திருமணமான தம்பதிகள் பலருக்கு கர்ப்பம் என்பது சில நேரங்களில் தொலைதூர கனவாக இருக்கிறது. குழந்தைகளுக்காக எங்கும் தம்பதிகளுக்கு IVF போன்ற பல இப்போது பெற்றோராக மாற உதவுகின்றன. என்றாலும் தம்பதிகள் தங்கள் உடலுறவின் போது சரியான பொசிஷனை தேர்வு செய்வது நல்ல வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
கர்ப்பம் தரிக்க வேண்டுமென்றால் ஒவலேஷனின் போது கட்டாயம் உடலுறவு கொள்வது, ஒவலேஷனுக்கு முன்பிருந்தே உடலுறவு கொள்ள துவங்கி அதிக முறை தொடர்பில் இருப்பது, ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது, புகை & மது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது உள்ளிட்டவை பற்றி தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் உடலுறவு கொள்ளும் பொஷிஷனும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளில் பங்கு வகிக்கிறது.
கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம்:
கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மாதவிடாய் சுழற்சியை கண்காணித்து அண்டவிடுப்பு அதாவது ஓவலேஷன் எப்போது இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த நாளுக்கு 5 நாட்கள் முன்னதாகவும், அண்டவிடுப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நாளிலும் தம்பதியர் சேர வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனென்றால் ஓவலேஷனின் போது கருப்பைகள் முதிர்ந்த முட்டையை வெளியிடுகின்றன. எனவே கருத்தரிக்க உடலுறவு கொள்வதற்கு இது சிறந்த நேரமாகும். இந்த நாளில் தான் கருமுட்டை வெளியாகி, அது ஃபலோபியன் குழாய் வழியே கருப்பைக்கு சென்று விந்தணுவை சந்தித்து ஒரு கருவை உருவாக்குகிறது. நல்ல தரமான விந்தணு பெண்ணின் உடலில் சுமார் 5 நாட்கள் வரை வாழ முடியும்.
கருமுட்டை எப்போது வெளிப்படுகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது.?
உதரணமாக ஒருவருக்கு 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி என்றால் பெரும்பாலும் 14-வது நாள் ஓவலேஷன் இருக்கும். ஓவலேஷன் எப்போது என்று வேறு சில வழிகள் மூலமும் கண்டறியலாம். ஏனென்றால் மாதவிடாய் சுழற்சி எல்லோருக்கும் ரெகுலராக இருப்பதில்லை.
- ஓவலேஷன் கிட் பயன்படுத்தலாம்
- ஓவலேஷனின் போது உடல் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்க கூடும்
- பிறப்புறுப்பு வெளியேற்றத்தில் ஏற்படும் மாற்றத்தை (vaginal discharge ) கவனிக்கவும். முட்டையின் வெள்ளை போல தெளிவாக, அடர்த்தியாக வெளியேற்றம் இருக்கும்.
கர்ப்பம் தரிக்க சிறந்த செக்ஸ் பொசிஷன் எது.?
ஓவலேஷனின் போது பெண்ணின் கருப்பை முதிர்ச்சியடைந்த முட்டையை வெளியிடும் அதே நேரம், உடலுறவு கொள்வதன் மூலம் பெண்ணின் உடலுக்குள் கோடிக்கணக்கான விந்தணுக்கள் செல்கின்றன. ஆரோக்கியமான விந்தணு கருமுட்டைக்குள் செல்வதன் மூலம் கர்ப்பம் ஏற்படுகிறது. ஓவலேஷனின் போது உடலுறவை தவிர, ஒரு குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க விந்தணு யோனிக்குள் நுழைவதை உறுதி செய்வது முக்கியம்.
Also Read : பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?
அதே நேரம் எந்த ஒரு குறிப்பிட்ட பொசிஷனும் கர்ப்பம் தரிக்க ஒரு உறுதியான வழி அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்படும் செக்ஸ் பொசிஷன்ஸ் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மிஷினரி (missionary - ஆண் மேலே, பெண் கீழே) மற்றும் டாகி ஸ்டைல் (doggie-style) பொசிஷன்கள் ஆழமாக ஊடுருவி விந்தணுக்களை கருப்பை வாயின் (cervix) அருகில் செல்ல அனுமதிக்கும். இதன் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மோசமான பொசிஷன்:
ஈர்ப்பு விசையின் காரணமாக விந்தணுக்கள் கருப்பையை அடைவதை மிகவும் கடினமாக்கும் எந்த நிலையும் கருத்தரிப்பதற்கு விரும்பத்தகாததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஸ்டாண்டிங் பொஷிஷன் அல்லது பெண் மேலே இருந்து உடலுறவு கொள்ளும் நிலை மோசமானதாக குறிப்பிடப்படுகிறது. உடலுறவுக்கு பின் 15 நிமிடங்களுக்குள் விந்தணுக்கள் கருப்பை வாயை அடைந்து விடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
கர்ப்பத்தில் ஏற்படும் மாற்றங்களை அதிகரிக்க சில எளிய டெக்னிக்ஸ்:
- உடலுறவுக்கு பின் கால்களை உயர்த்துவது
- முதுகை தட்டையாக வைத்து படுத்து கொள்வது
- உறவுக்கு பின் கீழ் முதுகின் அடியில் ஒரு தலையணை வைப்பது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy sex Life, Pregnancy, Sex, Sex Positions