கணவன்-மனைவி உறவில் அன்பு அதிகரிக்க துணையிடம் இவற்றை பேசாதீர்கள்!

துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும் சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது.

news18
Updated: June 29, 2019, 4:27 PM IST
கணவன்-மனைவி உறவில் அன்பு அதிகரிக்க துணையிடம் இவற்றை பேசாதீர்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: June 29, 2019, 4:27 PM IST
புரிதலும், நம்பிக்கையும்தான் உறவின் ஆணி வேர். இந்த புரிதலும் நம்பிக்கையும் நம் துணையிடம் உருவாக்க சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும், சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் துணைக்கு புரிதல் , நம்பிக்கையோடு உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும். துணையிடம் என்னவெல்லாம் சொல்லக் கூடாது?
பழைய காதலன் / காதலி மீது இருக்கும் காதல் : படத்தில் கூறுவதுபோல் காதலித்தவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் பாதி பேருக்கு திருமணமே ஆகாது. திருமணம் ஆன பிறகும் பழைய காதலிலிருந்து வெளிவருவது கடினம். அப்படி இன்றும் பலர் போராடிய நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி உங்களுக்குள் இருக்கும் இந்த உணர்வை ஒரு போதும் தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் துணையிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அவர் உங்கள் மீது அதிக அன்பு, புரிதல் கொண்டவராக இருந்தாலும் இந்த விஷயம் அவரை மிகவும் வருந்தச் செய்யும் அல்லது அது வெறுப்பாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

துணையின் குடும்பம் பற்றிய உங்கள் எண்ணம் : கடினமான சூழலில் உங்கள் துணை இருந்தாலும் எந்த இடத்திலும், எந்த விதத்திலும் அவரின் குடும்பம் பற்றிய கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லது. அவர்களிடம் குறை இருந்தாலும் கூட அதை கேட்பதை உங்கள் துணை விரும்பமாட்டார். சண்டையில்லாத , மகிழ்ச்சியான வகையில் உறவைக் கொண்டு செல்ல நினைத்தால் துணையின் குடும்பத்தை விமர்சிக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தாலும் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.Loading...

மற்றவர் மீதான ஈர்ப்பு: என்னதான் உறவில் உண்மையாக இருந்தாலும், எதிர் பாலினத்தவரைப் பார்க்கும்போது ஈர்ப்பு ஏற்படுவது மனித இயல்பு. இது தவறானதும் அல்ல. அப்படி உங்களுக்கு யார் மீதாவது ஈர்ப்பு இருந்தால் அதை உங்கள் துணையிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். ஒருவேளை உங்கள் துணையை பொறாமை கொள்ளச் செய்வதற்காக சொன்னாலும், அது அவர்களை ஆழமாக பாதிக்கும், தன்னை தாழ்வாக நினைத்துக்கொள்வார்கள்.

நண்பர்கள் பற்றிய கருத்தில் கவனம்: துணையின் குடும்பத்தைபோல் நண்பர்களைப் பற்றி விமர்சிப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. அவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லை, பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், தவறானவர்கள் இப்படி எதுவாயினும் அதை அவரிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அது நிச்சயம் அவர்களுக்கு வருத்தமாக இருக்கும். மகிழ்ச்சி, துக்கம் இரண்டிலும் துணை நின்ற நண்பர்களை தவறாகப் பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இல்லையெனில் உங்களுக்குள்தான் கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி சண்டை வர வாய்ப்புள்ளது.உங்கள் குடும்பத்தாரின் கருத்துகளை திணிக்காதீர்கள்: என்னதான் உங்கள் துணையை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும் அவரைப் பற்றிய சில கருத்துகள் இருக்கலாம். அதை அவர்கள் உங்களிடம் பகிர்கிறார்கள் எனில் உங்கள் துணையிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. உங்கள் துணை பற்றி முழுவதும் தெரியாத உங்கள் குடும்பத்தாருக்கு நிச்சயம் கருத்து வேறுபாடு , விமர்சனம், நடிவடிக்கைகளில் திருப்தியின்மை எதாவது இருக்கலாம். ஆனால் உங்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள். அவர்களின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவருக்காக குரல் கொடுங்கள். உங்கள் அண்ணன், தங்கை, அக்கா போன்றோர் கிண்டலாக ஏதாவது பேசினாலும் அதை பகிர்ந்துகொள்ள வேண்டாம். இது உங்கள் குடும்பத்தினர் மீது அவருக்கு வெறுப்பை உண்டாக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...