காதலுக்கும், ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? குழப்பமாக இருந்தால் இதை படியுங்கள்..!

”திருமணத்தை மீறிய உறவுகள் இன்று அதிகரித்திருப்பதற்கும் இந்த குழப்பமும் ஒரு காரணம்”

காதலுக்கும், ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? குழப்பமாக இருந்தால் இதை படியுங்கள்..!
காதல்
  • Share this:
எதிர்பாலினத்தைப் பார்த்தாலே ஈர்ப்பு உண்டாவது இயற்கை. ஆனால் அதுதான் காதல் என நினைத்து இன்றைய இளைஞர்கள் குழம்பிவிடுகின்றனர். அதனால்தான், இன்று பல காதல்கள் பாதியிலேயே கலைந்துவிடுகின்றன. அதோடு திருமணத்தை மீறிய உறவுகள் இன்று அதிகரித்திருப்பதற்கும் இந்த மனநிலையே காரணம்.

இந்த மனநிலையை மாற்ற முதலில் அவர்களுக்கு காதலுக்கும் ஈர்ப்புக்குமான வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அது என்ன என்று பார்க்கலாம்.

உங்களுக்கு ஒருவர் மீது ஈர்ப்பு உண்டாகிறதெனில் அது சில நேரங்களில் தீவிரமாக மாறலாம். அதாவது அவர்களை எப்போதும் நினைத்துகொண்டே இருத்தல், பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அவர்களைக் குறித்து கற்பனையில் வாழுதல் போன்றவை தோன்றும். இந்த செயல்கள் உங்களை அவர்களுக்காக எதையும் செய்யத் தூண்டும். ஆனால் இந்த உணர்வுகள் என்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. அந்த விஷயத்தை முழுமையாக அடையும் வரைதான் அதன் மீதான ஈர்ப்பு. அதோடு காதலில் ஈர்ப்பு இருக்கலாம். ஆனால் ஈர்ப்பு காதலாக முடியாது என்பதே உண்மை.
அதேபோல் உங்களுக்கு ஒருவர் மீது ஈர்ப்பு உண்டாகிறதெனில் அது உடல் சார்ந்த ஈர்ப்பாகவும், காமமாகவும் தான் இருக்கும் என்றில்லை. அவர்களின் ஆளுமைத் திறன், அவர்களின் அறிவுத் திறமை , குணாதிசயங்கள் போன்றவற்றாலும் அவர்கள் மீது உங்களுக்கு ஈர்ப்பு வரலாம். ஆக இந்த ஈர்ப்பு ஏதோ ஒரு காரணத்திற்காக வந்துள்ளது. ஆனால் காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்டது.

மற்றொரு விஷயம் இந்த ஈர்ப்பு என்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இருக்கும். முன்பு சொன்னதுபோல் உங்களை ஈர்த்தவர் உங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டால், அவருடன் சகஜமாகிவிட்டால் அந்த ஈர்ப்பு காணாமல் போய்விடும். ஆனால் காதலில் அந்த நிலை மாறாது. அது பிரேக்அப்பில் முடிந்தாலும் அந்த காதலை ஆயுளுக்கும் அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்களை மறந்து மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க பல வருடங்கள் ஆகும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading