Home /News /lifestyle /

நண்பர்களுக்கு பிரேக்-அப்பா? கவலைப்பட்டு புலம்பும் அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய உதவிகள் இவை மட்டுமே..

நண்பர்களுக்கு பிரேக்-அப்பா? கவலைப்பட்டு புலம்பும் அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய உதவிகள் இவை மட்டுமே..

மாதிரி படம்

மாதிரி படம்

உங்கள் நண்பர் பிரேக்-அப் செய்துவிட்டால் அவர் செய்தது சரிதான் என்றும், அதைப் பற்றி வருத்தம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி, அவர் முடிவை நீங்கள் மேலும் வலுப்படுத்தலாம்.

உங்கள் நண்பருக்கு பிரேக்-அப் ஆகிவிட்டதா? அவருக்காக நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம், காதலுக்கு முன்னர் உங்கள் தோழனோ/தோழியோ ஆழ்ந்து , பிடித்து செய்த விஷயங்களை மீண்டும் அவர்களை செய்யவையுங்கள். அதில் அவர்களை மும்முரமாக ஈடுபடுத்தி வைத்திருங்கள். உங்கள் நண்பர் பிரேக்-அப் செய்துவிட்டால் அவர் செய்தது சரிதான் என்றும், அதைப் பற்றி வருத்தம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி, அவர் முடிவை நீங்கள் மேலும் வலுப்படுத்தலாம்.

நீங்களும் உங்கள் நண்பரும் இணைந்து ஒரு நீண்ட தூர பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரியை சென்று ஒரு பார்வையிடுங்கள். உங்கள் நினைவுகளை பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பருடன் இணைந்து திரைப்படம், கோவில், பார்க் அல்லது பீச் போன்ற பொது இடங்களுக்கு சென்று உங்கள் நண்பரின் மனதை இலகுவாக்க முயற்சி செய்யுங்கள்.

நாட்கள் செல்ல செல்ல பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு ஒரு நார்மலான நிலைக்கு உங்கள் நண்பர் வரும் வரை தொடர்ந்து அவரை கவனித்துக் கொள்ளுங்கள். டேட்டிங் அல்லது புதிய ஒரு காதலை தொடங்க உங்கள் நண்பரை வற்புறுத்த வேண்டாம், ஏனெனில் அந்த உறவுகள் உங்கள் நண்பரை மேலும் மோசமடையச் செய்யலாம். பின்வரும் செயல்களை செய்து பிரேக்-அப் கவலையில் இருந்து உங்கள் நண்பரை விடுவியுங்கள் :

அருகிலேயே இருங்கள் :

பிரேக் அப் ஆன பிறகு பலர் படுக்கையில் படுத்துக்கொண்டு, உறங்காமல் சமூக ஊடகங்களில் வலம் வருகிறார்கள். இதனால் அவர்கள் உண்மையில் தங்கள் முன்னாள் காதலன்/காதலியை பார்க்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் என்ன செய்துக்கொண்டிருப்பார்கள் என்றும் எண்ணி பொழுதை கழிக்கின்றனர். ஆனால் பிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர இது உதவாது. யாரோ ஒருவர் பிரிந்து செல்வதன் மூலம் அவர்களை எண்ணி சிரமப்பட்டு, நாளை கடத்த, சமூக ஊடகங்கள் மூலம் ஆறுதல் தேடுவது உண்மையில் பலனளிக்காது.அவ்வாறு சமூக ஊடகங்களில் ஒருவர் மாட்டிக்கொண்டால், அதில் இருந்து வருவது சற்று கடினமான ஒன்றே. உங்கள் நண்பர்/ தோழி சில மணிநேரங்களுக்கு போனிலிருந்து விலகிச் செல்லுமாறு அவர்களுக்கு நினைவூட்டலாம். அவர்களை வெளியே அழைத்துச் செல்லாம். பூங்கா, சுற்றுலா, அல்லது பைக் ரைடு செய்யலாம். இது அவர்களுக்கு மிகவும் தேவையான மன அமைதியை கொடுக்கும்.

உட்கார்ந்து கேளுங்கள் :

பிரேக் அப்பிற்கு பின்னர் உங்கள் நண்பருடன் அமர்ந்து அவர் சொல்வதை தெளிவாக கேளுங்கள். அவர் பேசி முடிக்கும் வரை எவ்வித குறுக்கீடுகள் இல்லாமல் அவர் சொல்வதைக் கேட்டு உங்களுடைய பதிலை மிகவும் தெளிவாகவும் சிக்கல் இல்லாமலும் இருப்பது மிகவும் முக்கியம். நடந்ததை பற்றி மீண்டும் பேசாமல் நடக்கவிருப்பதை பற்றி நேர்மறையான சிந்தனைகளுடன் பேசத் தொடங்குங்கள். அவரின் காதலியை பற்றிய எந்தவொரு நினைவையும் ஏற்படுத்த வேண்டாம். அவர் மனதில் இருந்து மொத்தத்தையும் கொட்ட விடுங்கள்.

உணர்வுகளை பற்றி எடுத்துக்கூறுங்கள் :

உணர்வுகள் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இயல்பானது மேலும் உணர்வுகள் எப்போதும் நீடித்து இருக்காது என்பதை உங்கள் நண்பருக்கு வலியுறுத்துங்கள். ஒரு நபர் முதலில் கோபப்பட்டாலும் சில நொடிகள் கழித்து அவர் சாந்தம் அடையலாம், சிரிக்கலாம், புன்னகை செய்யலாம், அழலாம் இன்னும் என்னென்னமோ செய்யலாம் பின்னர் அவற்றிலிருந்து வேறு மனநிலைக்கு வந்துவிடலாம். இதுபோலவே, காதலில் பிரிவு என்பது நம்மால் எளிதில் கடந்து வரக்கூடியவை என்ற எண்ணத்தை உங்கள் நண்பரின் மனதில் விதையுங்கள். மனம் சொல்வதை கேட்பதை விட மூளை சொல்வதை கேட்டு நடக்க உங்கள் நண்பருக்கு கற்றுக்கொடுங்கள். பழைய எண்ணங்கள் வராமல் இருக்க நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து நகைச்சுவையான படங்களை பார்க்கவும் வெளியில் செல்லவும் ஆயத்தமாகுங்கள்.நேரமே ஒரு சிறந்த மருந்து :

வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நேரம் ஒரு சிறந்த மருந்து என்பதை உங்கள் நண்பருக்கு கற்றுக்கொடுங்கள். எந்தப் பிரச்சினைகளானாலும் காலப்போக்கில் அவை சரியாகிவிடும் என்ற எண்ணம் மிகவும் முக்கியமானது. சவாலான காலகட்டங்களில் சாதித்தவர்களின் வாழ்க்கை முறைகளை உங்கள் நண்பருக்கு கூறுங்கள். நடந்ததை பற்றி மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தால் மனம் நிம்மதி இன்றி துன்பப்படும், ஆகையால் நேரத்தை நல்ல வழியில் செலவிட உங்கள் நண்பருக்கு சொல்லிக்கொடுங்கள். போட்டித்தேர்வுக்கு தயாரிக்கலாம், வேலையில் கவனம் செலுத்தலாம் படிப்பில் கவனம் செலுத்தி முதல் மதிப்பெண் பெறுவதற்கான உத்வேகங்களை நீங்கள் அவர்களுக்கு அளிக்கலாம்.

தன்னம்பிக்கையை அதிகரியுங்கள் :

முதலில் உங்கள் நண்பரை சோகமான நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திய பின்பு, அவர்களுக்கு அவர்களின் மீது நம்பிக்கை வரும் அளவிற்கான செயல்களை செய்ய கற்றுக் கொடுங்கள். உதவி தேவைப்படும் வேளைகளில் மறுக்காமல்/தயங்காமல் உங்கள் உதவி கரம் நீட்டுங்கள், ஆனால் ஒன்றை நினைவில் கொள்வது முக்கியம், காதல் தோல்வி அல்லது காதலில் பிரிந்தவர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் தங்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு தயார்ப்படுத்திக் கொள்வார்கள். அந்த நிலைக்கு உங்கள் நண்பரை கொண்டு செல்லுங்கள் அவர்களால் அனைத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"

மேற்சொன்ன கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில் உங்கள் நண்பரின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள். எந்த ஒரு செயலுக்கும் முடிவில்லை எந்த ஒரு வயதிலும் சாதிக்கலாம், பிரச்சினைகளை நாமே சமாளிக்கலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது மிகவும் முக்கியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breakup, Love breakup

அடுத்த செய்தி