வயதைக் கடக்கும் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு குறையுமா ?

சில பெண்கள் சிகிச்சைகளும் மேற்கொள்கின்றனர். இதற்காக சில தெரபிகளும் அளிக்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 10:18 PM IST
வயதைக் கடக்கும் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு குறையுமா ?
வயதைக் கடக்கும் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு குறையுமா ?
Web Desk | news18
Updated: July 12, 2019, 10:18 PM IST
30 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரும் பயம் என்னவெனில் மாதவிடாய் விலக்கு. பெண்களுக்கு மாதா மாதம் மாதவிடாய் வந்தாலும் பிரச்னை. வரவில்லை என்றாலும் பிரச்னை. அது முற்றிலுமாக நிற்கும்போது உடலுக்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டம் சொல்ல முடியாத துயரம். அந்த வயதில் மாதவிடாய்க்கு மட்டும் விலக்கு அல்ல. உடலுறவுக்கும் விலக்குதான் என்கிறது The Journal of the North American Menopause Society வெளியிட்டுள்ள ஆய்வு.

இதை பல பெண்கள் ஒப்புக் கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

ஆய்வில் மாதவிலக்கு அடைந்த 4,500 பெண்களுடன் உரையாடல் நிகழ்த்தியுள்ளது. அவர்களிடம் ”இறுதியாக நீங்கள் எப்போது உடலுறவில் ஈடுபட்டீர்கள் ” என்றுக் கேள்வி எழுப்பியுள்ளது.


அதற்கு அவர்கள், பெருத்த யோசனையில் இருந்ததாகவும், சிலர் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் என்று கேள்வி எழுப்பிய போது அவர்களுள் பலர் மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு உடலுறவில் திருப்தியுடன் ஈடுபட முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதை முக்கிய கருத்தாக எடுத்துக் கொண்டு எதனால் , எப்படி என்ற கோணத்தில் ஆய்வு செய்துள்ளனர்.Loading...

அதில் ”உடல் ரீதியாகப் பெண்களின் வெஜினா வறண்டு போகிறது. அதேபோல் உடலுறவில் ஈடுபடும்போது அதிக வலியை அனுபவிக்கின்றனர். ஹார்மோன் மாற்றங்கள் என இது போன்ற காரணங்களால் அவர்களின் உடலுறவுச் செயல்பாட்டில் தடை ஏற்படுகிறது. இதற்காக சில பெண்கள் சிகிச்சைகளும் மேற்கொள்கின்றனர். இதற்காக சில தெரபிகளும் அளிக்கப்படுகிறது” என்கிறார் ஸ்டெஃபானி. இவர் அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் இயக்குநராக இருக்கிறார்.

மன ரீதியாக அணுகும்போது உடல் மீதான கவனம் ( Body shame ) , மன அழுத்தம், தன்நம்பிக்கை இழத்தல் , மன ஓட்டங்களில் அடிக்கடி மாற்றம், பதட்டம் , உறவுகளுக்குள்ளான பிரச்னைகள், இயலாமை போன்ற பிரச்னைகளும் அவர்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இன்மைக்கு காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.இவை தவிர மற்ற கோணங்களிலும் ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்று ஆய்வு நடத்தியது. அதில் அவர்கள் உடலுறவின் போது அசௌகரியமாக உணருகின்றனர். சிலருக்கு துணை இல்லாமல் இருக்கலாம் அல்லது துணை இறந்து தனிமையில் இருக்கலாம். துணையின் உடல் நலனில் பிரச்னை இருக்கலாம் அல்லது அந்த பெண்ணிற்கு உடல் நலனில் பிரச்னை இருக்கலாம் என பல காரணங்களை முன் வைக்கிறது அந்த ஆய்வு.

இறுதியாக இப்படி பல காரணங்கள், பிரச்னைகளால்தான் மாதவிடாய் விலக்கிற்குப் பின் பெண்களால் உடலுறவில் திருப்தியாகவோ அல்லது முற்றிலுமாகவோ ஈடுபட முடியாமல் போகிறது என்று விவரிக்கிறது ஆய்வு.

இதையும் படிக்க :

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை தவிருங்கள்...!

என்றும் இளமையாக ஜொலிக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...