கேள்வி : என் பெண் தோழி ஓரல் செக்ஸை மிகவும் விரும்புகிறாள். அதை அவளுக்கு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறாள். ஆனால் அது எனக்கு சற்று அருவருப்பான விஷயமாக தெரிகிறது. நான் கேள்விப்பட்டிருக்கிறேன்... பெண்குறியின் கருவாய் ( vulva) பகுதியில் முத்தமிட்டு ஓரல் செக்ஸ் செய்வதால் நோய் தொற்று பரவுமென்று... அது உண்மையா..?
பதில் : ஒருமித்த பாலியல் உறவில் அடிப்படை புரிதல் என்பது இருவரின் மகிழ்ச்சியும், திருப்தியும்தான். உங்கள் பெண் தோழியிடமிருந்து நீங்கள் ஓரல் செக்ஸை பெறுகிறீர்கள் எனில் நீங்களும் என்னிடம் அப்படி நடந்துகொள்ள பரிசீலனை செய்யலாமே என்று கேட்பதே மிகவும் தவறு. ஏனெனில் அவள் உங்களுக்குக் கொடுத்த அதே இன்பத்தை அவளும் பெற அனைத்து உரிமைகளும் உண்டு. அதை நீங்களும் செய்வதுதான் இருவரின் முழுமையான உடலுறவு திருப்தி உள்ளது.
அதேப்போல் பெண் உறுப்புக் கருவாய் என்பது ஆண்குறியை விட அருவருக்கத்தக்கதல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால் பெண்ணின் பிறப்புறுப்பை அருவருப்பு என சொல்லும் நீங்கள் இன்னும் பண்படவில்லை என்பதே எனக்குப் புரிகிறது. இதில் என் விளக்கத்தை புரிந்துகொள்ளும் தன்மை கூட இருக்குமா எனத் தெரியவில்லை.
நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் முதல் விஷயம்... தயவுசெய்து..இதுபற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். பெண்குறி கருவாய் பற்றி படித்து உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் பெண் தோழிக்கு எவ்வாறு ஓரல் செக்ஸ் கொடுத்து விருப்பத்தை தீர்ப்பது என கற்று அறிந்துகொள்ளுங்கள். அதில் எந்த அசிங்கமும் இல்லை..அது உடலுறவின் கலை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இரண்டாவதாக...ஆம்..பெண்ணிற்கு ஓரல் செக்ஸ் செய்வதால் பாலியல் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஓரல் செக்ஸ் செய்வதால் மட்டுமல்ல...பொதுவான உடலுறவிலும் தொற்று உண்டாக வாய்ப்புள்ளது. ஏன் அவள் உங்களுக்கு ஓரல் செக்ஸ் செய்தால் கூட உங்களுக்குப் பரவும். உங்களுக்கு முத்தமிட்டாலும் பரவும்.
ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலிக்க முடியுமா? அது உண்மையான காதலாக இருக்குமா..? பதில் இதோ...
எனவே பாலியல் தொற்று பரவாமல் இருக்க சிறந்த வழி காண்டம் பயன்படுத்துவதுதான். உங்கள் பெண் தோழிக்கு ஓரல் செக்ஸ் செய்கிறீர்கள் எனில் ’dental dam’ பயன்படுத்துங்கள். இது உங்கள் வாய்க்கும்,தோழியின் பெண்குறி கருவாய்க்கும் இடையில் ஒரு தடுப்பானாக இருக்கும். அதேசமயம் பாலியல் இன்பத்தையும் பெற முடியும். கிட்டதட்ட இதுவும் காண்டம் போன்றதுதான். இதுவும் காண்டம் போலவே எளிதில் கிடைக்கக் கூடியதுதான். ஆன்லைன், மெடிக்கல் ஷாப் என காண்டம் விற்க்கப்படும் இடங்களில் கிடைக்கின்றன. எனவே காண்டம் வாங்கும்போது இதையும் வாங்கி தோழியை மகிழ்வியுங்கள்.
dental dam பயன்படுத்துவதால் பாலியல் தொற்றை தவிர்க்கலாம். நீங்கள் அடிக்கடி ஓரல் செக்ஸில் ஈடுபடுபவர்கள் எனில் அடிக்கடி தொற்று ஏதும் உள்ளதா என பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இது உங்கள் மனத்திருப்திக்காக...
மேலே குறிப்பிட்ட விஷயத்தைதான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேர்.. பெண் தோழிக்கு ஓரல் செக்ஸ் கொடுப்பது அருவருப்பான விஷயம் கிடையாது. அவளுக்கும் செக்ஸ் இன்ப ஆசைகள் உண்டு. அதை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதேபோல் இந்த இன்பத்தை தர அவளுக்காக நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் என நம்புகிறேன்..