Home /News /lifestyle /

போலித்தனம், பிடிவாதம், நக்கல்.. Toxic பெண்களின் நட்பு, சுபாவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

போலித்தனம், பிடிவாதம், நக்கல்.. Toxic பெண்களின் நட்பு, சுபாவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Friendship

Friendship

Toxic Friendship | நட்பு என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தோடு, போலியாக நடந்து கொள்வது, அதீதமாக நக்கல் செய்வது, என்று சில விஷயங்கள் உங்கள் தோழிகளிடம் தென்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நட்பு என்பது அழகான உன்னதமான உறவு! நண்பர்களைப் போல சுயநலமற்ற உறவு இல்லை என்று நட்பைப் பற்றி உன்னதமான பல விஷயங்களைக் கூறலாம். ஆனால், எல்லாருக்கும் அப்படியான நட்பு அமைவதில்லை. நண்பர்களிடையே கருத்து வேறுபாடு, வாக்குவாதம், பொறாமை என்று என்ன பிரச்சனை வந்தாலும், அதை எளிதில் கடந்தும், மறந்தும் விடுவது நீடிக்கும் நட்பின் அடையாளம். ஆனால், நட்பு என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தோடு, போலியாக நடந்து கொள்வது, அதீதமாக நக்கல் செய்வது, என்று சில விஷயங்கள் உங்கள் தோழிகளிடம் தென்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

டாக்சிக் நட்பு என்று கூறப்படுவதுண்டு. உங்களிடம் நட்பு பாராட்டும் பெண்கள் டாக்சிக் ஆனவர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே.,

உங்கள் தோற்றத்தை பற்றி கேலி மற்றும் கிண்டல்

எப்போதுமே உங்கள் தோற்றம், நீங்கள் என்ன ஆடைகள் அணிகிறீர்கள், உங்களுடைய ஃபேஷன் சென்ஸ், விரும்பும் நிறம் என்று உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் எப்போதுமே குறை சொல்வார்கள் அல்லது உங்களுக்கு பொருந்தவில்லை என்று கேலி செய்வார்கள். நீங்கள் எவ்வளவு அழகாக, நேர்த்தியாக காணப்பட்டாலும், உங்களை கேலி செய்வதை நிறுத்த மாட்டார்கள்.

எல்லா பிரச்சனைகளுக்கும் உங்களிடம் தீர்வு தேடுவார்கள்

நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக ஆதரவாக இருப்பது இயல்பு. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், உதவுவதற்கு நட்பு தேவைப்படும். ஆனால், எப்போதுமே உங்களிடம் பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வரும் பெண், உங்கள் தோழியாக இருக்க முடியாது. பிரச்சனைகளும் உங்கள் தீர்வுகளும் என்று தான் உங்கள் நட்பு குறுகிய வட்டத்தில் இருக்கும். மேலும், உங்களை உங்கள் தோழி ஒரு தெரபிஸ்ட்டாக மட்டுமே பார்க்கிறார்.



எதிர்மறையான கருத்துக்கள்

எது நல்லது, எது கெட்டது என்று அப்படியே சொல்வது நட்புக்கு அழகு. நீங்கள் மிகவும் சோர்ந்திருக்கும் போது, அப்படியே நெகடிவ்வாக பேசக் கூடாது என்பதையும் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், டாக்சிக் நட்பில் உங்களுக்கு எப்போதும் எதிர்மறையான கருத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.

உங்கள் குழந்தையை சுதந்திரமாக வளர்ப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்கள் இங்கே.!

வெளிப்படையாக பேசுகிறேன் என்று கடுமையான பேச்சு

வெளிப்படையாக இருப்பது என் குணம் என்று பலரும் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்கள், பேசுவார்கள். அதே போல, நட்பில் என்ன ஒளிவு மறைவு என்று வெளிப்படையாக இருப்பது முக்கியம் என்று மிக மிகக் கடுமையாக பேசுவார்கள்.



தீவிரமான பிடிவாதம்

வெளியில் செல்வது முதல், ஷாப்பிங், திரைப்படம், என்று எல்லாவற்றிலும் தங்கள் விருப்பத்தை முன்வைப்பார்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது தெரிந்தாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். தான் விரும்பியது கிடைக்கும் வரை பிடிவாதமாக நடந்து கொள்வார்கள்.

குழந்தைகள் இரகசியம் காப்பதை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது... ஏன் தெரியுமா..?

எல்லா கவனமும் தன் மீதே இருக்க வேண்டும்

அட்டன்ஷன் சீக்கர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஒரு கூட்டத்தில் இருந்தாலும் சரி, உங்களுடன் தனியாக இருந்தாலும் சரி, எல்லாருடைய கவனமும் தன் மீதே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.



அவமானப்படுத்த அல்லது நீங்கள் அவமானப்பட காத்திருப்பார்கள்

நீங்கள் எந்த இடத்திலாவது தாழ்ந்து போகிறீர்களா அல்லது தோல்வி அடைகிறீர்களா என்று உங்களை அவமானப்படுத்த காத்திருப்பார்கள். நீங்கள் அவமானப்படும் போது, மகிழ்ச்சி அடையும் முதல் நபராக உங்கள் டாக்சிக் தோழி இருப்பார்.
Published by:Selvi M
First published:

Tags: Friendship, Lifestyle, Toxic Relationship

அடுத்த செய்தி