ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

துணையுடன் உடலுறவு கொள்ளும்போது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் கற்பனை செய்கிறீர்களா..? என்ன காரணம்?

துணையுடன் உடலுறவு கொள்ளும்போது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் கற்பனை செய்கிறீர்களா..? என்ன காரணம்?

ஆனால் 10%-க்கும் அதிகமான ஆண்கள் அதை ஒருபோதும் அனுபவிப்பதில்லை என்று கூறி உள்ளது. மிஸ்டர்ஸ் என்பது குர்கானை தளமாகக் கொண்ட உடல்நலம் மற்றும் ஆயுர்வேத, அலோபதி மற்றும் தாவர அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்தி ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை பூர்த்தி செய்து வரும் நிறுவனம் ஆகும். Misters.in நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் மிஸ்ரா, சிறந்த பாலியல் ஆரோக்கியத்தை பெறுவதற்கான சில வழிகளை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் செல்லும் சில உன்னதமான வழிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 10%-க்கும் அதிகமான ஆண்கள் அதை ஒருபோதும் அனுபவிப்பதில்லை என்று கூறி உள்ளது. மிஸ்டர்ஸ் என்பது குர்கானை தளமாகக் கொண்ட உடல்நலம் மற்றும் ஆயுர்வேத, அலோபதி மற்றும் தாவர அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்தி ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை பூர்த்தி செய்து வரும் நிறுவனம் ஆகும். Misters.in நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் மிஸ்ரா, சிறந்த பாலியல் ஆரோக்கியத்தை பெறுவதற்கான சில வழிகளை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் செல்லும் சில உன்னதமான வழிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் கற்பனைகள் உங்கள் உடலுறவை உற்சாகப்படுத்தினால், உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிப்பதற்கு உதவினால் அதை தொடர்வதில் தவறில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேள்வி : என் மனைவியுடன் உடலுறவில் இருக்கும்போது, அவளுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நான் கற்பனை செய்கிறேன். நான் என் மனைவியுடன் அந்தக் கற்பனைகளைப் பற்றி பேசி பகிர்ந்துகொள்வேன். அப்படி செய்வதால் நான் உற்சாகமடைகிறேன். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் உடலுறவில் பிஸியாக இருக்கும்போது இப்படி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அளவுக்கு என் மனைவி ஸ்போர்ட்டிவ். ஆனால், இது எனக்கு ஒருவித குற்ற உணர்வைத் தருகிறது. இந்த விஷயம் என் மனைவி மீதோ அல்லது என் மீதோ ஏதேனும் உளவியல் விளைவை ஏற்படுத்துமா..?

பதில் : பலர் தங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது மற்றவர்களைப் பற்றி கற்பனை செய்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி கற்பனை செய்வது மிகவும் சாதாரணமானது மற்றும் பொதுவானது. இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உண்மையில், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில் இதுபோன்ற திறந்த, நேர்மையான கலந்துரையாடல்கள் இருப்பது பாராட்டத்தக்கது. இதுபோன்ற விஷயங்கள்தான் நீண்ட உறவுக்கான அடித்தளம்.

பாலியல் கற்பனைகளைப் பற்றிய பேச்சுக்கு வருவோம்... ​​மனித மூளை விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியது. நிஜ வாழ்க்கையில், நாம் சமூக விதிகள், நடைமுறைக் கட்டுப்பாடுகள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றால் கட்டப்பட்டிருக்கிறோம். அதனால்தான் இதுபோன்ற கற்பனைகள் மூலம் சிற்றின்பம் காண்கிறோம். இந்த அழுத்தங்களுக்கு மத்தியிலான உடலுறவு நம் மனதிற்கு நிம்மதியை அளிக்கின்றன. நீங்களும் உங்கள் மனைவியும் இப்படி கற்பனைகளை பேசிக்கொள்வதும் ஒருவிதத்தில் நல்லதுதான். ஏனெனில் இதன் மூலம் உங்கள் உறவை வலுப்படுத்தி, நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.

பாலியல் கற்பனைகள் உங்கள் உடலுறவை உற்சாகப்படுத்தினால், உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிப்பதற்கு உதவினால் அதை தொடர்வதில் தவறில்லை. ஆனால் அவை உங்களுக்கு வெறும் கற்பனைகளாக இருக்கும் பட்சத்தில் பிரச்னை இல்லை. ஒரு விஷயத்தை கற்பனை செய்வதும் , அதை செயல்படுத்துவதும் வெவ்வேறு விஷயங்கள். அதாவது உங்கள் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும்போது நெருங்கிய நண்பர் அல்லது உறவினருடன் உடலுறவு கொள்வது பற்றி நீங்கள் கற்பனை செய்வதால் நிஜத்திலும் அந்த நபர்களுடன் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள் என்று அர்த்தமல்ல.

பணிபுரியும் சக பெண்களுடன் உடலுறவு கொள்வது போல் கற்பனை செய்கிறீர்களா..? இதனால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறீர்களா..? பல்லவியின் பதில் இதோ...

உங்கள் மனைவியுடன் இன்று போல் என்றும் வெளிப்படையாக இருந்தால் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. மற்றவர்களைப் பற்றி கற்பனை செய்வது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில் ஒரு வேடிக்கையான மற்றும் சிற்றின்ப விஷயமாக இருக்கலாம்.

அதேபோல் உங்கள் மனைவி அதை தவறாக நினைக்கவில்லையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். எங்கேனும் அவர் அதை நினைத்து வருத்தப்படுகிறாரா என்பதை கண்கானியுங்கள். எல்லைமீறி செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை இந்த கற்பனைகளுக்கு மனைவி முற்றுப்புள்ளி வைத்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.

நீங்கள் இன்னும் குற்ற உணர்ச்சியுடனும் கவலையுடனும் இருந்தால், உங்கள் மனைவியுடன் உட்கார்ந்து அதைப் பற்றிய நேர்மையான உரையாடலை நடத்துங்கள். இதைப் பற்றி பேசுவதற்கு முன் இந்த விஷயத்தைப் பற்றி உங்கள் மனையின் புரிதல் என்ன , அவருடைய பார்வை என்ன என்பதை கேளுங்கள். அதன்பிறகு உங்கள் உரையாடலை தொடங்குங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sex Desire, Sex Fantasies