ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் பார்ட்னருடன் சண்டையா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.. ஈஸியா சமாதானம் ஆயிடுவாங்க.!

உங்கள் பார்ட்னருடன் சண்டையா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.. ஈஸியா சமாதானம் ஆயிடுவாங்க.!

உங்கள் பார்ட்னருடன் சண்டையா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..

உங்கள் பார்ட்னருடன் சண்டையா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..

சின்ன சின்ன கருத்து மோதல்கள், பிடித்தவை, பிடிக்காதவை இவற்றுக்கெல்லாம் நீங்கள் சண்டை போட்டால் கூட அதற்கு பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யார் வீட்டில் தான் சண்டை நடப்பது இல்லை? உங்களுடைய கணவர் அல்லது மனைவியுடன் வாக்குவாதம், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகமிக இயல்புதான். ஆனால் அவருடன் சண்டை போட்ட பிறகு நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் உங்கள் உறவை வலுப்படுத்தும் அல்லது பலவீனமாக்கும். சின்ன சின்ன கருத்து மோதல்கள், பிடித்தவை, பிடிக்காதவை இவற்றுக்கெல்லாம் நீங்கள் சண்டை போட்டால் கூட அதற்கு பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

போருக்குப் பின் அமைதி – சண்டைக்கு பின் முதிர்ச்சியாக கையாள்வது மிகவும் முக்கியம்

எல்லா உறவுகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சில தம்பதிகளுக்கு அழகான புரிதல் இருக்கும். ஒரு சில தம்பதிகளுக்கு யார் பெரியவர், நான் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு சின்ன பொறியாகத் தொடங்கி மிகப்பெரிய விவாதமாக மாறி விடும். இது மிக மிக இயல்பானது தான்! எனவே என் வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவாக இருக்கிறது, என் கணவர் அல்லது என் மனைவியுடன் ஒத்து வரவே இல்லை என்பது எல்லாம் உங்களுக்கு மட்டும் நடப்பது அல்ல. உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது! ஆனால் போருக்குப்பின் அமைதி என்பது போல சண்டை போட்டு முடிந்த பின்பு நீங்கள் அதை எந்த அளவுக்கு முதிர்ச்சியாக கையாளுகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம்.

சண்டைக்கு பின்பு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?

நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்: ஒரு சிலர் சண்டை போட்ட பின்பு எதுவுமே நடக்காதது போல, இயல்பாக தன்னுடைய அடுத்த வேலையை செய்ய சென்று விடுவார்கள். ஆனால் ஒருசிலருக்கு அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே அவ்வாறு உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் விவாதம், வாக்குவாதம் ஏற்படும் பொழுது நீங்கள் இருவருமே அமைதியாக விட்ட பிறகு அது எவ்வாறு இருந்தது, எப்படி உணர்ந்தீர்கள், அது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்: உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள். ஆனால் கோபத்தில் ஏதாவது திட்டிவிட்டு, பேசிவிட்டால் அது உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது? இந்த சண்டைக்குப் பிறகு அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பற்றியும் நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

எது சண்டைக்கு தூண்டி விடுகிறது என்பதை வெளிப்படையாக கூறுங்கள்: எந்த காரணங்களும் இல்லாமல் சண்டைகள் ஏற்படாது. எனவே, பொதுவாக உங்கள் இருவருக்குள் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடு எதனால் ஏற்படுகிறது, எது உங்களை விவாதத்திற்கு தூண்டி விடுகிறது என்பதைப் பற்றி வெளிப்படையாக சொல்லுங்கள்.

உங்கள் மீது தவறு இருந்தால் ஏற்றுக் கொள்ள தயங்காதீர்கள்: உங்கள் கணவன் அல்லது மனைவி செய்த ஏதேனும் ஒரு செயல் உங்களுக்கு பிடிக்கவில்லை; அதனால் நீங்கள் சண்டை போட்டீர்கள், என்று வாக்கு வாதம் ஏற்படுவதற்கான காரணம் நீங்களாக இருந்தால் அல்லது உங்கள் மீது தவறு இருந்தால் அதை ஒப்புக் கொண்டு விடுங்கள். கணவன் மனைவிக்குள் மன்னிப்பு கேட்பது என்பது உறவை வலுவாக்கும், அழகாக்கும்.

Also Read : இப்படி வாழ்ந்து பாருங்கள்… இனி கணவன், மனைவிக்கு இடையே விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

அடுத்த முறை சண்டை வந்தால் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி மனம் விட்டு பேசுங்கள்: ஒரு சில நேரங்களில் வாக்குவாதங்கள் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக திட்டி தீர்த்து, பொருட்களை உடைக்கும் அளவுக்கு தீவிரமாகிவிடும். ஆனால் அதேபோல அடுத்த முறை நேராமல் பார்த்துக் கொள்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்; கருத்து வேறுபாடுகள் வந்தால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இருவருமே மனம் விட்டுப் பேசுங்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Couples, Relationship Fights, Relationship Tips