ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உயரத்தில் வேறுபாடு கொண்ட கணவன், மனைவி : தாம்பத்திய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

உயரத்தில் வேறுபாடு கொண்ட கணவன், மனைவி : தாம்பத்திய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

காதல்

காதல்

உடல் அளவில் ஆணும், பெண்ணும் ஏறக்குறைய நிகரான உயரம், எடை கொண்டவர்களாக இருப்பதும் நல்ல பொருத்தத்திற்கு அவசியமாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஜோடிப் பொருத்தம் என்பது பெரும்பாலானோருக்கு கச்சிதமாக அமைவதில்லை. குறிப்பாக உயரத்தில் பெரும் வித்தியாசம் நிலவுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆண், பெண் இடையிலான பொருத்தம் என்பது இரட்டை மாட்டு வண்டி போல ஒருசேர இருக்க வேண்டும் என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதாவது, இன்றைக்கு பெரும்பாலும் இருவருக்குமான கல்வித் தகுதி, வேலை, அந்தஸ்து, வசதி போன்றவற்றை தான் மிக முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கின்றனர்.

ஆனால், உடல் அளவில் ஆணும், பெண்ணும் ஏறக்குறைய நிகரான உயரம், எடை கொண்டவர்களாக இருப்பதும் நல்ல பொருத்தத்திற்கு அவசியமாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஜோடிப் பொருத்தம் என்பது பெரும்பாலானோருக்கு கச்சிதமாக அமைவதில்லை. குறிப்பாக உயரத்தில் பெரும் வித்தியாசம் நிலவுகிறது.

ஆண், பெண் இடையே உயரத்தில் நிலவும் வேறுபாடு காரணமாக தாம்பத்ய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

உயரம் என்பது பெரும் பிரச்சினை கிடையாது

ஆண் ஒரு 6 அடி 3 இன்ச் உயரம் கொண்டவராகவும், பெண் ஒரு 5 அடி ஒரு இன்ச் கொண்டவராகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மிஷனரி பொசிஷனில் தாம்பதய உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்போது நிச்சயமாக அது சிக்கலுக்கு உரியதாக இருக்கும். அதாவது, நீங்கள் உடலுறவு கொள்ளும்போது உங்கள் பார்ட்னர் அதை எந்த அளவுக்கு மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார் என்பதை முகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இப்படி உயரமான ஆணும், உயரம் குறைவான பெண்ணும் இணை சேர்ந்தால் அதற்கு வாய்ப்பு இருக்காது.

வெண்ணிலா உறவுக்கு சரிவராது

சிலருக்கு மிக மெதுவாக, கொஞ்சம், கொஞ்சமாக அனுபவிக்க வகை செய்யும் வெண்ணிலா செக்ஸ் முறையில் ஆர்வம் இருக்கும். குறிப்பாக பெண்ணின் கண்களை பார்த்துக் கொண்டே விளையாட்டை அரங்கேற்ற ஆண் விரும்புவார். ஆனால், உயரம் வித்தியாசமானதாக இருந்தால் இதற்கு வாய்ப்பு இல்லை.

உங்கள் துணை உடலுறவின்போது உச்சம் அடைந்ததைப் போல் போலியாக நடிக்கிறாரா..? இதை எப்படி அணுகுவது..?

கடுமையான உறவை எதிர்ப்பார்ப்பவர்களுக்கு இது போனஸ்

சில ஜோடிகள் செக்ஸ் உறவை கொஞ்சம் கடுமையானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதாவது மென்மையான போக்கு இருக்காது. மிகவும் இயந்திரத்தனமாக உறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஜோடிகளுக்கு உயர வித்தியாசம் என்பது குதூகலத்தை கொடுக்கும்.

சில பொசிஷன்கள் வேடிக்கையாக இருக்கும்

உயரம் குறைவான பெண் ஒருவர், ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு தாம்பத்ய உறவை தொடங்கினார் என்றால், அது மிகுந்த வேடிக்கை மற்றும் குதூகலம் கொண்டதாக இருக்கும். குறிப்பாக இந்த பொசிஷனில் பெண்களுக்கு உச்சகட்டம் சிறப்பாக இருக்கும்.

குழந்தையின்மை குறித்து மருத்துவரிடம் பேச ஆண்கள் தயங்குவதற்கு என்ன காரணம்..?

அதே சமயம், தம்பதியர்கள் நின்று கொண்டே செக்ஸ் செய்வது, முத்தம் கொடுப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்போது சற்றே சிரமம் கொண்டதாக அல்லது நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

இறுதியாக ஒரு விஷயம். ஆண், பெண் உயரம் என்பது தம்பதியருக்கு கிடைக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்திற்கு எந்தவிதத்திலும் இடையூறாக இருக்காது. ஆனால், நீங்கள் விரும்பிய பொசிஷன்கள், விளையாட்டுகளை அரங்கேற்றுவதற்கு அது சிரமம் கொடுப்பதாக அமையும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sex tips