Home /News /lifestyle /

தீர்க்கமாக இருக்க கூடியவர்கள் சரியான முடிவுகளை எடுப்பதில்லை : சமீபத்திய ஆய்வில் தகவல்..!

தீர்க்கமாக இருக்க கூடியவர்கள் சரியான முடிவுகளை எடுப்பதில்லை : சமீபத்திய ஆய்வில் தகவல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

தீர்க்கமான முடிவுகளை எடுப்போர் மற்றும் உறுதியற்ற நிலையில் இருப்போம் ஆகியோர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றிய சமீபத்திய ஆய்வின் தொடக்கப் புள்ளி என்பது பங்கேற்பாளர்களை வேறுபடுத்துவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிவதாகும்.

மனிதர்களின் பண்புகள் மற்றும் குணநலன்களை பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. சில ஆய்வுகள் நம்மை வியக்க வைப்பதாக இருக்கும். அப்படியொரு ஆய்வு தான் தற்போது நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வந்துள்ளன. அதில் தீர்க்கமாக இருக்க கூடிய மனிதர்கள் சரியான முடிவுகளை தங்களது வாழ்வில் எடுப்பதில்லை என்று கூறியுள்ளனர். ஆம், தீர்க்கமானவர்களுக்கு தான் இப்படிப்பட்ட சிக்கல் எழுந்துள்ளது. வழக்கை பயணத்தில் பலவித சிக்கல்கள் வருவது இயல்பு தான். என்றாலும், அதில் யார் சிறந்த முடிவுகளை எடுத்து அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

ஆனால், பலர் இந்தச் சிக்கல்களுடன் போராடுகிறார்கள். இதை எளிய ஆய்வுகளின் படி ஆய்வாளர்கள் செய்து நிரூபித்து உள்ளனர். சிலரை இந்த ஆய்விற்காக எடுத்து கொண்டு அவர்கள் எந்த உணவகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யும்படி ஆய்வை தொடங்கி உள்ளனர். தீர்க்கமாக முடிவெடுக்கும் நபர்கள் தாங்கள் செய்யும் தேர்வுகளில் அதிக நம்பிக்கையுடன் இருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றவர்களை விட முடிவுகளை எடுப்பதில் சிறந்தவர்கள் அல்ல.

தீர்க்கமான முடிவுகளை எடுப்போர் மற்றும் உறுதியற்ற நிலையில் இருப்போம் ஆகியோர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றிய சமீபத்திய ஆய்வின் தொடக்கப் புள்ளி என்பது பங்கேற்பாளர்களை வேறுபடுத்துவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிவதாகும். அதன்படி, தினசரி தேர்வுகள் மற்றும் நடத்தைகள் பற்றிய கேள்வித்தாளை 'ஆம் அல்லது இல்லை' என்கிற முறையில் கொடுத்தனர். இதில் செயல் சார்ந்தவர்கள் செயலில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் மிகவும் தீர்க்கமானவர்கள், நெகிழ்வானவர்கள் மற்றும் துன்பங்களை எதிர்கொள்வதில் தங்கள் நோக்கங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது.



அதுவே, உறுதியற்றவர்கள், பெரும்பாலும் தங்கள் விருப்பங்களுக்கு உறுதியளிக்க போராடுகிறார்கள் மற்றும் தங்கள் கடமைகளை அடிக்கடி கைவிடுகிறார்கள். 723 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு குழுவை கொண்டு இந்த ஆய்வை ஆய்வாளர்கள் செய்தனர். அவர்களில் இருந்த 60 பேர் மிகவும் செயல் சார்ந்த நபர்களாகவும், 60 செயல் சாராத நபர்களாகவும் இருந்தனர். இவர்களை தான் இதற்கான முக்கிய சோதனைகளில் பங்கேற்க தேர்வு செய்செய்தனர்.

உங்களுக்கு இரத்த அழுத்தம் சார்ந்த நோய் பாதிப்பு உள்ளதா..? அப்போ அவசியம் இதை படிங்க..

இந்த இரண்டு குழுக்களுக்கிடையில் சில அறிவாற்றல் செயல்முறைகளை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதன்படி செயலாக்க வேகம் என்பதில், எவ்வளவு வேகமாக ஒருவர் புதிய தகவலைப் பெறுகிறார்கள் என்றும்; முடிவெடுக்கும் நிலை என்பதில் ஒன்றை தேர்வு செய்ய ஒருவர் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும்; ஆரம்ப சார்பு என்பதில் ஒருவரின் தேர்வு சில முன் அறிவால் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்றும்; மெட்டாகாக்னிட்டிவ் உணர்திறன் என்பது ஒருவர் விருப்பத்தின் சரியான தன்மையை அவர் எவ்வளவு துல்லியமாக தீர்மானிக்க முடிகிறது என்றும்; மெட்டாகாக்னிட்டிவ் சார்பு என்பது உங்கள் முடிவைப் பற்றி நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு இருந்தது.



அந்த வகையில், இரண்டு குழுக்களில் உள்ள ஒரே வித்தியாசம், அனைத்து சோதனைகளிலும், செயல் சார்ந்த நபர்கள் தங்கள் தேர்வுகளில் அதிக நம்பிக்கையுடன் இருந்தனர். துல்லியம், வேகம், எச்சரிக்கை, சார்பு அல்லது உணர்திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. எந்த வகையிலும் சிறப்பாகவோ, வேகமாகவோ அல்லது துல்லியமாகவோ இல்லாவிட்டாலும், செயல் சார்ந்த குழு அதிக நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் முடிவெடுக்க முடியாதவர்கள் தேர்வு செய்வதில் எந்த விதத்திலும் மோசமானவர்கள் அல்ல என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஆனால் சில ஆராய்ச்சிகளின் முடிவுகள், தங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்பதற்கான வழியையும் பரிந்துரைக்கிறது. இது ஒருவரின் நம்பிக்கை அடைப்படையில் உருவாகிறது. சிலர் வெற்றிபெறாத இடத்தில் சிலர் வெற்றி பெறுவதற்கு இந்த நம்பிக்கை இடைவெளியே காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Personality Test, Relationship Tips

அடுத்த செய்தி