மணமகளுடன் நடனமாடிய நாய்...! வைரல் வீடியோ

news18
Updated: June 29, 2019, 12:50 PM IST
மணமகளுடன் நடனமாடிய நாய்...! வைரல் வீடியோ
மணமகளுடன் நடனமாடிய நாய்
news18
Updated: June 29, 2019, 12:50 PM IST
செல்லப் பிராணிகள் என்று கூறுவது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. உண்மையிலேயே அது பல குடும்பங்களின் செல்லமாகத்தான் இருக்கிறது. மனிதர்களுக்குக் கூட கிடைக்காத சொகுசு வாழ்க்கை இந்த செல்லப் பிராணிகள் அனுபவிக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

இந்தியர்களைக் காட்டிலும் இந்த செல்லப் பிராணிகளை வளர்க்கும் முறையில் வெளி நாட்டினர் சற்று கூடுதலானவர்கள். செல்லப்பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பது, ஃபேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்குவது , அவற்றிற்கு மனிதர்களைப் போல் பல பயிற்சி வகுப்புகள் கொடுப்பது , நாய்களுக்கென ரெஸ்டாரண்ட் , காரில் தனி இடம், பஞ்சு மெத்தை கொண்ட ஏசி அறை என வெளிநாட்டினர் மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளையும் கவனிப்பார்கள். இந்தக் கலாச்சாரம்தான் ஆடு , மாடு , கோழி மட்டுமே வளர்த்த நம் கலாச்சாரத்திலும் தொற்றிக் கொண்டது.

வெளிநாட்டில் வினோதமாக வேடிக்கை செய்த நாய் ஒன்று மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதாவது லாஞ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சாரா கார்சன் என்னும் பெண் ’மம்மி’ என்ற பெயர் கொண்ட நாயை வளர்த்து வருகிறார். இவர் அமெரிக்காவில் செலிபிரிட்டி நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். அவர் வளர்க்கும் மம்மி நாய் சாராவின் திருமணத்தின் போது பரிசாக நடனம் ஆடி ஆச்சரியப்படுத்தியது.

 

Loading...

View this post on Instagram

 

A post shared by The Super Collies (@thesupercollies) on


அதன் பின் சாராவோடு இணைந்து ஆடிய நடனம்தான் சுற்றியிருந்த மக்களை வெகுவாக ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் ’சோ கியூட்’ என்று லைக்ஸுகளையும் , கமெண்டுகளையும் அள்ளி வீசுகின்றனர். ஏழு வயதான இந்த நாய் ‘America’s Got Talent’ என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
View this post on Instagram

 

A post shared by The Super Collies (@thesupercollies) on


24 வயதான சாராவிடம் நாயின் இந்த பயிற்சி குறித்து டெய்லி மெயில் கேட்டுள்ளது. அதற்கு சாரா “ நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் அணிந்திருந்த வெள்ளை நிற லாங் கவுனில் மம்மியோடு சேர்ந்து எவ்வாறு ஆடுவது என தயங்கினேன். இதற்கு முன்னோட்டப் பயிற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மம்மி மிக அழகாக ஆடி அனைவரையும் வியக்க வைத்துவிட்டது. திருமணப் பெண்ணான என்னைவிட அவன்தான் அங்கு நாயகனாகிவிட்டான் என்று பெருமையாகப் பேசியுள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...