ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கணவன், மனைவி நினைத்தால் பருவநிலை மாற்றத்தை சரி செய்ய முடியும் - ஆய்வு

கணவன், மனைவி நினைத்தால் பருவநிலை மாற்றத்தை சரி செய்ய முடியும் - ஆய்வு

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

தம்பதிகள் காலநிலை மாற்றத்திற்கான கொள்கைகள் குறித்தோ அதன் விளைவுகள் குறித்த விவாதிப்பது காலநிலை மாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பருவநிலை மாற்றம் என்பது நீண்ட காலமாகவே மனித சமூகத்திற்கு பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. தலைப்பில் சொன்னபடி ரொமான்டிக்கான தம்பதியர்கள் இருவர் உரையாடும்போது நிச்சயமாக அங்கு காலநிலை மாற்றம் குறித்து ஏதேனும், ஒரு வகையில் ஒரு தீர்வு உருவாகுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். YALE என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தம்பதிகள் இருவரும் காலநிலை மாற்றம் குறித்து கவலைப்படுபவர்களாக இருந்தால் நிச்சயமாக அது ஒரு தீர்வை நோக்கி செல்வதில் உபயோகமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்த ஆய்வு முடிவுகள் Journal of Environmental Psychology என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து YPCCC என்ற அமைப்பில் உள்ள மேத்யூ கோல்டுபெர்க் என்ன கூறுகிறார் தெரியுமா?. இதற்கு முன்பாக மேத்தி கோல்ட் பெர்க் யார் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மேத்யூ கோல்ட் பெர்க் சூழலியலை ஒட்டி உருவாகும் உளவியல் ரீதியான தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருபவர். இவர் தான் தம்பதிகள் காலநிலை மாற்றத்திற்கான கொள்கைகள் குறித்தோ அதன் விளைவுகள் குறித்த விவாதிப்பது காலநிலை மாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக 758 தம்பதிகளை அவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். இவர்கள் அனைவருமே தங்கள் இணையரின் பருவநிலை மாற்றம் குறித்த கருத்துக்களை ஏற்பவர்கள் அல்லது அதனோடு ஒத்திசைவான கருத்துகளைக் கொண்டவர்கள். இந்த ஆராய்ச்சி குழு பெரும்பாலான தம்பதிகள் பருவநிலை மாற்றம் குறித்த ஒத்த கருத்துடையவர்கள் என தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த யோசனைகளில் தம்பதிகளுக்கு இடையேயான ஒத்திசைவு சதவீதம் 38 ஆகவும், அதே நேரம் பருவநிலை மாற்றம் குடித்த குறித்த நடவடிக்கைகளில் தம்பதிகளுக்கு இடையேயான ஒத்திசைவு சதவீதம் 31 ஆகவும் இருப்பது இந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டது. அதேநேரம் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கும் தம்பதியினருக்கிடையே பருவநிலை மாற்றம் குறித்த நல்ல புரிதல் இருப்பதும் கண்டறியப்பட்டது. பருவநிலை மாற்றம் குறித்த உரையாடல்கள் தம்பதியினருக்கிடையே ஒருவருக்கு ஒருவர் ஆதிக்கம் செலுத்தும் என்பதையே இத்தகைய ஆய்வு முடிவுகள் காட்டுகிறது.

நாம் உண்ணும் இந்த உணவுகள் தான் இதய நோய் அதிகரிக்க காரணமா..! அதிர்ச்சியளிக்கும் தகவல்

YPCCC என்ற அமைப்பு அமெரிக்காவின் புவி வெப்பமயமாதல் குறித்த ஆறு கட்டமைப்புகள் இதை வைத்தே ஆய்வை நடத்தினார்கள். நாம் நிராகரிக்கவே முடியாத அபாயம் தான் பருவநிலை மாற்றம் என்பதையே தான் இந்த ஆய்வு முடிவுகள் சொல்கிறது. பருவநிலை மாற்றம் என்பதை ஏதோ போலியானதாகவோ அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பதாகவோ நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆய்வின்போது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்த தம்பதிகள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருந்தனர்.

இதுவே பருவநிலை மாற்றம் குறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாக இருந்தது. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக பொது மக்களை ஒன்று திரட்டுவதில் ஊடகங்கள் தோல்வியடைந்து விட்டதாக சொல்கிறார் கோல்ட் பர்க். பருவநிலை மாற்றம் குறித்து தீர்வு காணவோ அல்லது அந்த பிரச்சனையை சரி செய்யவோ வரும் நபர் அதனால் பாதிக்கப்படும் மனிதர்கள் குறித்து நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

Yale பல்கலைகழகத்தின் மூத்த அறிவியலாளரான Anthony Leiserowitz பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இறங்குவதை தவிர, அது குறித்த விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்துவது எந்த வகையிலும் பயன்படாது என்கிறார்.

பிளாஸ்டிக் தடை... இதனால் சமையலறையில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன..?

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களோடு ஒப்பிடும்போது அது குறித்து தெரிந்தவர்கள் தங்கள் அன்புடையவர்களுடன் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்பதேயே அவர் வலியுறுத்துகிறார். குறைந்தபட்சம் அன்புடையவர்களோடு இது குறித்து வாதிப்பது பருவநிலை மாற்றம் குறித்த கருத்தை பரவலாக்கும் என்று Leiserowitz நம்புகிறார். பெரும்பாலான மக்கள் பருவநிலை மாற்றம் குறித்து கவலைப்படுவதாகவும் ஆனால் அதே நேரம் அதுகுறித்து யாருடனும் விவாதிப்பது இல்லை எனவும் Goldberg கவலை தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்து மற்றவருடன் பேசுவது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான அணியை பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

First published:

Tags: Climate change, Husband Wife