Home /News /lifestyle /

உங்கள் காதல் உறவில் நீங்கள் ஏற்றக்கொள்ள கூடாத 5 விஷயங்கள்..!

உங்கள் காதல் உறவில் நீங்கள் ஏற்றக்கொள்ள கூடாத 5 விஷயங்கள்..!

காதல்

காதல்

தேவையற்ற சண்டைகள், உணர்வு ரீதியாக ஒருவரை தாக்குவது, நேர்மை இன்மை, அடிப்பது போன்ற செயல்கள் மிக மோசமானதாக கருதப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளை ஒருபோதும் ஏற்றக்கொள்ள கூடாது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக காதலில் இருப்பவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் இருக்கும். இது இயல்பானது தான், என்றாலும் சில விஷயங்கள் மிக மோசமானதாக அமைய கூடும். குறிப்பாக தேவையற்ற சண்டைகள், உணர்வு ரீதியாக ஒருவரை தாக்குவது, நேர்மை இன்மை, அடிப்பது போன்ற செயல்கள் மிக மோசமானதாக கருதப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளை ஒருபோதும் ஏற்றக்கொள்ள கூடாது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பதிவில் காதல் அல்லது திருமண உறவில் நீங்கள் ஏற்றுக்கொள்ள கூடாத 5 முக்கிய செயல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உணர்வு ரீதியான தவறுகள்

காதல் உறவு என்பது ஒருவருக்கொருவர் குறைகளை ஏற்றுக்கொண்டு, அடுத்த முறை திருத்தி கொண்டு நடப்பதாகும். ஆனால் தீவிர அவமரியாதை மற்றும் உணர்ச்சி ரீதியான சித்திரவதைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். இன்றைய சூழலில் இது போன்ற செயல்கள் அதிக அளவில் நடக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த செயல்கள் ஒருவரின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைக்க கூடியவை. எனவே இது போன்று உங்கள் துணை உணர்வு ரீதியாக சித்திரவதை செய்தால் அவரை விட்டு விலகுவது நல்லது.

இரகசிய உறவு

நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களின் உறவை வெளிப்படுத்தாமல் இருந்தால் அவர் உங்களை எதோ ஒரு வகையில் ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். எனவே உங்களின் உறவை வெளிப்படுத்தவில்லை என்றால் அவரின் உறவு சரியானதல்ல. மேலும் அந்த நபர் உங்களுக்கு பெரிய அளவில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.



விட்டுக்கொடுத்தல்

எந்த உறவாக இருந்தாலும் அதில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பது மிக அவசியமாகும். எல்லா விஷயத்திலும் ஒருவரே விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் உங்கள் உறவு இருந்தால் அது சரியான பாதையில் செல்லவில்லை என்று அர்த்தம். மேலும் அவர் உங்களுக்கானவர் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும் நேரம் இதுவாகும்.

உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

சண்டை இடுதல்

காதல் உறவில் சண்டை வருவது சாதாரண ஒன்று தான். ஆனால், அந்த சண்டையானது மிக பெரிய அளவிலோ அல்லது உங்களை உடல் அளவிலும் காயத்தை தரும் வகையிலோ இருந்தால் நிச்சயம் நீங்கள் தவறான ஒருவனுடன் உள்ளீர்கள் என்று அர்த்தம். இது போன்று உங்களுக்கு நடந்து வந்தால், அவரை விட்டு விலகுவது மிக நல்லது.



சுயநலம்

சில நேரங்களில் சுயநலமாக முடி எடுப்பது சரியானதாக இருக்கும். ஆனால் காதல் உறவில் மிக மோசமான அளவில் சுயநலமாகவோ அல்லது ஒருவர்மீது ஒருவர் ஈகோ எண்ணம் கொண்டோ இருந்தால் தவறான உறவில் உள்ளீர்கள் என்று அர்த்தம். இப்படிப்பட்ட உறவு என்பது தவறான பாதையை நோக்கி செல்கிறது என்பதாகும். எனவே இது போன்ற உறவுகளை தவிர்த்து விடுங்கள். இல்லையேல் உங்களின் முழு வாழ்க்கையும் தவறான ஒரு நபருடன் சென்று விடும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Relationship Tips

அடுத்த செய்தி