காதல் தோல்வியை சந்திந்த ஆணை காதலிப்பது சரியா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

மாதிரி படம்

காதல் தோல்வியை சரி செய்ய நினைப்பது, அவருடன் பழக நினைப்பதும் உங்கள் வேலை அல்ல. அப்படி நீங்கள் அவர் காதலால் மனமுடைந்திருக்கிறான் என நீங்கள் வருத்தப்பட்டு மனமுடைந்தால் சரி செய்ய வேண்டியது உங்களைத்தான். அவரை அல்ல..

  • Share this:
கேள்வி : காதல் தோல்வியை சந்திந்த ஆணை தேர்வு செய்து, அவனின் காதல் தோல்வியை சரி செய்து காதலித்தால் அவன் வாழ்க்கை முழுவதும் கைவிட மாட்டான் என்ற எண்ணம் சரியா..? அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன..?

பதில் : இல்லை, நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது போன்ற கருத்துக்கள் சினிமாவைப் பார்த்து வரும் உச்சக்கட்ட கட்டுக்கதை என்றுதான் சொல்லுவேன். அந்தக் கூற்றுக்கு எந்த ஒரு உண்மை ஆதாரமும் இல்லை. இதை நான் எப்படி பார்க்கிறேன் எனில்...காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணை அவனுடைய பலவீனத்தை பயன்படுத்தி இதனால் நீ என் மீது வாழ்க்கை முழுவதும் அளவற்ற காதலை வெளிப்படுத்த வேண்டும் என வேலைக்கு ஆள் வைப்பது போல் காதலை வெளிப்படுத்தும் வேலையாளாக பயன்படுத்துகின்றனர்.

அப்படி அவனின் காதல் தோல்வியை சரி செய்ய நினைப்பது, அவருடன் பழக நினைப்பதும் உங்கள் வேலை அல்ல. அப்படி நீங்கள் அவர் காதலால் மனமுடைந்திருக்கிறான் என நீங்கள் வருத்தப்பட்டு மனமுடைந்தால் சரி செய்ய வேண்டியது உங்களைத்தான். அவரை அல்ல..எனவே உங்களை நீங்கள் சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.பொதுவாகவே பெண்கள் என்பவர்கள் அன்பு செலுத்தும் ஒரு பாலினம் போன்றுதான் நம் பாரம்பரியப் பெண்கள் இருந்துள்ளனர். அதனால் அவர்கள் எந்த ஒரு பிரச்னை அல்லது நபர்களால் பிரச்னை என்றால் உடனே தயாகவோ அல்லது அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பவளாகவோதான் சித்தரித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை பெண்கள் இரண்டு காரணங்களுக்காக செய்ய துணிவார்கள். அதில் முதன்மையான விஷயம் அந்த பிரச்னைக்கு நான் தான் பொறுப்பேற்று முடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம். துணையின் மன ஆரோக்கியத்தை சரி செய்வதும் என் பொறுப்பு என நினைக்கின்றனர்.

படுக்கையில் உங்கள் துணை சோம்பேறியாக இருக்கிறாரா..? சுயநலமாக இருக்கிறாரா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!

ஆனால் அந்த உறவுக்காக அவர்கள் போடும் முயற்சிகளால் விரைவில் அவர்களே களைப்பாகி சோர்ந்துவிடுவார்கள். இதனால் அவர்களுடைய காயப்படுத்தும் சில விஷயங்களை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் போகலாம். நீங்கள் எவ்வளவுதான் புரிய வைத்தாலும் அதை அவர்களால் உணர முடியாது. இது மாதிரியான விஷயங்களை அனுபவிப்பதைக் காட்டிலும் காதலே இல்லாமல் கூட இருந்துவிடலாம்.தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படவர்கள் அவர்களுடைய மன ஆரோக்கியத்திற்குத்தான் முக்கியதுவம் கொடுப்பார்கள். இதில் நாம் அனைவரும் விதிவிலக்கல்ல, நாம் அனைவரும் இது போன்ற மன ஆரோக்கியப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம், பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் இதை சரி செய்ய யாரேனும் ஒரு நபர் வர வேண்டும் என நினைப்பது தவறு. இதற்கு மன நல மருத்துவர்களே ஏராளம் உள்ளனர். உங்கள் வீட்டில் ஏதேனும் மிஷின் பழுதாகிவிட்டால் அதை நீங்களே சரி செய்துவிடுவீர்களா அல்லது அதை மேலும் பழுதாக்கி குப்பையில் போட நினைப்பீர்களா..? இல்லை...அதற்குறிய தொழில்நுட்ப ஆட்களை அழைத்து சரி செய்வீர்களா..? அப்படித்தான் உங்கள் மனதும். எனவே உங்கள் மனதை காயப்படுத்திய காதலிலிருந்து வெளியேற வேண்டுமெனில் மன நல ஆலோசகரை அனுக வேண்டுமே தவிற காப்பாற்ற யாரேனும் வருவார்களா என நினைக்கக் கூடாது.

இரண்டாவது காரணம் ஏன் காயப்பட்ட நபரை நாம் சரி செய்திடக் கூடாது என்ற எண்ணம். ஆனால் உங்களால் அவர்களுடன் எப்போதும் , நினைத்த நேரத்தில் உடன் இருக்க முடியாது. ஏனெனில் உங்களுக்கென சொந்த வாழ்க்கை, சமாளிக்க உங்கள் சொந்த பிரச்சினைகள், உங்கள் சொந்த ஏற்ற தாழ்வுகள் உள்ளன.ஒருவருக்குத் தேவையான கவனிப்பை அவர்களுக்குத் தேவைப்படும்போதெல்லம் வழங்க முடியாது. அவர் நினைக்கும்போதெல்லாம் சந்திப்பதற்கும் , ஆறுதல் தருவதற்கும் நீங்கள் தொழில்முறை மருத்துவர் அல்ல. எனவே அவர் எல்லா நேரங்களிலும் உங்கள் கவனிப்பையும் கவனத்தையும் எதிர்பார்க்கலாம். சில காரணங்களால் நீங்கள் முற்றிலும் நியாயமான தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த கவனிப்பையும் கவனத்தையும் வழங்க முடியாவிட்டால், அது அவர்களைப் பாதிக்கும் மற்றும் அவர்கள் கைவிடப்பட்டதாக உணரக்கூடும்.

முக்கியமாக, உங்கள் துணையை கவனித்துக்கொள்வது ஒரு முழுநேர வேலையாக மாறும். இதனால் உங்களை நீங்கள் இழக்கக் கூடும். உங்களுக்காக நேரமில்லாமல் போகலாம். எனவே இது போன்ற எண்ணங்கள் முற்றிலுமான கட்டுக்கதையே..!

 

 
Published by:Sivaranjani E
First published: