Home /News /lifestyle /

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு நல்லதா… கெட்டதா…? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்..!

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு நல்லதா… கெட்டதா…? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்..!

கர்ப்ப காலத்தில் செக்ஸ்

கர்ப்ப காலத்தில் செக்ஸ்

உண்மையிலேயே கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லதா அல்லது கெட்டதா? இதைப் பற்றிய கட்டுக்கதைகள் என்ன என்பதை இந்த செய்தியின் வாயிலாக பார்க்கலாம்.

திருமணமான புதிய தம்பதியர்களுக்கு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் ஏற்படக் கூடிய முதல் சந்தேகம் இதுவாகத்தான் இருக்கும். கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா, கூடாதா? செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் கருச்சிதைவு ஏற்படுமா? இதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இந்த சந்தேகங்களுக்கு வெளிப்படையாக பிறரிடம் விளக்கம் கேட்பதற்கு அவர்களுக்கு தயக்கமாக இருக்கும்.

சரியான தெளிவு இல்லாத காரணத்தால் பல தம்பதிகள் பயத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். குழந்தை பிறக்கும் வரை செக்ஸ் உறவையே தள்ளிப் போடும் தம்பதியர்களும் உண்டு. ஆனால், உண்மையிலேயே கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லதா அல்லது கெட்டதா? இதைப் பற்றிய கட்டுக்கதைகள் என்ன என்பதை இந்த செய்தியின் வாயிலாக பார்க்கலாம்.

கர்ப்ப கால செக்ஸ் பாதுகாப்பானதா..?

கர்ப்ப காலத்தில் உங்கள் துணையுடன் நீங்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானது மட்டுமல்ல, அதை நீங்கள் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் எந்த நிலையிலும், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயமாக செக்ஸ் இருக்காது. கர்ப்பப்பை மிக பலமான சுவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதால் குழந்தை பாதுகாப்பாகவே இருக்கும். கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு கொண்டால் சில நன்மைகள் கிடைக்கும் என்பதே உண்மை. ஆனால், உங்கள் மனைவி மிகுந்த சிரமங்களுக்கு இடையே கருத்தறித்தவர் என்றால், இதுகுறித்து உங்கள் மருத்துவரிடமும் ஆலோசிப்பது நல்லது.



செக்ஸ் உறவால் கருச்சிதைவு ஏற்படுமா..?

உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியான உறவு கொள்வதற்கும், கருச்சிதைவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கரு முறையாக வளரவில்லை என்பதால் கருச்சிதைவு ஏற்படலாமே தவிர, செக்ஸ் காரணமாக அது ஏற்படாது. மிக சிக்கலான மருத்துவ காரணங்களுக்கு மத்தியில் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் மட்டும் கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவை தவிர்ப்பது நல்லது. சிக்கலான கர்ப்பம் கொண்டிருக்கும் சமயத்தில், செக்ஸ் உறவு கொண்டு பெண்கள் ஆர்கஸம் அடைந்தால், அதன் காரணமாக குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிரசவத்திற்குப் பின் எத்தனை நாட்கள் கழித்து மாதவிடாய் வரும்..? மருத்துவர் பதில்....

 

சிறந்த பொசிஷன் கடைப்பிடிக்க வேண்டும்

கர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது எந்த பொசிஷனில் அதை செய்வது என்பதே சிக்கலான விஷயம். பெண்ணின் வயிற்றிலும், உள் உறுப்புகளிலும் அழுத்தம் கொடுக்க கூடிய வகையிலான பொசிஷன்களை தேர்வு செய்யக் கூடாது. பெண்கள் நன்றாக மூச்சு இழுத்துவிடும் வகையிலும், சௌகரியமாக உணரும் வகையிலும் பொசிஷன் தேர்வு இருக்க வேண்டும். உறவின்போது தம்பதியர் இருவருமே நிதானமாக செயல்பட வேண்டும்.



செக்ஸ் உறவை எதனால் தவிர்க்க வேண்டும்..? 

* கர்ப்பப்பையில் பிரச்சினை
* இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பம்
* ஏற்கனவே குறைப்பிரசவம் ஏற்பட்டால் தவிர்க்கவும்
* செக்ஸ் உறவின் போது ரத்த போக்கு
* அம்னியோடிக் திரவ வெளியேற்றம்

செக்ஸ் உறவின் போது அல்லது அதற்கு பின்பு பெண்களுக்கு வலி அல்லது ரத்த போக்கு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Pregnancy Miscarriage, Sex, Sex doubts

அடுத்த செய்தி