• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஷாப்பிங் செய்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் : ஆய்வில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்

ஷாப்பிங் செய்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் : ஆய்வில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்

ஷாப்பிங்

ஷாப்பிங்

ஆண்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம் குறித்து அறிய விரும்புகிறார்கள். ஆனால் பெண்கள் தரத்துடன் வாடிக்கையாளர்களின் கமென்ட்ஸ்கள், ரிவியூக்களை ஆய்வு செய்கின்றன.

  • Share this:
ஆண்களும் பெண்களும் இடையே ஷாப்பிங் செய்யும் பழகத்தில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று கூறுவதில் ஆச்சரியமில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, தேவைகளை பொருத்தி ஷாப்பிங் செய்வது வித்தியாசப்படுகிறது. பெண்கள் கடைக்குள் சென்று, அவர்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டும் தேடுவதால், ஷாப்பிங் செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவு நேரம் செலவிடுகிறார்கள் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.

மேலும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு பொருளை அனைத்து பிராண்டுகளிலும் தேடி, அவற்றை ஒப்பிட்டு பார்த்து, சலுகைகள் ஏதும் கிடைக்கிறதா? என விசாரித்து முழுமையான திருப்தி அடைந்த பின்னரே தங்களுக்கு பிடித்த ஒன்றை வாங்குகிறார்கள்.

கணினி, ஹெட்போன்ஸ் உள்ளிட்ட மின்சார பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது ஆண்களின் வாடிக்கையாக இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் இருப்பது பெண்கள் தான். ஆண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது, அந்த பொருளை மட்டுமே தேடுகிறார்கள். ஆனால் பெண்கள் தங்கள் தேடும் பொருட்களை மட்டும் இல்லாமல் அதனோடு ஒத்த சில வித்தியாசமான பொருட்களையும் தேடுகிறார்கள். இறுதியில் முடிவு எடுக்கும் போது இரு பாலினத்தவர்களும் விலையை கருத்தில் கொள்கின்றன. மேலும் ஆண்கள் விலையுடன் தரத்தையும் ஆராய்கின்றன. அதே சமயம், பெண்கள் ஆபர்கள் அடிப்படையில் வாங்குகிறார்கள்.



ஆண்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரம் குறித்து அறிய விரும்புகிறார்கள். ஆனால் பெண்கள் தரத்துடன் வாடிக்கையாளர்களின் கமென்ட்ஸ்கள், ரிவியூக்களை ஆய்வு செய்கின்றன. இதனால் ஆண்கள் மற்றவர்களின் கமென்ட்ஸ்கள்களை ஏற்கவில்லை என குறிப்பிடவில்லை, அவர்களின் தேடல் வேறுபட்டது. ஆனால் பெண்கள், ஒரு பொருளை வாங்க விரும்பினால் அதற்கு பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் தேவைகளை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

பெண்களிடன் ஆண்கள் விரும்பும் சீக்ரெட் விஷயங்கள் இதுதான்..! அவர்களே பகிர்ந்துகொண்டது..!

நிறங்களை பொறுத்தவரை ஆண்கள் பிரகாசமான நிறங்கள், ஷேடட்(shaded) நிறங்கள் அல்லது கருப்பு நிறம் சேர்க்கப்பட்ட பொருட்களை விரும்புகின்றனர். அதேசமயம் லைட் நிறங்கள், டின்டெட் (tinted) நிறங்கள் அல்லது வெள்ளை நிறத்துடன் கூடிய பொருட்கள் பெண்களால் விரும்பப்படுகின்றன.



பெண்களை விட ஆண்களே தாங்கள் வாங்கிய பொருட்களின் தன்மை குறித்த கமெண்ட்ஸ்கள் ஷேர் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.பொதுவாக ஒரு ஆண் மதுபானங்களை அதிகம் வாங்குவதாகவும், அதே சமயம் ஒரு பெண் அழகுசாதனப் பொருட்கள் அதிகம் வாங்குவதாகவும் கமெண்ட்ஸ்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், ஆண்கள் தங்களின் தேவைக்கேற்ப உடனடியாக பொருட்களை வாங்குகின்றன. ஆனால் பெண்கள் நீண்ட காலம் யோசித்து, பின்னரே பொருட்களை வாங்குகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: