Home /News /lifestyle /

முதல் முறை உடலுறவு கொள்வோருக்கு உண்டாகும் பயங்களும்... அதை போக்கும் வழிகளும்...

முதல் முறை உடலுறவு கொள்வோருக்கு உண்டாகும் பயங்களும்... அதை போக்கும் வழிகளும்...

பெண்கள் ஆரோக்கியம்

பெண்கள் ஆரோக்கியம்

First-time sex fear : செக்ஸ் உறவுக்கு தயாராகாத பலரும் அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆபாசப் படங்களை நாடுகின்றனர். ஆபாசப்படங்கள் முற்றிலும் சித்தரிக்கப்பட்ட நாடகம். அது காண்பவருக்கு காம உணர்ச்சியை அதிகரிக்க அதிக உணர்ச்சியுடன் சத்தமிடுவதும், இன்பம் காண்பதுபோல் நடிக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
கேள்வி : நான் கன்னி தன்மையை இன்னும் இழக்கவில்லை. எனக்கு செக்ஸ் பற்றி முழுமையாக தெரியாது. முதல் உடலுறவு பற்றிய பயம் அதிகமாக உள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது..?

பதில் : முதலில் மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள்.... இப்படி பயப்படுவதில் நீங்கள் முதல் நபர் கிடையாது. பலர் இந்த நிலையைக் கடந்துதான் வந்திருக்கின்றனர். இதில் ஆண் , பெண் பாரபட்சமே இல்லை. செக்ஸில் நல்லது , கெட்டது என எதுவுமே கிடையாது. ஒரு காட்டுக்குள் ஆண் , பெண் என இரு குழந்தைகளை தனியாக விடுகிறீர்கள். அவர்கள் வளர்ந்து பருவநிலையை அடையும்போது ஹார்மோன் தூண்டுதல்களால் செக்ஸ் செய்ய தானாக ஈர்க்கப்படுவார்கள்.

உடல் அதற்கு ஏற்ப இசைந்துகொடுக்கும். இதற்கு எந்த விதிமுறையும் கிடையாது, வழிகாட்டு புத்தகங்களும் தேவையில்லை. எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தானாக நிகழும். இது உடலில் நடக்கும் இயற்கை அற்புதம். எனவே அதை நினைத்து தேவையில்லாத பயம் வேண்டாம்.

முதல் முறை என்பதால் சில தகவல்களை உங்களுக்காக பகிர்ந்துகொள்கிறேன்....

ஆபாசப்படங்கள் உண்மையல்ல : உடலுறவுக்கு தயாராகாத பலரும் அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆபாசப் படங்களை நாடுகின்றனர். ஆபாசப்படங்கள் முற்றிலும் சித்தரிக்கப்பட்ட நாடகம். அது காண்பவருக்கு காம உணர்ச்சியை அதிகரிக்க அதிக உணர்ச்சியுடன் சத்தமிடுவதும், இன்பம் காண்பதுபோல் நடிக்கிறார்கள். அதுவும் ஒரு படம் போன்றதுதான். டேக்ஸ், எடிட்டி, ஸ்பெஷன் எஃபெக்ட்ஸ் என அனைத்தும் கலந்து வெளிவருகிறது. அது நிஜ செக்ஸ் கிடையாது.

நீங்கள் 50 செக்ஸ் நிலைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு ஏற்ப உங்கள் கால்களை வளைக்க முடியுமா என்பதும் தெரியாது. எனவே பல படங்களைப் பார்த்துவிட்டு உங்கள் துணையிடம் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். அவர் நீங்கள் பார்க்கும் படத்தில் வரும் நாயகர்களைப் போல் அனுபவம் வாய்ந்த ஆபாசப்பட நாயகன் அல்ல... அவர்களும் உங்களைப் போன்றுதான். எனவே முதல் முறை எதையும் எதிர்பார்க்காமல் , பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

தாம்பத்தியம்

வலி , இரத்தம் அவசியமில்லை : கன்னித்தன்மையை கண்டறிய கன்னித்திரை கிழிந்து இரத்தம் உதிர்வதை அறிகுறியாக பார்ப்பார்கள். ஆனால் இன்றைய பெண்களுக்கு சில ஃபிசிக்கல் ஆக்டிவிடீஸ் செய்வதால் சீக்கிரமே கன்னித்திரை கிழிந்துவிடும். எனவே பல பெண்களுக்கு முதல் புணர்ச்சியின் போது இரத்தம் வருவது நிகழாது. அதேபோல் முதல் முறை சற்று வலி இருக்கும். அசௌகரியமாக உணர்வீர்கள்.

புதுமணத் தம்பதிகள் திருமண பிரச்சனைகளை சமாளிக்க சில ஸ்மார்ட் டிப்ஸ்..!

ஆரம்பத்தில் சில நிமிடங்களுக்கு மட்டுமே அந்த வலி இருக்கும். ஆனால் அது சீக்கிரமே உங்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்துவிடும். புணர்ச்சிக்கு முன் ஃபோர்பிளே மிகவும் அவசியம். இது உங்கள் உடலுறவை திருப்தியாக்கும். அதோடு வெஜினா சற்று இலகுவாகும். புணர்ச்சிக்கு வெஜினா தயாராகும். இதனால் வலி சற்று குறைவாக இருக்கும். புணர்ச்சி செய்யும்போது அவசரம் காட்டாமல் மெதுவாக செயல்பட வேண்டும். அந்த சமயத்தில் வலி தெரியாமல் இருக்க முத்தமிடுதல், தொடுதல் போன்று செய்தால் வலி தெரியாது.பாதுகாப்பு : முதல் முறை மட்டுமல்ல, எப்போது உடலுறவு மேர்கொண்டாலும் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பான செக்ஸ் ஆக்டிவிடீஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கருத்தடை விஷயங்களை முறையாக பின்பற்றுங்கள். ஆணுறை பயன்படுத்துவது தேவையற்ற கரு வளர்ச்சியை தடை செய்வது மட்டுமன்றி , பாலியல் தொற்றுகளையும் தவிர்க்க உதவும். அதேபோல் முதல் உடலுறவு மேற்கொள்பவர்கள் பாதுகாப்பு கருதி ஒரே சமயத்தில் இரண்டு ஆணுறைகளை அணிகின்றனர். அது முற்றிலும் தவறான விஷயம். ஒன்றே போதுமான பாதுகாப்பை கொண்டிருக்கும். இரண்டு அணிவது ஒன்றோடு ஒன்று உரசி கிழிந்துவிடும். இது இன்னும் கொடுமை.

உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

நிகழ்காலத்தில் இருங்கள் : உங்களைப் பற்றிய தேவையற்ற கற்பனைகளை தவிருங்கள். உங்களால் நீண்ட நேரம் செயல்பட முடியாது. முதல் முறை என்பதால் வியர்வை சொட்ட சொட்ட உங்களால் செய்ய இயலாது. அதேபோல் எதையும் உங்களால் அந்த சமயத்தில் நிரூபிக்க முடியாது. இது போன்ற எண்ணங்கள் உங்களுக்குள் தேவையற்ற அழுத்ததை உண்டாக்கும். இதனால் அப்போது மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது.டேக் இட் ஈசியாக எடுத்துக்கொண்டு சரியோ தவறோ விளையாடி கற்றுக்கொள்ளுங்கள். அதேபோல் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியமாக உணர்ந்தால், தவறாகத் தெரிந்தால் உடனே சொல்லிவிடுங்கள். பயம் வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு இன்னும் நேரம் , நாட்கள் தேவைய்ப்படலாம். எனவே ஒரே நாளில் அனைத்தையும் செய்ய எதிர்பார்க்காதீர்கள். உங்கள் துணை உங்களுக்குப் பிடிக்காததை செய்தால் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அது உங்கள் உரிமை.

இறுதியாக....செக்ஸ் என்பது இருவரும் குழுவாக இணைந்து செயல்படும் விளையாட்டு....தனியாக ஓட ஓட்டப்பந்தையம் அல்ல....

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sex, Sex doubts, Sex fear, Sexual Wellness

அடுத்த செய்தி