கேள்வி : நான் fraysexual தன்மைக் கொண்டவன் என நினைக்கிறேன். நான் தொலைதூரக் காதலில் இருக்கிறேன். என் காதலில் வெளியூரில் இருக்கிறாள். கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். எனக்கு அவளுடன் உடல் ரீதியான நெருக்கம் உருவாகவில்லை. இதை சரி செய்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் ஈடுபட நினைக்கிறேன். நாங்கள் சந்திப்பதற்கு முன் மற்றும் சந்தித்த சில நாட்கள் இவ்வாறு உணரவில்லை. பாலியல் ஈர்ப்பு, பாலியல் நெருக்கங்கள் இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஈர்ப்பு குறைந்து சாதாரண நட்பு ரீதியான பார்வை மற்றும் சிறந்த துணை என்கிற உணர்வுதான் இருக்கிறது. ஆனால் உடல் நெருக்கத்திற்கான ஈர்ப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் விடுமுறைக்காக 2 மாதங்கள் என்னுடன் தங்கியிருந்தாள். நான் நெருக்கமாக இருக்க முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை. அதேசமயம் அளவு கடந்த அன்பு, மரியாதை , மகிழ்ச்சி எல்லாமும் இருக்கிறது. செக்ஸ் உணர்வு மட்டும் தோன்றவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்..!
பதில் : fraysexual என்பதும் ஓரினச்சேர்க்கைக்குள் அடங்கும். மேலும் இது மற்ற பாலுணர்வை போல இதுவும் இயல்பானது. அதேசமயம் இருவரும் அர்த்தமுள்ள, நீண்டகால உறவைத் தேடுவது மிகவும் சிரமமான விஷயம். அதே நேரத்தில் உங்களுக்கு ஆழ்ந்த தொடர்பு உள்ள நபர்களுடன் பாலியல் ஆர்வத்தை வரவழைப்பது கடினம். எனவே fraysexual மனிதரால் காதல் அல்லது நீண்ட காலத்திற்கு இந்த உறவை கொண்டு செல்ல நினைப்பது முடியாத காரியம்.
ஏனெனில் திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது காதலுடன் உடலுறவும் அடங்கியதுதான். திருமண உறவில் மகிழ்ச்சி, திருப்தி எல்லாமே உடலுறவு இல்லாமலும் சாத்தியமில்லை. இது ஒருவிதத்தில் மட்டுமே சாத்தியமாகும். அதாவது தம்பதிகள் இருவரும் அவரவர் எதிர்பார்ப்பு, தேவைகளை புரிந்துகொள்வதால் மட்டுமே சாத்தியமாகும். செக்ஸ் வாழ்க்கையில் முக்கியமே இல்லை என உங்கள் காதலி நினைத்தால் பிரச்னையில்லை. இல்லையெனில் இருவரும் செக்ஸ் தேவைக்காக மாறி மாறி அவரவர்களுக்கான பார்ட்னரை தேட வேண்டிய நிலை உருவாகும்.
ஒரு உறவில் உடலுறவு தேவைப்படுவதும், அதைப் பெற முடியாமல் போவதும் மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடும். உங்கள் காதலியுடன் நீங்கள் வெளிப்படையாக இருப்பதும் அதேசமயம் அவர் உங்களுடன் நேர்மையான உறவில் இருப்பதும் அவசியம். இது சற்று சவாலான விஷயம்தான். எதுவாக இருந்தாலும் நீங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் அவரிடம் இதுபற்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. சொல்லாமல் மறைப்பது உங்கள் இருவருக்கும் எதிர்காலத்தில் நிறைய வலி, விரக்தி, பதட்டம் மற்றும் ஏமாற்றத்தை மட்டும்தான் மிச்சப்படுத்தும்.
இந்த பிரச்னைக்கு சரியான தீர்வு காண்பதும் நெருக்கடியான விஷயம்தான். இல்லையெனில் வெளிப்படையான முறையில் பாலியல் தேவையை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும். இது fraysexual தன்மை கொண்ட உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கலாம். அதேசமயம் உங்களுடன் மட்டுமே காதலிக்கு உடலுறவு கொள்ள விருப்பம் எனில் சற்று சிரமம்தான்.
ஒருவேளை ஒப்புக்கொண்டால் இருவரும் அவரவர் வரம்புகளை கோடிட்டு அதற்குள் பயணிக்க வேண்டும். அதாவது உடலுறவு கொள்ளப்போகும் பார்ட்னருடன் வெறும் செக்ஸுக்கு மட்டும்தான் பழக வேண்டுமா..? அல்லது உணர்வு ரீதியாகவும் நெருங்கலாமா என்பதை இருவரும் ஒப்பந்தம் , விதிமுறைகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல் எத்தனை முறை டேட்டிங் செல்ல வேண்டும் என்பதையும் சமமான முறையில் இருவரும் திட்டமிட்டு அதன் படி உங்கள் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
இந்த மாதிரியான உறவில், நீங்களும் உங்கள் காதலியும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாற முதன்மையான நபர்களாக இருக்க வேண்டும். பிரத்தியேகமாக உணர்ச்சி மற்றும் காதல் விஷயங்களை தேடி உங்கள் உறவை சிலாகித்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் மற்ற நபர்களுடன் உடலுறவு கொள்ளலாம். வெளிப்படையான உறவை கொண்டிருக்கலாம். எதுவாக இருப்பினும் தேர்வு உங்களுடையது. டோஸி ஈஸ்டன் மற்றும் ஜேனட் ஹார்டி எழுதிய 'தி எத்தியல் ஸ்லட்' புத்தகத்தை நீங்கள் படிக்க பரிந்துரைக்கிறேன். இது தற்போதைய உங்கள் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் புத்தகமாக இருக்கும்.
ஓரல் செக்ஸ் செய்யும்போது பாலியல் நோய்த்தொற்று உண்டாகுமா..? அதை தடுக்க வேறேதும் வழிகள் உள்ளதா..? பல்லவியின் பதில் இதோ...
நீங்கள் உங்கள் காதலியுடன் மட்டுமே உறவைத் தொடர நினைத்தாலும் அல்லது உங்கள் மேலே குறிப்பிட்டதுபடி பல உறவுகள் கொண்ட பாலிமரஸ் வாழ்க்கை முறையை பின்பற்ற முடிவு செய்தாலும், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், நீங்கள் எதை அடையாளம் காண நினைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொருத்தது. அதேசமயம் உங்கள் வாழ்க்கையில் அவளுக்கு என்ன அர்த்தம் என்பதை தெளிபடுத்திக்கொள்வதும் அவசியம்.
இது எவ்வளவு கடினமான விஷயம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் உண்மையை எவ்வளவு காலம் மறைக்கிறீர்களோ அதற்கு இணையாக இருவருக்கும் இடையில் தவறான புரிதல்களும் ஏமாற்றங்களும் வந்து இருவருக்கும் மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தும். உங்கள் அன்பின் வலிமையை நம்புங்கள். சத்தியத்திற்கு திடமான உங்கள் அன்பு அந்த உறவை நிலை நிறுத்தும் என நம்புங்கள்...