Home /News /lifestyle /

Female Condom : பெண்ணுறை பயன்பாடு பற்றி தெரியுமா..? முழுமையான தகவல்கள் இங்கே...

Female Condom : பெண்ணுறை பயன்பாடு பற்றி தெரியுமா..? முழுமையான தகவல்கள் இங்கே...

பெண்ணுறை

பெண்ணுறை

பெண்களுக்கு கிடைக்க பெறும் பல வகை கருத்தடை வசதிகளில், மிகக் குறைவாக அல்லது முற்றிலுமாக பக்க விளைவுகள் இல்லாததது அவர்களுக்கான காண்டம் எனப்படும் பெண்ணுறைகள் தான்.

பெண்களுக்கு கிடைக்க பெறும் பல வகை கருத்தடை வசதிகளில், மிகக் குறைவாக அல்லது முற்றிலுமாக பக்க விளைவுகள் இல்லாததது அவர்களுக்கான காண்டம் எனப்படும் பெண்ணுறைகள் தான். பெரும்பாலானவர்கள் இதை உபயோகிப்பதில்லை. ஆனால், பெண்களுக்கு இது மிகுந்த சௌகரியகத்தை வழங்கும். உடலுக்கு அவ்வளவாக தீங்குகளை கொடுக்காது.

பெண்ணுறைகள் எப்படி இருக்கும்.?

இந்த காண்டம் மிக மெல்லியதாகவும், உடுத்துவதற்கு இலகுவானதாகவும் இருக்கும். விதவிதமான சைஸ்களில் இது விற்பனைக்கு வருகிறது. ஒருமுனையில் மூடிக் கொள்ளும் வகையில் இலகுவான டிஸ்க் பொருந்தி இந்த காண்டம் இருக்கிறது.

இன்னர் டிஸ்க் உடன் மூடிய திரை ஒன்று இருக்கிறது. அதுதான் பெண்ணுறுப்புக்குள் இதை செலுத்திக் கொள்ள உதவுகிறது. பெண்ணுறையில் இடம்பெற்றுள்ள திறந்தவெளி முனை என்பது பெண்ணுறுப்பின் வெளிப்புற சுவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண்களுக்கான காண்டம் எப்படி செயல்படுகிறது..?

மெல்லியதான இந்த பவுச்சை ஒரு பெண் தன்னுடைய உறுப்புக்குள் செலுத்திக் கொள்ளும்போது, விந்தணு உள்நுழைவதை அது தடுக்கிறது. கருமுட்டை கருத்தரிப்பதை இது தடுக்கிறது. இதனால், பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க முடிகிறது.

பெண்ணுறுப்பு சுவர்கள் மற்றும் உட்புற சதை உள்ளிட்ட பலவற்றையும் காண்டம் மறைத்துக் கொள்வதால் ஆண்களின் முன் பசை மற்றும் விந்தணு ஆகியவற்றை அது தடுக்கிறது. ஆகவே, பாலியல் ரீதியிலான நோய்கள் பரவுவதில்லை.



இதன் செயல்திறன் எவ்வளவு:

சுமார் 98 சதவீத செயல்திறன் உடைய ஆணுறைகளை ஒப்பிடும்போது பெண்ணுறைகள் 95 சதவீதம் அளவுக்கு நல்ல செயல்திறன் கொண்டவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவையற்ற கர்ப்பங்களில் இருந்து இது 95 சதவீத பாதுகாப்பை தருகிறது. அதாவது பெண்ணுறை பயன்படுத்தும் 100-ல் 5 பேர் மட்டுமே கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதை பயன்படுத்துவது எப்படி?

ஆணுறையைப் போலவே இதை பிரிக்கும்போது கிழிந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ஆணுறுப்பு உடல் ரீதியாக தொடர்புக்கு வருவதற்கு முன்னால் பெண்ணுறுப்பு அல்லது ஆசனவாய் பகுதியில் பெண்ணுறை பொருத்துவதற்கு பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

கொஞ்சம் இலகுவாக பயன்படுத்த லூப்ரிகண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

பெண்ணுறை எவ்வளவு தூரம் உள்நுழையுமோ, அவ்வளவு தூரம் உள்ளே தள்ளிவிட வேண்டும்.

பெண்ணுறையின் மறு முனை அல்லது இரண்டாம் வளையம் என்பது உறுப்புக்கு வெளியே ஒரு இன்ச் அளவுக்கு நீட்டிக் கொண்டு இருக்கும்.



பெண்ணுறையின் பலன்கள்:

உடல் உறவுக்கு 8 மணி நேரம் முன்பாகவே இதை பொருத்திக் கொள்ளலாம்.

இது அதிக அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.

உடலுறவில் உச்சம் பெற்ற பிறகு உடனடியாக இதை அப்புறப்படுத்த வேண்டும்.

பார்ட்னருக்கு விறைப்புதன்மை குறைந்தாலும் இதன் அளவு மாறுபடாது.

கணவன் மனைவி சேர்ந்து ஆபாச படங்கள் பார்த்தால் தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலே வராது : எப்படி தெரியுமா?

பாதகங்கள்:

லேசான அளவுக்கு சத்தம் வரக் கூடும்.

ஆணுறைகளை ஒப்பிடுகையில் இதன் விலை அதிகம்.

பாலுறவின் உணர்ச்சியை இது மட்டுப்படுத்தக் கூடும்.

இந்தியாவில் விற்பனையாகும் பிராண்டுகள்:

இந்தியாவில் எஃப்சி2, ஓரிகமி, குபிட் ஏஞ்சல், வெல்வட் உள்ளிட்ட 10 வகையான பிராண்ட் பெயர்களில் பெண்ணுறைகள் விற்பனை ஆகின்றன.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Female Condom

அடுத்த செய்தி