இந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றுநோய் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. அதிலும் காதலர்களின் வாழ்க்கை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஒருவரை ஒருவர் சந்திக்கமுடியாமல் போனது. இதேபோல புதிய காதலை தேடுபவர்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே டேட்டிங் (Dating) கலாச்சாரம் நாடு முழுவதும் பரவி உள்ளது. மேலும், ஒருவர் தன் துணையை தேட, டிண்டர் (Tinder) போன்று பல்வேறு செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த செயலியில் ஒருவரை லெஃப்ட் அல்லது ரைட் ஸ்வைப் செய்வதன் மூலம் அவரை தேர்ந்தெடுக்கலாம் அல்லது ரிஜெக்ட் செய்யலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருடன் ஏதேனும் ஒரு காபி ஷாப்பில் டேட்டிங் செய்யும் விருப்பமும் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு அதனை தற்போது தலைகீழாக மாற்றியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஒருவரை நேரில் டேட்டிங் செய்வது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. இதனால் டிண்டர் போன்ற டேட்டிங் ஆப்பின் பயன்பாடுகள் குறைந்துள்ளதா என்றால் அதுதான் இல்லை.
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கான நபர்களை தேடியுள்ளனர். இதன் விளைவாக ஒரு விர்ச்சுவல் டேட்டிங் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் இறுதிக்குள் செய்தி அனுப்புதல் மற்றும் ஸ்வைப்பிங் ஆகிய இரண்டும் கணிசமாக அதிகரித்ததாக டேட்டிங் ஆப் நிறுவனமான டிண்டர் அறிவித்துள்ளது. ஏனெனில் ஒரு சாத்தியமான துணையை தேடும் மில்லியன் கணக்கானவர்கள் கொரோனா காரணமாக வீட்டில் சிக்கியுள்ள நிலையில், காபி கடைகளில் நடத்தும் டேட்டிங் உரையாடல்களை, தற்போது வீடுகளில் இருந்தபடியே விர்ச்சுவல் டேட்டிங் முறையில் நடத்தி வருகின்றனர்.
மேலும், டேட்டிங் ஆப்கள் ஆக்கபூர்வமானவை. அது பல்வேறு ட்ரெண்டுகளை பயன்படுத்தி அதன் வாடிக்கையாளர்களை தங்களது ஆப்பில் ஈடுபடுத்த முயற்சி செய்து வருகிறது. இது குறித்து டிண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஐஆர்எல் (In Real Life - IRL) தற்போது இடைநிறுத்தப்பட்ட நிலையில், பயனர்கள் 2020 இன் மிகப்பெரிய கலாச்சார தருணங்களைப் பகிர்ந்து கொள்ள டிண்டருக்கு வருகை தருகின்றனர். எல்லோரும் சமூக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொலைவை கடைபிடித்து வரும் நிலையில், ஒருவருடன் அரட்டை அடிக்க, சந்திக்க, ஹேங்கவுட் செய்ய மற்றும் கிரியேட்டிவ் டேட்டிங் ஹேக்குகள் போன்றவற்றை மேற்கொள்ள எல்லோரும் டிண்டரைப் பயன்படுத்தினர்.
திருமணமான பின்பும் மற்ற பெண்கள் மீது பாலியல் ஈர்ப்பு உண்டாவது தவறா..?
மேலும், செயலியில் உள்ள உறுப்பினர்கள் அவர்கள் யார், அவர்கள் எதைப் பற்றி அக்கறை காட்டுகிறார்கள், மற்றும் அவர்களின் ஆக்கபூர்வமான சுயவிவரங்கள், எவ்வாறு தங்களை ஆற்றல்மிக்கவராக காண்பிக்கிறார்கள் அல்லது 2020ல் முன்பு இருந்ததை விட தற்போது உள்ள விஷயங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த டிண்டர் பயாஸ் ஒரு வழியாக அமையும். அவர்கள் முன்பை விட அதிக வளைவுகளை வீசினாலும்(curveballs), அவர்களால் இன்னும் தங்கள் சொந்த டேட்டிங் விதிகளை நம்பமுடியாத வகையில் வரையறுக்க முடியும்" என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் சிறந்த வகையில் ட்ரெண்டாக மாறிய தொற்றுநோயால் ஈர்க்கப்பட்ட பிக்-அப் லைன்ஸ் மற்றும் டேட்டிங் கீதங்கள், காதல்-தேடுபவர்கள் மிகவும் உற்சாகமல்லாத ஆண்டுக்கு இடையில் எதையும், எல்லாவற்றையும் நேரம் செலவழித்து விவாதித்தல் போன்றவற்றை டிண்டர் ஆவணப்படுத்தியுள்ளது.
விர்ச்சுவல் டேட்டிங் பயன்பாட்டில் மிகவும் பரபரப்பாக இருந்த விஷயங்கள் பின்வருமாறு:
1. மாஸ்க் அண்ட் ஃபிலர்ட்ங்: (MASKED UP AND FLIRTING)
முகக்கவசங்கள் உலகெங்கிலும் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறியதால், டேட்டிங் செய்யும் பயனர்கள் இந்த வார்த்தையையோ மற்றும் இது குறித்த ஈமோஜிகளையோ உரையாடல்களில் முன்பை விட அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். பயனர்கள் தங்கள் டிண்டர் பயாஸின் ஒரு பகுதியாகவே இதைக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல ஃபிலர்ட்ங் செய்வதில் ஒரு பகுதியாக இருக்கும் பிக்-அப் வரிகளும் வெறும் சொற்றொடர்களாக அமையவில்லை. அவை கொரோனா சம்பந்தப்பட்டவையாகவே இருந்தன. அதாவது "கோவிட்டைப் போல இருப்போம், ஒருவருக்கொருவர் பிடிப்போம்", "குவாரென்டைன் & சில்," போன்றவை ஆகும்.
2. பகிரப்பட்ட ஆர்வங்கள் மற்றும் ட்ரெண்டுகள் (SHARED INTERESTS AND TRENDS)
டேட்டிங் உறுப்பினர்கள், ஊரடங்கு காரணமாக பயனர்களின் பயாஸ் மற்றும் உரையாடல்களில் மூழ்கியிருந்தனர். மேலும் இந்த காலத்தில் டல்கோனா காபி, போர்ட் இன் ஹவுஸ் மற்றும் வாழைப்பழ ரொட்டி உள்ளிட்ட பகிரப்பட்ட நலன்களைப் பற்றி பேசினர்.
3. ஆதரவுகள்: (SUPPORTING CAUSES)
காலநிலை மாற்றத்திற்கான கவலைகள், சமூகம் மற்றும் அரசியல் விழிப்புணர் போன்ற சூழ்நிலைகள், இந்த ஆண்டிற்கான உரையாடல்களில் அதிகம் காணப்பட்டன. ஒருவருடன் டேட்டிங் செய்யும் போது இவற்றில் பகிரப்பட்ட நலன்களைக் கண்காணிக்கும் பயனர்களுக்கு இன-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பொருந்தின. கடைசியாக, கேமிங் கூட இந்த ஆண்டு உறுப்பினர்களின் சுயவிவரங்களில் ஒரு பிரபலமாக இருப்பதாகத் தோன்றியது. டெல்லியின் "பாபா கா தாபா" உறுப்பினர்களின் பயாஸில் இதுபோன்ற ஒரு அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சமூக செயல்பாடுகள் பயன்பாட்டு பயனர்களுக்கு அது தொடர்ச்சியான அம்சமாகத் தோன்றியது.