Home /News /lifestyle /

உங்கள் துணைக்கு உடலுறவில் ஈர்ப்பு இல்லை என நினைக்கிறீர்களா..? உறுதிபடுத்த இந்த அறிகுறிகளை கவனியுங்கள்...

உங்கள் துணைக்கு உடலுறவில் ஈர்ப்பு இல்லை என நினைக்கிறீர்களா..? உறுதிபடுத்த இந்த அறிகுறிகளை கவனியுங்கள்...

பாலியல் உறவு

பாலியல் உறவு

விருப்பமே இல்லாமல் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும்போது ஒரு அவநம்பிக்கை மற்றும் தவறான புரிதல் ஆகியவை காணப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் அனைத்தும் பொருத்தங்களும் மிக சரியாக இருக்கிறது என்றால் அதற்கு சாட்சியாக சிறப்பான தாம்பத்ய வாழ்க்கை மற்றும் அன்யோன்யம் இருக்கும். ஆனால், பாலியல் தொடர்பான ஆசைகளில் உங்கள் இருவரின் எண்ணங்களும் ஒத்துப் போகவில்லை என்றால் மற்ற விஷயங்களும் சிக்கலுக்குரியதாக மாறும்.

குறிப்பாக, விருப்பமே இல்லாமல் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும்போது ஒரு அவநம்பிக்கை மற்றும் தவறான புரிதல் ஆகியவை காணப்படும். சரி, நாம் நமது பார்ட்னருக்கு பொருந்தாத நபராக இருக்கிறோமா என்பதை நாமே எப்படி தெரிந்து கொள்வது. அதற்கான சில அறிகுறிகள் இதோ.

தாம்பத்ய உறவு தேவையற்றது என்று உங்கள் பார்ட்னர் நினைக்கக் கூடும்

உள்ளத்திற்கும், உடலுக்கும் பாலியல் உறவு எந்த அளவுக்கு புத்துணர்ச்சி தரும் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால், உங்களுடன் உறவு வைத்துக் கொள்வதை உங்கள் பார்ட்னர் விரும்பவில்லை என்றால், பாலியல் உறவு என்பதே வெறும் வேடிக்கையானது என்று பேச தொடங்குவார். உங்களை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதற்கான அறிகுறி இது.



அசௌகரியமாக கருதுவது

வீட்டில் தம்பதியர் தனியாக அமர்ந்து படம் அல்லது பாடல் காட்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதில் வரும் காதல் காட்சிகளை கண்டு உணர்ச்சிவசப்பட வேண்டும். ஆனால், அதை யாரோ ஒருவர் அசௌகரியமாக கருதுகின்றார் என்றால், பாலியல் உறவில் அவர்களுக்கு நாட்டமில்லை என்று அர்த்தம்.

படுக்கையறைக்கு வர தாமதம்

அலுவலகத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வருவது, வீட்டிற்கு சீக்கிரமாக வந்தாலும் சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்கு வராமல் வேறு வேலைகளில் தன்னை பிஸியாக வைத்துக் கொள்வது என்பதெல்லாம் உங்களுடனான தாம்பத்ய உறவை தவிர்ப்பதற்கான வழிமுறையாகும்.

விவாகரத்திற்கு பிறகும் உங்கள் துணையோடு சேர்ந்து வாழ விருப்பமா..? தயக்கங்களை உடைக்கும் வழிகள்

பாலியல் குறும்புகளை மறைப்பது :

வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் சின்னதாக தொடங்கும் குறும்புகள் தான் அன்றைய தினம் தாம்பத்ய உறவுக்கு வழிவகை செய்யும். ஆனால், மனதில் இந்த எண்ணம் இருந்தாலும் கூட, அதை வெளிப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.



தொல்லையாக கருதுவது :

உங்கள் பார்ட்னர் தாமாக முன்வந்து பாலியல் குறும்புகளை தொடங்கும்போது, அவர்களை அலட்சியம் செகிறீர்கள் என்றால், உங்களுக்கு அவர்கள் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது என்று அர்த்தம். அவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

முந்தைய பந்தம் நினைவுக்கு வருவது :

நம் வாழ்க்கைத் துணையுடன் தாம்பத்ய உறவில் சேரும் சமயத்தில், முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் மேற்கொண்ட குறும்புகள் உங்கள் மனதில் நினைவலைகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால், உங்கள் பார்ட்னருடன் பாலியல் ரீதியாக நீங்கள் இன்னும் முழுமையாக இணையவில்லை என்று பொருள். அதாவது, பொருத்தமற்ற ஜோடியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sex doubts, Sexual issues

அடுத்த செய்தி