் என்னும் வார்த்தை சிந்தனையில் உதிக்கும். பின் அதன் சிந்தனை ஆழமாகச் சென்று காதல் முறிவு சிந்தனைகள் அதிகரிக்கும். இதைச் சொல்லலாமா வேண்டாமா என்ற எண்ணத்திலேயே அந்த காதலில் முழுமையாக இருக்க மாட்டார்கள். துணையை அடிக்கடி தவிர்க்க நினைப்பார்கள்.அடிக்கடி சண்டை முட்டிக்கொள்ளும்.

Loading...

நான்காம் நிலையில் முழுமையாக பிரேக் அப் நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் துணையிடமிருந்து வரும் ஃபோன் கால்களை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். பார்ப்பதைத் தவிர்ப்பார்கள். தன் வெறுப்பை வெளிப்படையாகக் காண்பிக்கத் தொடங்குவார்கள்.இறுதி நிலையாக இருவரும் பரஸ்பரமாகக் காதல் முறிவிற்கு வந்துவிடுவார்கள். தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட காதல் பரிசுகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அந்த இடத்தில் தவறுகளைச் சரி செய்து இணைய நினைக்காவிட்டால் இறுதிவரை அவர்களுக்குள் காதல் மலராது.

இவ்வாறாக அந்த ஆராய்ச்சி ஐந்து நிலைகளை விளக்குகிறது. மேலும் இதிலிருந்து தெளிவாவது என்னவெனில் எதிர்மறை சிந்தனைகள் உதிக்கத் துவங்கும்போதுதான் காதல் முறிவிற்கான விதை விதைக்கப்படுகிறது. அந்த நொடியே இருவரும் பேசி தீர்வு கண்டுவிட்டால் முறிவு நிலைக்குச் செல்லமாட்டார்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...