முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Slap Day முதல் Breakup Day வரை.! காதலர் எதிர்ப்பு வாரம் பற்றி தெரியுமா..?

Slap Day முதல் Breakup Day வரை.! காதலர் எதிர்ப்பு வாரம் பற்றி தெரியுமா..?

Anti-Valentine’s Week

Anti-Valentine’s Week

ஒருவழியாக அனைத்து சிங்கிள்களையும் எரிச்சலடைய செய்த காதலர் தின வாரம் முடிந்து விட்டது. முன்பெல்லா பிப்ரவரி 14 மட்டுமே காதலர் தினம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் 14-ஆம் தேதிக்கு முன்னதாகவே காதலர்தின வார கொண்டாட்டங்கள் தொடக்கி விடுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவழியாக அனைத்து சிங்கிள்களையும் எரிச்சலடைய செய்த காதலர் தின வாரம் முடிந்து விட்டது. முன்பெல்லா பிப்ரவரி 14 மட்டுமே காதலர் தினம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் 14-ஆம் தேதிக்கு முன்னதாகவே காதலர்தின வார கொண்டாட்டங்கள் தொடக்கி விடுகின்றன.

அந்த வகையில் பிப்ரவரி 7 - ரோஸ் டே, பிப்ரவரி 8 - ப்ரப்போஸ் டே, பிப்ரவரி 9 - சாக்லேட் டே, பிப்ரவரி 10 - டெடி டே, பிப்ரவரி 11 - ப்ராமிஸ் டே, பிப்ரவரி 12 - ஹக் டே, பிப்ரவரி 13 - கிஸ் டே, பிப்ரவரி 14 - காதலர் தினம் என கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டம் மற்றும் வாரம் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சிங்கிள்ஸ் கொண்டாடும் ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் எண்டு ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா.!

சரியாக காதலர் தினம் முடிந்த பிப்ரவரி 14-க்கு அடுத்த நாள் முதல் இந்த ஆன்டி-வேலன்டைன்ஸ் வீக் அனுசரிக்கப்படுகிறது. இந்த காதல் எதிர்ப்பு வாரத்தில் ஸ்லாப் டே, கிக் டே, பர்ஃப்யூம் டே, ஃபிளிர்ட் டே, கன்ஃபெஷன் டே, மிஸ்ஸிங் டே, பிரேக்அப் டே உள்ளிட்டவை அடங்கும். காதலர் எதிர்ப்பு வாரம் என்பது தனிமையில் இருப்பவர்கள், மனம் உடைந்தவர்கள் அல்லது காதல் என்ற எண்ணத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

Also Read : PCOS பிரச்சனை உள்ளவரா நீங்க..? சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத உணவுகள்

பிப்ரவரி 15 - ஸ்லாப் டே (Slap Day):

சிங்கிள்ஸ்கள் அல்லது காதலை வெறுப்பவர்கள் கொண்டாடும் காதல் எதிர்ப்பு வாரம் Slap Day-வுடன் தொடங்குகிறது. இந்த நாளின் நோக்கம் தங்களை ஏமாற்றி வலியை தந்த முன்னாள்பார்ட்னருக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பதாகும். அதற்காக அறைய வேண்டும் என்பதில்லை. மாறாக உங்கள் முன்னாள் பார்ட்னரை பற்றி உங்கள் மனதில் மிச்சம் மீதி நினைவுகள் இருந்தால் அவற்றை ஓங்கி அறைந்தார் போல் ஓரங்கட்ட, புதிய பாசிட்டிவான எண்ணங்களை வளர்த்து கொள்ள இந்த நாளை பயன்படுத்தலாம். ஒருவேளை உங்கள் எக்ஸ் உங்களுடன் தொடர்பில் இருந்தால் நேரில் வரவழைத்து அவர்கள் தந்த வலிகளுக்கு மாறாக ஒரு வேடிக்கையான அறையை கொடுக்கலாம். பிரச்சனையாகாமல் பார்த்து கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

பிப்ரவரி 16 - கிக் டே (Kick Day):

இந்த நாள் காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி உங்கள் மனதில் ஏற்படுத்திச் சென்ற அனைத்து காயங்கள் மற்றும் மோசமான நினைவுகளை உங்கள் மனதிலிருந்து உதைத்து வெளியேற்ற வேண்டும்.

பிப்ரவரி 17 - பர்ஃப்யூம் டே (Perfume Day):

பிப்ரவரி 17-ல் அனுசரிக்கப்படும் பர்ஃப்யூம் டே என்பது சிங்கிளாக இருப்பவர்கள் தங்களை தாங்களே காதலித்து கொள்ள மற்றும் மேம்படுத்தி கொள்ள அனுசரிக்கப்படும் நாள் ஆகும். ஷாப்பிங் சென்று தனக்கு பிடித்த வாசனை திரவியங்களை வாங்க திட்டமிடும் பிரத்யேக நாள் தான் இந்த பர்ஃப்யூம் டே. இந்த நாளில் லவ்வர் இன்றி தனிமையில் இருப்பவர்கள் தங்களுக்கென வாசனை திரவியங்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

பிப்ரவரி 18 - ஃபிளிர்ட் டே (Flirt Day):

காதல் எதிர்ப்பு வாரத்தின் பின்னணியில் உள்ள முழு யோசனையும் காதலை விட்டு விலக வேண்டும் என்பது தான். எனினும் ஃபிளிர்ட் டே கொஞ்சம் வித்தியாசமான நாள் தான். ஏனென்றால் இந்த நாளில் சிங்கிளாக இருக்கும் ஒருவர் புதியவருடம் இணைய விரும்பும் விருப்பத்தை வெளிப்படுத்த அர்பணிக்கப்பட்ட நாள். இருப்பினும் இந்த நாள் எப்போதும் ஒரு காதல் கோணத்தை கொண்டிருக்காது. எளிமையாக சொல்வதென்றால் உங்கள் க்ரஷுடன் ஊர் சுற்ற முற்றிலும்அர்பணிக்கப்பட்ட நாளாகும்.

Also Read : காதலர் தினத்துக்கு ஆண்களே அதிகம் பரிசுகள் கொடுக்கிறார்கள் - சர்வே முடிவு..!  

பிப்ரவரி 19 - கன்ஃபெஷன் டே (Confession Day):

ஒருவர் தனது மறைத்து வைத்திருக்கும் உணர்வுகளை தனக்குப் பிடித்த ஒருவரிடம் வெளிப்படுத்தும் நாள் இது. பிப்ரவரி 19 அன்று கொண்டாடப்படும் இந்த நாள். விரும்பும் நபரிடமிருந்து நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உங்கள் எல்லா குணங்களையும் ஒப்பு கொள்ள இது ஒரு சிறந்த நாள்.

பிப்ரவரி 20 - மிஸ்ஸிங் டே (Missing Day):

மிஸ்ஸிங் டே என்பது காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஆறாவது நாளாகும். இந்த நாளில் நீங்கள் விரும்பும் ஒருவரை நீங்கள் எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள் என்பதை அவரிடமே சொல்லலாம். ஒரு சில தங்கள் எக்ஸ் லவ்வரை எப்படி மிஸ் செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இந்த நாளை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

பிப்ரவரி 21 - பிரேக்கப் டே (Breakup Day):

இந்த நாள் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்க கூடிய நபருடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புபவர்கள் அல்லது தங்கள் கடந்தகால உறவை முற்றிலும் தூக்கி எறிய விரும்புபவர்களால் கொண்டாடப்படுகிறது.

First published:

Tags: Valentine's day, Valentine's Gifts, Valentine's Week