ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வேலை இடத்தில் உள்ள பாலின பாகுபாடுகள்.! இதை எப்படி கையாள்வது?

வேலை இடத்தில் உள்ள பாலின பாகுபாடுகள்.! இதை எப்படி கையாள்வது?

பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு

பல ஊழியர்களின் கூற்றுப்படி, இந்தியப் பணியிடத்தில் பாலினப் பாகுபாடு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. நமது சமூக கலாச்சார சூழலில் இது சாதாரண ஒன்றாக இருக்கிறது. மேலும், மக்கள் இதை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் சாதாரணமாக பாலின பாகுபாடு கொண்டவராக இருந்தால், உடனே அதை ஒப்பு கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பாகுபாடு ரீதியாக மோசமாக நடந்து கொண்டவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். பிறகு மீண்டும் இதை செய்யாதீர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல ஊழியர்களின் கூற்றுப்படி, இந்தியப் பணியிடத்தில் பாலினப் பாகுபாடு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சமூக வளர்ப்பில் உள்ளது என்று நினைக்கிறார்கள். இண்டர்வீவ் கன்சல்டிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிர்மலா மேனன் அவர்கள், ஆரம்பகால சமூகமயமாக்கல் பாலினத்திற்கான நமது அணுகுமுறைகளில் மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறுகிறார். இது ஆண்களிடமிருந்து பாலியல் கருத்துகளைத் தூண்டுவது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் இது மிகவும் இயல்பாக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலும் பெண்களை பாலியல் ரீதியாக கூட அடையாளம் காண முடியாமல் செய்கிறது.

இருப்பினும், இன்றைய உலகில், கல்விக்கான அணுகல் மற்றும் சரியான பணியிட நடத்தைகளை வெளிப்படுத்துகிறது. "ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு முறையும் இதை ஊக்கப்படுத்த முன்வர வேண்டும்,” என்றும் நிர்மலா கூறுகிறார். இது போன்ற பாலின பாகுபாடுகள் சார்ந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

தவிர்ப்பதாற்கான வழிகள் : 

நமது சமூக கலாச்சார சூழலில் இது சாதாரண ஒன்றாக இருக்கிறது. மேலும், மக்கள் இதை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் சாதாரணமாக பாலின பாகுபாடு கொண்டவராக இருந்தால், உடனே அதை ஒப்பு கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பாகுபாடு ரீதியாக மோசமாக நடந்து கொண்டவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். பிறகு மீண்டும் இதை செய்யாதீர்கள்.

ஒரு வேளை உங்கள் மீது யாரேனும் பாலின பாகுபாடுகளுடன் நடந்து கொண்டால், சூழலுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அதைக் கையாளுங்கள். உங்கள் மீது பாகுபாடுடன் நடந்து கொள்பவரின் கருத்தை நீங்கள் பாராட்டவில்லை என்று தெரிவிக்க வேண்டும். இந்த உரையாடல் அந்த நபருடன் பிற்காலத்தில் உணர்திறனை அதிகரிக்கவும், நடத்தையை மாற்றவும் உதவலாம். எனினும், அது மீண்டும் மீண்டும் செய்யப்படும் சந்தர்ப்பங்களில், வலுவான கண்டனத்தை தெரிவிப்பது அவசியம். முக்கியமான விஷயம் என்னவென்றால், இது போன்ற பாலின பாகுபாடுகளை கவனிக்காமல் விடக்கூடாது.

ஒருவேளை, இது போன்ற பாலினம் சார்ந்த பாகுபாடுகளை கவனிக்கும் ஒரு பார்வையாளராக நீங்கள் இருந்தால், பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டியது அவசியம். சூழ்நிலையைப் பொறுத்து, நீங்கள் நகைச்சுவையான உரையாடலை பயன்படுத்தி சமாளிக்கலாம். "எல்லாப் பெண்களையும் நீங்கள் குறிப்பிடவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்..." போன்ற உரையாடல் மூலம் இதை உணர்த்தலாம். அதே போன்று அவரின் எண்ணம் பொருத்தமானது அல்ல என்பதை தெளிவுபடுத்தலாம்.

Also Read : பணியிடத்தில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை எப்படி கையாள்வது..?

பாலின பாகுபாடுகள் இல்லாமல் இருப்பதற்கான டிப்ஸ்:

நாம் அனைவரும் பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். நமது சொந்த சமூக கலாச்சார பின்னணியின் பல்வேறு பாதிப்புகளை சுமந்து கொண்டு இருக்கலாம். எனவே, நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பாலின பாகுபாடு என்றால் என்ன, அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் எதிர்மறையான கலாச்சாரத்தை உருவாக்குகிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு கட்டமைக்கப்பட்டவுடன், பாலின பாகுபாட்டின் போக்கை தவிர்ப்பதற்கான வழிகளை நாமே கண்டுபிடிக்க வேண்டும். மேலும், நீங்கள் பாலின பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறீர்களா என்பதை சுட்டிக்காட்டும்படி நீங்கள் நம்பும் ஒருவரிடம் கேட்பது நல்லது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Gender equality, Gender Inequality, Sexually harassed women