முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Weekend Marriage லைஃப்ஸ்டைல் பற்றி தெரியுமா..? திருமணமானவர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Weekend Marriage லைஃப்ஸ்டைல் பற்றி தெரியுமா..? திருமணமானவர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

weekend marriage

weekend marriage

இந்த வாழ்க்கை ஏற்பாட்டினால் கிடைக்கும் நேரடியான நன்மை என்னவென்றால் ஒவ்வொரு பார்ட்னரும் தங்களுக்கென ஓன் ஸ்பேஸை கொண்டிருப்பார்கள் என்பது தான்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் உங்கள் லைஃப் பார்ட்னரை மிகவும் நேசிக்கிறீர்கள், ஆனால் உங்கள் இருவரின் வெவ்வேறு வாழ்க்கை முறைகள் காரணமாக வார நாட்களில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருக்க முடியவில்லையா..? வார இறுதி நாட்களில் மட்டுமே ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ள, நேரம் செலவழிக்க உங்களுக்கு டைம் கிடைக்கிறதா.?

சுருக்கமாக சொன்னால் வார இறுதி நாட்களைத் தவிர தம்பதியர் ஒருவருக்கொருவர் நேரம் செலவழிக்க போதுமான நேரம் கிடைப்பதே அரிது என்றால் நீங்கள் வீக்எண்ட் மேரேஜ் (weekend marriage) லைஃப் ஸ்டைலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஜப்பான் போன்ற நாடுகளில் இதை ஒரு living arrangement-ஆகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு பின்னால் தம்பதியர் இருவரும் வெவேறு நகரங்களில் வேலை பார்ப்பது, வேலையில் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்காமல் போவது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். இது தவிர தம்பதியர் வார நாட்களில் தனித்தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளிலும், வார இறுதி நாட்களில் மட்டும் ஒரே இல்லத்தில் சேர்ந்து வசிக்க முடிவு செய்வதும் இந்த வாழ்க்கை முறைக்கு காரணமாக இருக்கிறது. இந்த ஏற்பாடு சவால்களுடன் இருந்தாலும் சில நன்மைகளையும் கொண்டிருக்கிறது. வீக்எண்ட் மேரேஜ் முறை சில தம்பதியர்களுக்கு நன்றாக வேலை செய்ய கூடிய ஆச்சரிய காரணங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்த வாழ்க்கை ஏற்பாட்டினால் கிடைக்கும் நேரடியான நன்மை என்னவென்றால் ஒவ்வொரு பார்ட்னரும் தங்களுக்கென ஓன் ஸ்பேஸை கொண்டிருப்பார்கள் என்பது தான். நீங்களும் உங்கள் பார்ட்னரும் சுதந்திரத்தை விரும்புபவர்கள் மற்றும் சொந்த வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்றால், இந்த weekend marriage முறை உங்களுக்கு நன்மை தரலாம்.

உங்கள் ஒர்க் வீக்கை தவிர உங்கள் பார்ட்னரை புறக்கணிப்பது போல நீங்கள் உணராமல், உங்கள் பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் மற்றும் சோஷியல் ஆக்டிவிட்டீஸ்களை தொடர உங்களுக்கான வாய்ப்பை தருகிறது.

Also Read | பெண்கள் பிறப்புறுப்பில் உள்ள முடியை அகற்றுவது ஆபத்தா..? அதன் தேவைகளை தெரிந்தால் இனி செய்ய மாட்டீங்க..!

என்ன தான் நெருக்கம் என்றாலும் அதிக நேரம் சேர்ந்து இருக்கும் போது கருத்து வேறுபாடுகள் மற்றும் சிறுசிறு சண்டைகள் தம்பதியருக்குள் ஏற்படுவது மிகவும் சகஜமானது. எனினும் இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்க weekend marriage பெரிதும் உதவும்.

வார இறுதி நாட்கள் மட்டுமே தம்பதியர் ஒன்றாக இருந்து நேரம் செலவழிப்பார்கள் என்பதால் வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கும் குறைவான நேரமே இருக்கும். மோதல்கள், மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை குறைத்து அமைதியான உறவுக்கு வழிவகுக்கும். வார இறுதி நாட்களில் மட்டுமே பார்த்து கொள்வதால் ஒன்றாக செலவழிக்கும் சிறிது நேரத்தை அது மிகவும் நேர்மறையாக வைக்க உதவுகிறது.

வார இறுதி நாட்களில் ஒன்றாக நேரம் செலவழிக்கும் போது வார நாட்களில் தங்கள் வாழ்வில் என்னென்னெ விஷயங்கள் நடந்தது என்பதை தம்பதியர் ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொள்வது அருமையான உறவுக்கு அடித்தளமாக இருக்கும். வார இறுதி நாட்களை வேடிக்கையா, உற்சாகமாகவும் மாற்றும்.

தம்பதியர் ஒன்றாக இருக்கும் வார இறுதி நாட்களை கூடுதல் வேடிக்கையாக மாற்ற விரும்பினால், வார இறுதிக்கான நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை திட்டமிடலாம். நெருக்கம் மற்றும் இணைப்பு உணர்வை மேம்படுத்தி கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

Also Read | ஒரு கையளவு பூசணி விதையில் இத்தனை பிரச்சனைகளை சரி செய்யலாமா..? ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

தம்பதியர் தங்கள் ரிலேஷன்ஷிப்பில் அதிக உற்சாகம் மற்றும் தன்னிச்சையாக இருக்க weekend marriage உதவ கூடும். முழு நேர வாழ்க்கை சூழ்நிலையில் சாத்தியமில்லாத சில சர்ப்ரைஸ்களை வார இறுதியில் பிளான் செய்து உங்கள் பார்ட்னருக்கு கொடுப்பது இருவருக்குமான உறவை ஃபிரெஷ்ஷாக மற்றும் துடிப்பாக வைத்திருக்க உதவும்.

தம்பதியர் எப்போதும் ஒன்றாக வாழும்போது, அவர்களில் பலர் ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்து கொள்ள தொடங்குகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. தங்கள் பார்ட்னர் எப்போதும் தன்னுடன் தானே இருக்கிறார் என்ற எண்ணத்தில் அவர்களிடம் பாராட்டு மற்றும் பாசத்தை காட்ட மறந்துவிடுவதால் நிகழ்கிறது.

ஆனால் weekend marriage-ல் வார இறுதி நாட்களில் ஒன்றாகச் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவு மற்றும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து தம்பதியர் ஒருவரை ஒருவர் சாதாரணமாக நினைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

First published:

Tags: Marriage, Relationship Tips