நீங்க சரியான நபரைத்தான் திருமணம் செய்துள்ளீர்களா..? தெரிஞ்சுக்க இதை படிங்க...!

மனநல மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள். உங்கள் துணையுடன் இணைந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டால் பிரச்னைகளை மனம் விட்டு பேசி தீர்வு காணுங்கள்.

நீங்க சரியான நபரைத்தான் திருமணம் செய்துள்ளீர்களா..? தெரிஞ்சுக்க இதை படிங்க...!
நீங்கள் சரியான ஆளைதான் திருமணம் செய்துள்ளீர்களா..?
  • Share this:
திருமணத்தின் ஆரம்ப நாட்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும். அந்த Made for each other உணர்வை பெரும்பாலானவர்களும் உணர்வார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்லதான் அதில் உள்ள நிறை குறைகள் தெரியும். இந்த பிரச்னை காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான்.

அப்படி திருமணத்திற்கு பிறகு நாம் சரியான துணையைத்தான் தேர்வு செய்துள்ளோமா என்பது பல நேரங்களில் உங்களுக்குள் இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதற்கான விடை இங்கே..!

எப்போதும் சோகம் : எப்போதும் பிரச்னை, சண்டை என உங்கள் திருமண வாழ்க்கை திரும்பிப் பார்த்தாலே பிரச்னைகளாகவும், கண்ணீர் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது கூட நீங்கள் சோகமாக இருக்கலாம்.


வாக்குகளை பின்பற்றாமல் இருத்தல் : எப்போதும் எல்லாவற்றிற்கும் மாறி மாறி விவாதம் செய்துகொண்டிருப்பீர்கள். பலர் சத்திய வாக்குகளை நிறைவேற்றாமல் இருப்பார். இது தினசரி மகிழ்ச்சியையே குலைக்கலாம்.

கெத்தான உடலமைப்பு வேண்டுமா..? வைட்டமின் D சத்து குறித்து அறியுங்கள்..!

முக்கியத்துவமின்மை : எந்த விஷயத்திலும் உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பார். தாமாகவே முடிவெடுப்பார். பொருளாதாரம், குடும்ப விஷயங்கள், எதிர்கால திட்டங்கள் இப்படி எதிலும் உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்.

நேர்மையின்மை : நேர்மை, நம்பிக்கையே திருமண வாழ்க்கையின் அடிப்படை. அடித்தளமே ஆட்டம் காணும் நிலை இருக்கலாம்.

பேசுவதற்கு ஒன்றுமில்லை : இருவரையும் தனி அறையில் பூட்டிவிட்டு பேசிக்கொள்ளுங்கள் என்று விட்டால் என்ன பேசுவது என்று கேள்விகேட்டால் சிக்கல்தான் என்ற நிலை இருக்கிறதா?

என்ன..வாழ்க்கைடா...! வீட்டில் அலுவலக வேலையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா..?

தனிமை : தனிமையே எப்போதும் உங்களுக்கான சிறந்த நண்பனாக துணையிருக்கிறதா?வேறொருவர் மீது ஈர்ப்பு : மற்றவர்கள் மீது உங்களுக்கு ஈர்ப்பு, காதல் உண்டாகிறது எனில் அவருக்கும் உங்களுக்கும் மனதளவிலும், உடலளவிலும் புரிதல் இல்லாமல் இருக்கலாம்.

குறிப்பு : மேலே குறிப்பிட்ட விஷயங்களை நீங்களும் உணர்ந்துள்ளீர்கள் எனில் மனநல மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள். உங்கள் துணையுடன் இணைந்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டால் பிரச்னைகளை மனம் விட்டு பேசி தீர்வு காணுங்கள்.

பார்க்க : 

 

 
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading