ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அடுத்தவர்களுக்காக மட்டுமே நீங்கள் வாழ்கிறீர்களா..? இதனால் நீங்கள் இழக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்

அடுத்தவர்களுக்காக மட்டுமே நீங்கள் வாழ்கிறீர்களா..? இதனால் நீங்கள் இழக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்

உறவு முறை

உறவு முறை

மக்களை மகிழ்விப்பது என்பது உங்கள் தேவைகளை விட வேறொருவரின் தேவைகளை முன்னிறுத்துவது ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இயந்திரமயமாகி வரும் வாழ்க்கையில் மனிதனுக்கு தான் சிரித்து மகிழவே நேரமில்லை. அப்படியிருக்கும் போது தன்னை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அவர்களை நாம் மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சிலரும் இருக்க தான் செய்கிறார்கள். அத்தகைய நபர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவவும், அவர்களது குட் புக்கில் தனது பெயர் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதனை செய்கிறார்கள்.

பாதுகாப்பின்மை, நிராகரிப்பு மற்றும் சுயமரியாதை இழப்பு போன்ற பிரச்சனைகளை சந்தித்த நபர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களை தனது அன்புக்குரியவர்களாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். மற்றவர்களின் பாசத்திற்கு தகுதியானவர்களாக இருக்க நீங்கள் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மக்களை மகிழ்விப்பதை நிறுத்தினால், அவர்கள் உங்களை கைவிடு விடுவார்கள், கவனிக்க மாட்டார்கள் என்ற எண்ணமும் பிறரை மகிழ்ச்சியாக வைத்திருக்க தூண்டலாம்.

மக்களை மகிழ்விப்பது என்றால் என்ன?

மக்களை மகிழ்விப்பது என்பது உங்கள் தேவைகளை விட வேறொருவரின் தேவைகளை முன்னிறுத்துவது ஆகும். மக்களை மகிழ்விப்பவர்கள் மற்றவர்களுடன் மிகவும் இணக்கமாக இருப்பார்கள் மற்றும் பெரும்பாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும், உதவிகரமாகவும், கனிவாகவும் காணப்படுவார்கள். இருப்பினும், மக்களை மகிழ்விப்பவர்கள் தங்களுக்காக வாதிடுவதில் சிக்கல் இருக்கலாம், இது ஒரு தீங்கு விளைவிக்கும் சுய தியாகம் அல்லது சுய-புறக்கணிப்புக்கு வழிவகுக்கும்

இருப்பினும் பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செய்யும் செயல் சில சமயங்களில் ஆபத்தில் கூட முடியலாம். மக்களை மகிழ்வாக வைத்திருக்க நினைக்கும் நபர்கள் எதிர்கொள்ளும் சில அபாயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்...

மன அழுத்தம்:

ஒரு நபர் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மற்றவர்களுக்காக உதவ முயற்சிப்பவர்கள், நிறைய விஷயங்களை பட்டியலிடவும், செயலாற்றவும் வேண்டியுள்ளது. இப்படி பல விஷயங்களை திட்டமிட்டு வைத்து, பார்த்து பார்த்து பிறரை மகிழ்விக்க எண்ணுவதால், அது நீண்ட கால மன அழுத்தமாக மாறும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக போட்டுள்ள திட்டம் முழுமையடையாமல் கூட போகலாம்.

சுயநல போக்குடன், கோபமாக நடந்து கொள்ளும் வாழ்க்கை துணையை சமாளிப்பது எப்படி..?

செயலற்ற ஆக்கிரமிப்பு:

செயலற்ற-ஆக்கிரமிப்பு நடத்தை என்பது எதிர்மறை உணர்வுகளை வெளிப்படையாக உரையாற்றுவதற்குப் பதிலாக மறைமுகமாக வெளிப்படுத்தும் ஒரு வடிவமாகும். பிறரை திருப்திபடுத்துவதற்காக ஓடிக்கொண்டிருக்கும் நபர், ஒரு கட்டத்திற்கு மேல் தன் மேல் தானே வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்ளலாம். நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்கப்படும் அந்த உணர்வு, சில சமயங்களில் கோபமாக வெளிப்பட்டு, உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சுயமரியாதையை குறைத்துக்கொள்வது:

மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக நேரம் செலவிடுபவர்கள் தாங்கள் விரும்புவதையோ அல்லது எப்படி உணர்கிறார்கள் என்பதையோ யோசித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். பிறரை மகிழ்விக்க நினைப்பவர்கள் எப்போதும் ஒருவகை உணர்ச்சி அழுத்தத்தில் சிக்கியிருப்பார்கள். மற்றவர்களைப் திருப்திப்படுத்த முடியாது அல்லது அவர்களால் நிராகரிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் சுயமரியாதை எண்ணம் குறைவதற்கும், ஆளுமை திறனில் கோளாறு ஏற்படவும் காரணமாக அமைகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Relationship Tips