ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

செக்ஸ் கனவுகள் ஏன் வருகின்றன..? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

செக்ஸ் கனவுகள் ஏன் வருகின்றன..? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

சில நேரங்களில் நமது வித்தியாசமான உணர்வுக்கு பாலியல் தொடர்பான கனவுகள் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் நம்மை பாலியல் கனவுகள் குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்கி விடும்.

சில நேரங்களில் நமது வித்தியாசமான உணர்வுக்கு பாலியல் தொடர்பான கனவுகள் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் நம்மை பாலியல் கனவுகள் குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்கி விடும்.

சில நேரங்களில் நமது வித்தியாசமான உணர்வுக்கு பாலியல் தொடர்பான கனவுகள் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் நம்மை பாலியல் கனவுகள் குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்கி விடும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது வரும் சில திடீர் கனவுகளால் தூக்கத்தை தொலைத்து விடுவோம். பல கனவுகள் அதற்கு காரணமாக இருந்தாலும், சில நேரங்களில் நமது வித்தியாசமான உணர்வுக்கு பாலியல் தொடர்பான கனவுகள் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் நம்மை பாலியல் கனவுகள் குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக்கி விடும்.

நடந்தது வெறும் கனவு தான், உண்மையல்ல நீங்கள் உங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலியை ஏமாற்றவில்லை என்பதை உணர சில நொடிகள் எடுக்கும். பாலியல் கனவுகள் வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாகும். உங்கள் வாழ்க்கை துணையை தவிர வேறு ஒருவருடன் நீங்கள் பாலியல் உறவு கொள்வதை போல கனவு காண்பது இயல்பானது மற்றும் மிகவும் பொதுவானது. நீங்கள் ஏற்கனவே ஒருவருடன் கமிட் ஆகி இருந்தாலும், சிங்கிளாக இருந்தாலும் உங்களது உறவு நிலையை பொருட்படுத்தாமல் அனைவர்க்கும் வர கூடிய இயல்பான ஒன்றாக இருக்கின்றனர் செக்ஸ் கனவுகள்.

ஆனால் கனவின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குள் நீங்கள் கேள்வி கேட்டு கொள்ளும் போது, அவை உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு வர கூடிய சில பொதுவான பாலியல் கனவுகள் மற்றும் அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நண்பருடனான பாலியல் கனவு: உங்கள் நெருங்கிய எதிர்பாலின நண்பருடன் பாலியல் உறவு வைத்து கொள்வது போல நீங்கள் கனவு காண்பது நட்பை கெடுத்துவிடும் என்று அச்சப்படாதீர்கள். நீங்களாக வாய் திறந்து இதை பற்றி உங்கள் நண்பரிடம் சொல்லும் விசித்திர செயலையும் செய்து விடாதீர்கள். ஒரு நண்பரை பற்றிய உங்களது பாலியல் கனவு சில சமயங்களில் உங்கள் உணர்வுகள் நட்புக்கு அப்பால் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நினைத்திருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. ஒருவேளை உங்கள் நண்பர் உங்களை ஈர்க்க நினைத்து நீங்கள் அதை புறக்கணித்திருக்கலாம். ஆனால் உங்கள் ஆழ்மனது அவரை புறக்கணிக்கவில்லை என்று அர்த்தம்.

உயரதிகாரியுடனான பாலியல் கனவு: இது மிகவும் உலகளாவிய கனவுகளில் ஒன்றாகும். உங்கள் உயரதிகாரி ஒருவருடன் நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது போல கனவு காண்பது, உங்கள் ஆழ்மனதில் உயரதிகாரியால் நீங்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதே சமயம் சில நேரங்களில் இது உங்கள் சொந்த வளர்ந்து வரும் சக்தி, தொழில்முறை திறன்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் பற்றிய கனவாக கூட இருக்கலாம். .இறுதியாக நீங்கள் ஒரு உயரதிகாரியாக பொறுப்பு ஏற்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தும் கனவாக கூட இருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் முன்னாள் வாழ்க்கை துணை: உங்கள் முன்னாள் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்வது போன்ற கனவு குழப்பமாக இருக்கலாம். மேலும் பலருக்கு இது முந்தைய உறவை பற்றிய கேள்விகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக தற்போது வேறு நபருடன் புதிய உறவில் இருக்கும் போது. நீங்கள் எதிர்பார்த்த நெருக்கம் இன்னும் கிடைக்கவில்லை அல்லது மனதிற்கு நெருக்கமான உறவுகள் இன்னும் அமையவில்லை என்பதை இதுமாதிரியான கனவுகள் வெளிப்படுத்தலாம். நீங்கள் தற்போது புதிய நபரை உங்கள் வாழ்க்கையில் கொண்டிருந்தால், உங்களின் முந்தைய தோல்வியுற்ற உறவிலிருந்த அதே தவறுகள் மீண்டும் இதிலும் இருக்கலாம். இது நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

குடும்ப உறுப்பினருடனான செக்ஸ் கனவு: ஒரு குடும்ப உறுப்பினரை பற்றிய பாலியல் கனவு காண்பது உங்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்படுத்த கூடியது என்றாலும் இதனால் நீங்கள் ஒரு விசித்திரமானவர் என்பது அர்த்தமல்ல. பொதுவாக இந்த கனவின் அர்த்தம் என்ன என்பதை அறியும் முயற்ச்சியில் அந்த உறுப்பினருடன் உங்களுக்கு என்ன வகையான உறவு இருக்கிறது என்பதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இது மாதிரியான கனவுகள் நீங்கள் குறிப்பிட்ட நபருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். சில நேரங்களில் இது மன்னிப்பு அல்லது ஏற்றுக்கொள்வது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும்.

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா ?

பிரபலங்களுடனான பாலியல் கனவு: பிரபலங்களுடன் நீங்கள் செக்ஸ் வைத்து கொள்வது போன்ற கனவு நீங்கள் அவர்கள் மீது பைத்தியமாக இருப்பதாய் குறிக்கலாம். அவரால் நீங்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால் அவருடன் உறவு கொண்டால் எப்படி இருக்கும் என்பதை யோசிப்பதால் ஆழ்மனதின் மூலம் இந்த யோசனைகளை கனவாக வருகின்றன.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sex Desire, Sex Dreams