காதல் என்றால் என்ன? இந்தக் கேள்வியை உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு எவரிடமும் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தை கொடுப்பார்கள். ஆனால், இதுதான் காதல் என்று ஒரு சில வார்த்தைகளில் யார் ஒருவரும் வரையறுத்து சொல்லிவிட மாட்டார்கள்.
காதல் என்பது உணர்ச்சிகள் மிகுந்த சிக்கலுக்கு உரிய விஷயமாகும். ஒவ்வொரு மக்களின் பார்வையும் இதில் வெவ்வேறாக உள்ளது. எது தூய்மையான காதல், எது நட்பு அல்லது எது நிலையற்ற உறவு என்பதற்கெல்லாம் திரைப்படங்களில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
காதலுக்கும், உணர்ச்சி வயப்படுதலுக்கும் நூல் அளவு வித்தியாசம் தான் இருக்கிறது. காதலில் இருப்பதாக நீங்களே சொல்லிக் கொண்டாலும் கூட, அது வெறுமனே இனக் கவர்ச்சியாக மட்டும் இருக்கலாம். இதில் எது உண்மை என்பதை நீங்கள் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
உடல் தோற்றத்தை தாண்டியது காதல்
நீங்கள் ஒருவரை காதலிக்கும்போது அவரது உடல் தோற்றத்தை தாண்டிய பல விஷயங்களை ரசிக்க தொடங்குவீர்கள். உங்கள் காதலன் அல்லது காதலி என்பவர் புத்திகூர்மை மிகுந்தவராக, அழகானவராக இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு உணர்ச்சிகரமான பந்தத்தில் நீங்கள் இணைந்திருப்பீர்கள். உதாரணத்திற்கு உங்கள் பார்ட்னரின் குணாதிசயங்கள் குறித்து நீங்கள் பாராட்டத் தொடங்கியிருப்பீர்கள் அல்லது அவர்களிடம் உள்ள தீய பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள்.
அமைதியை இழப்பீர்கள்
உங்களுக்குள் காதல் மலரத் தொடங்கும்போது, குறிப்பிட்ட அந்த நபரை பார்க்கும் சமயங்களில் நீங்கள் காந்தம் போல ஈர்க்கப்படுவீர்கள். வார்த்தைகள் பேச வராது. உடலும் கூட தன்னிலை மறந்து தடுமாறிக் கொண்டிருக்கும். நீண்ட காலமாக அவர் உங்கள் நண்பராக அல்லது தோழியாக இருந்திருக்கக் கூடும். ஆனால், காதல் பிறந்தவுடன் இவையெல்லாம் மாறிவிடும்.
கோபத்தில் இருக்கும்போது உங்கள் பார்ட்னரிடம் இப்படி மட்டும் பேசாதீங்க..!
இனக்கவர்ச்சி மறையலாம், காதல் மறையாது
நீங்கள் வெறுமனே ஒருவர் மீது இனக்கவர்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்றால், அவர்கள் உடனிருக்கும் சமயங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் அவர்களை மறந்து விடுவீர்கள். ஆனால், காதல் என்பது அப்படியல்ல. உடன் இல்லாத சமயத்திலும் அவர்களை நினைத்து நீங்கள் ஏக்கம் கொள்ளத் தொடங்குவீர்கள்.
இந்த சமயத்தில் உங்கள் பார்ட்னர் உடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யத் தொடங்குவீர்கள். அவர்களை நினைத்து மனதுக்குள் பாட்டு படிக்கத் தொடங்குவீர்கள்.
உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்
காதல் வந்த பிறகு நீங்கள் மனம் உடைந்து போக மாட்டீர்கள். மாறாக எந்தவொரு விஷயத்திலும் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட நபராக பேச தொடங்குவீர்கள். உங்களுக்குள் ஒரு நேர்மறையான மாற்றம் தென்படும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியம் பிறக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.