முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ”இனிமேல் என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்” - திருமணத்திற்கு பின் ஆலியா பதிவு..!

”இனிமேல் என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்” - திருமணத்திற்கு பின் ஆலியா பதிவு..!

திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அலி பட் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அலி பட் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அலி பட் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அறுசுவை உணவு மற்றும் கோலாகல கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி பொதுவாக திருமணங்கள் முழுமை அடைவதில்லை. அதுவும் பிரபலங்களின் திருமணங்கள் என்றால் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் ஆடம்பரங்களுக்கு குறைவே இருக்காது. ஆம், எல்லோரும் எதிர்பார்த்தபடியே ரன்பீர் கபூர் மற்றும் அலிபா பட் இடையேயான திருமணம் நிறைவு பெற்றுள்ளது. மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலை  திருமணம் நடைபெற்றது.

திருமணம் குறித்த பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அலிபா பட் பகிர்ந்து கொண்டார். தனது கணவருடன், தனித்த ஒரு வழியில் புதுமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாக அவர் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அலியா பட் வெளியிட்டுள்ள பதிவில், “ இன்றைக்கு வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் எங்களை சூழ்ந்து நிற்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் காதலை தொடர்ந்த அதே பால்கனியில் இப்போது திருமணம் செய்து கொண்டோம்

எங்கள் இருவருக்குமான நினைவுகள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன. இத்தகைய சூழலில், இருவரும் இணைந்து நினைவுகளை உருவாக்குவதற்கு இனியும் நாங்கள் காத்திருக்க முடியாது. அன்பு, சரிப்பு, ஆழ்ந்த அமைதி, இரவு நேர திரைப்படங்கள், சின்ன சின்ன சண்டைகள், வைன் பார்ட்டிகள் மற்றும் சைனீஸ் உணவுகள் என ஏராளமானவற்றை திட்டமிட்டிருக்கிறோம்.

வாழ்வின் உன்னதமான இந்தத் தருணத்தில் எங்கள் மீது அன்பு செலுத்திய, எங்கள் வாழ்வில் விளக்கேற்றிய அனைவருக்கும் நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார். அலிபா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவருமே உணவுப் பிரியர்கள் என்ற நிலையில், வைன் மற்றும் சைனீஸ் உணவுகள் ஆகியவற்றின் மீது அளவற்ற பற்று கொண்டுள்ளனர்.

திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அலி பட் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவற்றில் இருவரும் காதலோடு முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. சுமார் 99 லட்சத்து 81 ஆயிரம் பேர் அந்த படத்தை லைக் செய்துள்ளனர்.

https://www.instagram.com/p/CcVXto2sydQ/?utm_source=ig_embed&ig_rid=9acc51bb-9d52-4468-a7be-acbfc8f9a394

புதுமணத் தம்பதியர்களை தீபிகா படுகோனே, கத்ரினா கைஃப், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்தியுள்ளனர். இதில், ரன்பீர் கபூர் இதற்கு முன்பு தீபிகா மற்றும் கத்ரினா ஆகியோருடன் வெவ்வேறு சமயங்களில் காதலில் இருந்தார். இந்நிலையில், தீபிகா ரன்வீர் சிங்கையும், கத்ரினா விக்கி கௌஷாலையும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து ரன்பீர் மற்றும் அலிபா பட் இருவரும் காதலித்து வந்தனர்.
 
View this post on Instagram

 

A post shared by TimesFood (@toifood)புதிய படம் வெளிவருகிறது

ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் ஆகிய இருவரும் இணைந்து, இயக்குநர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் பிரமாஸ்திரா என்ற படத்தில் நடித்துள்ளனர். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

First published:

Tags: Alia Bhatt, Marriage Life, Ranbir Kapoor, Relationship Tips