• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலுறவு கொள்வதால் உடல் எடை அதிகரிக்குமா? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க....

உடலுறவு கொள்வதால் உடல் எடை அதிகரிக்குமா? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க....

திருமணத்திற்கு பிறகு உடலுறவினால் ஆண்கள், பெண்களுக்கு உடல் எடை கூடும். இது உண்மையா? சரி வாருங்கள் இந்த பதிவில் இதை பற்றி கொஞ்சம் அலசுவோம். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பெண்கள் புது வாழ்வு தொடங்கத்தினால் சந்தோஷமாக காணப்படுவார்கள். இதனால் ஹார்மோன் சுழற்சி மாறுபட்டு சற்று எடை அதிகரித்தது போல் தோன்றும். ஆனால் உடலுறவுக்கும் எடை கூடுவதற்கும் எந்ததொரு சம்பந்தமும் கிடையாது என ஆய்வு கூறுகிறது.

திருமணத்திற்கு பிறகு உடலுறவினால் ஆண்கள், பெண்களுக்கு உடல் எடை கூடும். இது உண்மையா? சரி வாருங்கள் இந்த பதிவில் இதை பற்றி கொஞ்சம் அலசுவோம். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பெண்கள் புது வாழ்வு தொடங்கத்தினால் சந்தோஷமாக காணப்படுவார்கள். இதனால் ஹார்மோன் சுழற்சி மாறுபட்டு சற்று எடை அதிகரித்தது போல் தோன்றும். ஆனால் உடலுறவுக்கும் எடை கூடுவதற்கும் எந்ததொரு சம்பந்தமும் கிடையாது என ஆய்வு கூறுகிறது.

திருமணத்திற்கு பிறகு பெண்கள் புது வாழ்வு தொடங்கத்தினால் சந்தோஷமாக காணப்படுவார்கள். இதனால் ஹார்மோன் சுழற்சி மாறுபட்டு சற்று எடை அதிகரித்தது போல் தோன்றும்.

  • Share this:
திருமணத்திற்கு பிறகு உடலுறவினால் ஆண்கள், பெண்களுக்கு உடல் எடை கூடும். இது உண்மையா? பொதுவாக திருமணத்திற்கு பிறகு பெண்கள் புது வாழ்வு தொடங்கத்தினால் சந்தோஷமாக காணப்படுவார்கள். இதனால் ஹார்மோன் சுழற்சி மாறுபட்டு சற்று எடை அதிகரித்தது போல் தோன்றும். ஆனால் உடலுறவுக்கும் எடை கூடுவதற்கும் எந்ததொரு சம்பந்தமும் கிடையாது என ஆய்வு கூறுகிறது.


பொதுவாக பெண்கள் திருமணத்துக்குப் பின்பு எடை கூடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு நிறைய மகிழ்ச்சி தான் காரணம் என்று மறைமுகமாக பெரியவர்கள் சொல்வதுண்டு. மேலும் PCOS போன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் தற்செயலான தொடக்கமாகவும் கூட பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அப்படி திருமணத்துக்குப் பின் எடை கூடுவதற்கும் உடல் பருமனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இந்த தொகுப்பில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.


தொடர் உடலுறவில் ஈடுபடுதல்: தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து உடலுறவு கொள்வதால் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இன்னும் பலவற்றைச் செய்யலாம் என்று ஆய்வுகளில் கூறுகின்றனர். இருப்பினும் பரவலாகப் பேசப்படும் கருத்து பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தான். நண்பர்களிடைய இதைப் பற்றி பேசும் போது கண்டிப்பாக பெரிய விவாதத்தை ஏற்படுத்திருக்கும்.


பாலியல் & எடை அதிகரிப்புக்கு இடையே உள்ள தொடர்புகள்: உடல் வளர்ச்சிக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் எந்தவித நிரூபிக்கப்பட்ட தொடர்பும் இல்லை. நீங்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் உங்கள் உடல் தோற்றம் வேறுபட்டு வருகிறது என்று யாராவது உணர்த்தலாம். உடலுறவினால் உங்கள் எடை கிலோ கணக்கில் ஏறக்கூடும் என்று கூறுவார்கள் அல்லது நீங்கள் வழக்கமாக இருப்பதை இல்லாமல் உங்கள் உருவம் மாறுபடுவதற்கு உடலுறவு தான் காரணம் என்பதற்கான உண்மையான ஆதாரம் எதுவும் இல்லை.


சிங்கிள்ஸ்கள் குறைவாகவே சாப்பிடுகிறார்கள்: திருமணமாகாதவர்கள் சிங்கிளாக இருப்பதால் அவர்கள் அதிகம் சாப்பிடுவதில்லை ஆனால் திருமணம் ஆனவர்கள் பலரும் திருமணம் செய்து கொண்ட பிறகு வீட்டில் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பது சாதாரணமான ஒன்று. அதேபோல் அவர்கள் பல நேரங்களில் உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது பலவற்றை சாப்பிடுவதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் திருவிழாக்கள், திருமணங்கள் தூக்க நிகழ்வுகளுக்கு திருமணமான பெண்கள் செல்வதால் அங்கே அளவுக்கதிகமான உணவை சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உடல் எடை கூடுவது சகஜமான ஒன்று.


ஹார்மோன்களும் காரணம்தான்: பாலியல் ஹார்மோன்களான டி.எச்.இ.ஏ, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற சில ஹார்மோன்கள் உடல் எடையை அதிகரிப்போடு இணைக்கப்பட்டுள்ளன. ஹார்மோன் சுரப்பியின் உறுதியற்ற தன்மையினால் எடை அதிகரிக்கச் செய்யலாம் அல்லது உடல் பருமன் ஏற்படும் ஆபத்தை உருவாக்கும்.ஹார்மோன் சுழற்சி பல காரணங்கள் ஏற்படுகிறது அதாவது பெண்கள் பருமடையும் போது,மாதவிடாய் சுழற்சியின் போது, மாதவிடாய் நின்ற பின்பு உள்ளிட்ட பலவகையான காரணங்கள் சார்ந்திருக்கிறது. எனவே,ஹார்மோன் சூழற்சிக்கு ஏற்றவாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.


எடையை குறைக்கும் செக்ஸ்:  செக்ஸ் ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். ஒவ்வொரு முறையும் பாலியலில் ஈடுபடும் போதும் கலோரிகளை எரிக்க பயன்படுகிறது. எகா: நீங்கள் 30 நிமிடம் உடலுறவில் ஈடுபட்ட பிறகு உங்கள் உடலில் இருந்து 100 முதல் 200 கலோரிகள் எரிக்கப்படும். நீங்கள் வழக்கமாக உடலுறவில் ஈடுபடுவதால் மன அழுத்தம், பதற்றம் போன்றவைகள் குறைகிறது ஆகையினால் உங்களுக்கு உடல் எடை குறையும்.


முடிவாக நீங்கள் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுவதால் ஆக்ஸிடாஸின், லவ் ஹார்மோன் போன்றவைகள் ஆக்டிவாக செயல்படுத்துகிறது. இதனால் பசி கூட அடிக்கடி ஏற்படாது ஆகையால் நீங்கள் உணவு எடுத்துக் கொள்வது குறைந்துவிடும். எனவே, அடிக்கடி உடலுறவு கொள்வதால், நீங்கள் உங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு பதிலாக, நீங்களும் உங்கள் கூட்டாளருக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: