கேள்வி : ஆபாசப் படங்கள் , அடல்ட் படங்களிலிருந்து பாலியல் கல்வி , செக்ஸ் தகவல்களை பெற முடியுமா..?
பதில் : துரதிர்ஷ்டவசமாக, நம் பெற்றோர்களும் ஆசிரியரும் வளர்ந்து வரும் விரிவான பாலியல் கல்வியை தரத் தவறியதால், பலர் பாலியல் மற்றும் அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆபாச படங்கள் மற்றும் பிற அடல்ட் திரைப்படங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
இருப்பினும், இது முற்றிலும் நம்பிக்கையான அல்லது துல்லியமான தகவல் அல்ல. ஆபாச திரைப்படங்கள் மற்றும் அடல்ட் திரைப்படங்கள் இரண்டும் உடலுறவின் யதார்த்தத்தை ஒருபோதும் காட்டாது. ஆனால் செக்ஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கற்பனைகளையும், காதல் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆபாச படங்கள் மற்றும் அடல்ட் படங்கள் கற்றுக்கொடுக்கத் தவறும் சில விஷயங்கள் இங்கே...
உடலுறவின் போது ஆணுறை பயன்பாடு அல்லது மற்ற உடலுறவு பாதுகாப்பு விஷயங்கள், பாலியல் தொற்று, நோய் அல்லது கருத்தரித்தல் போன்ற விஷயங்கள் இருக்காது.
விந்து வெளியேறுதல், புணர்ச்சி
அசௌகரியமான பாலியல் நிலை, உடல் எந்த நிலையில் இருக்க வேண்டும் ஆகியற்றை கற்றுத்தராது.
ஆண்கள் விறைப்புத்தன்மையின்மை, உயவு இல்லாமை
உடலுறவு கொள்ள இயலாமை
இதுபோன்ற விஷயங்களை கற்றுத்தர மாட்டார்கள். இருப்பினும் உடலுறவில் ஆக்டிவாக இருக்கும் நபர்கள் இப்படி அடல்ட் படங்கள், ஆபாசப்படங்கள் மூலமே கற்றுக்கொள்கின்றனர். எனவே இது போன்ற திரைப்படங்கள் செக்ஸ் பற்றிக் கற்றுக்கொள்வதற்கான தளம் அல்ல. அப்படி அதிலிருந்து பெறும் தகவல்களையும் சரி தானா என இருமுறை ஆராய்ச்சி செய்வது அவசியம். ஏனெனில் அவை நம்பகத்தன்மை அற்றவை.