ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Happy Mother's Day 2022 : பரிசுகளைக் காட்டிலும் அம்மாக்கள் அதிகம் மகிழ்வது இந்த விஷயத்தில்தான்..!

Happy Mother's Day 2022 : பரிசுகளைக் காட்டிலும் அம்மாக்கள் அதிகம் மகிழ்வது இந்த விஷயத்தில்தான்..!

அன்னையர் தினம் 2022

அன்னையர் தினம் 2022

Happy Mother's Day 2022 : எத்தனை பெரிய மதிப்பில் நீங்கள் பரிசு பொருள் அளித்தாலும், அம்மாவைப் பொருத்தவரை அவை எல்லாமே ஜஸ்ட் கடந்து போகக் கூடிய ஒன்றுதான். ஆனாலும், அன்னையர் தினத்தில் அவரை மகிழ்விக்க வேண்டும். அப்படியானால் என்ன செய்வது?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் 24 மணி நேரமும் அன்பு மற்றும் அக்கறை கொண்டிருப்பவர் அம்மா தான். பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகம் செல்லும் கணவருக்கு வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் என்று அவர்களது உழைப்பிற்கு ஒரு ஓய்வு உண்டு.

ஆனால், ஆண்டில் எந்த ஒரு நாளுமே அம்மாவுக்கு விடுமுறை தினம் கிடையாது. குடும்பத்திற்காக ஓய்வின்றி அனைத்து நாளும் உழைப்பவர் அவர். இத்தகைய சூழலில், ஆண்டுக்கு ஒருமுறையாவது நாம் அம்மாவை முழுமனதோடு நினைத்து, கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்னையர் தினத்தில் அவர்களுக்காக பட்டுச் சேலை, ஒரு சுடிதார் அல்லது ஸ்மார்ட்ஃபோன், ஒரு செயின் அல்லது மோதிரம் என அசத்தலான பரிசு வாங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். ஆனால், நீங்கள் எதைக் கொண்டு போய் கொடுத்தாலும், “எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்’’ என்றே பெரும்பாலான அம்மாக்கள் பதில் அளிக்கின்றனர்.

என்ன செய்து மகிழ்விக்கலாம்

எத்தனை பெரிய மதிப்பில் நீங்கள் பரிசு பொருள் அளித்தாலும், அம்மாவைப் பொருத்தவரை அவை எல்லாமே ஜஸ்ட் கடந்து போகக் கூடிய ஒன்றுதான். ஆனாலும், அன்னையர் தினத்தில் அவரை மகிழ்விக்க வேண்டும். அப்படியானால் என்ன செய்வது? ரொம்ப சிம்பிள். ஆண்டு முழுவதும் உங்களுக்காக அம்மா என்னவெல்லாம் செய்தோரோ, அதையெல்லாம் நீங்கள் செய்து கொடுங்கள். அன்னையர் தினம் ஒன்றாவது அவர்களுக்கு ஓய்வு தினமாக இருக்கட்டும்.

அன்னையர் தினம் 2022 : உங்க அம்மாவுக்கு கிஃப்ட் மட்டும் போதாது... இதையும் செய்யுங்கள்..!

வேலை அனைத்தையும் செய்து முடிக்கலாம்

வீட்டில் உள்ள அனைவரும் பசியாறுவதற்கு உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சில சமயம் அனைவரது அழுக்கு ஆடைகளையும் துவைப்பது என பல வேலைகளையும் ஒரே ஆளாய் செய்து முடிப்பவர் அம்மா தான். ஆனால், அன்னையர் தினத்தில் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு இந்த வேலைகளை கணவர் மற்றும் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து செய்யலாம்.

மன ரீதியாகவும் ரிலாக்ஸ் கொடுங்கள்

வீட்டில் அடுத்து என்ன செய்ய வேண்டும், குடும்பத்தை இயக்குவதற்கு என்னென்ன தேவை என பல திட்டமிடுதல்களை செய்யும் அம்மாவுக்கு மன அழுத்தம் கூட ஏற்படலாம். ஆகவே, அன்னையர் தினத்தில் இந்தப் பிரச்சனைகளில் இருந்து அம்மாவுக்கு விடுதலை கொடுங்கள்.

இந்த ஒரு நாளிலாவது வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, குடும்பத்தின் தேவைகள் குறித்து விவாதியுங்கள். அம்மாவின் மனதிற்கு ரிலாக்ஸ் அளிக்கும் வகையில் அவர்களைப் பாராட்டி பாட்டு பாடுவது, கவிதை வாசிப்பது போன்ற நடவடிக்கைகளை நீங்கள் செய்யலாம்.

கொரோனா காலத்தில் குழந்தைகள், கணவர் மற்றும் வீட்டில் உள்ள அனைவரையும் தனி நபராய் கவனித்துக் கொண்ட அம்மாவின் தேவைகள் என்னவென்பதை யூகித்து அவற்றை நிறைவு செய்து கொடுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Mothers day