முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எல்லாம் முடிந்தது... இனி இருவரும் பிரிந்து போவதுதான் சரியான முடிவு என உணர்த்தும் அறிகுறிகள்..!

எல்லாம் முடிந்தது... இனி இருவரும் பிரிந்து போவதுதான் சரியான முடிவு என உணர்த்தும் அறிகுறிகள்..!

காதலர்கள்

காதலர்கள்

நம்முடைய உணர்வு எப்பொழுதும் எப்போதும் பொய் சொல்லாது. உங்கள் உள்ளுணர்வு, உங்கள் உறவைப் பற்றி எதுவுமே கூறவில்லை, இது சரிவரும், இது சரியாகும் என்பது பற்றி எந்த வித அறிகுறிகளையும் காட்டவில்லை என்றால் அது நீங்கள் பிரிவதற்கான நேரம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகள், வாக்கு வாதங்கள் இல்லாத எந்த உறவுமே இருக்காது. குறிப்பாக, காதலிப்பவர்கள் திருமணம் ஆனவர்கள் என்று வரும்பொழுது அவர்கள் தினமும் ஒருசில பிரச்சனைகளை எதிர்கொள்வது வழக்கம் தான்.

ஆனால் சில நேரத்தில் எவ்வளவு தான் பொறுத்துக் கொள்வது, நான் மட்டும் விட்டுக் கொடுப்பது, இது சரி வரவே இல்ல, இனிமேல் தொடர முடியாது என்று நினைக்கும் அளவுக்கு பிரச்சனைகள் தீவிரமாகலாம். இது பிரிவதற்கான நேரம் என்பதை ஒருசில அறிகுறிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் எதையும் உணரவில்லை :

நம்முடைய உணர்வு எப்பொழுதும் எப்போதும் பொய் சொல்லாது. உங்கள் உள்ளுணர்வு, உங்கள் உறவைப் பற்றி எதுவுமே கூறவில்லை, இது சரிவரும், இது சரியாகும் என்பது பற்றி எந்த வித அறிகுறிகளையும் காட்டவில்லை என்றால் அது நீங்கள் பிரிவதற்கான நேரம். அதை பற்றி நீங்கள் பரிசீலனை செய்யலாம் என்று அர்த்தம்.

நீங்கள் கூறுவதை மதிப்பதே இல்லை :

அன்பு பாசம் என்பதையெல்லாம் தாண்டி, ஒருவரை ஒருவர் மதிப்பதும் உறவின் அடிப்படையாகும். ஆனால் நீங்கள் கூறுவதை உங்கள் கணவனோ மனைவியோ மதிப்பதே இல்லை, அதை காது கொடுத்து கூட கேட்பதில்லை என்றால், உறவில் உங்களுக்கு என்ன இடம் இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து அதற்கு ஏற்றார் போல செயல்பட வேண்டும்.

உங்களுக்கு பிரைவசி என்பதே இல்லை :

கணவன் மனைவி மட்டுமல்லாது எந்த உறவாக இருந்தாலும் அவர்களுக்கென்று தனிப்பட்ட பிரைவசி இருப்பது மிக மிக அவசியம். ஆனால் உறவில் உங்களுக்கான அந்த ஸ்பேஸ், தனிமை மற்றும் பிரைவசி இல்லை என்பது ஆரோக்கியமான உறவுக்கான அறிகுறி இல்லை.

நீங்கள் மற்றவரின் கட்டுபாட்டில் இருக்கிறீர்கள் :

நீங்கள் எந்த விதமான சொந்த முடிவையும் எடுக்க முடியாமல் உங்களுக்கு பிடித்ததை கூட செய்ய முடியாமல் மற்றவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறீர்கள் என்றால், நீங்கள் அடிமை போல் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இது உறவை முறித்துக் கொள்வதற்கான நேரம் என்பதை குறிக்கிறது.

உங்களை உறவு என்ற பெயரில் abuse செய்கிறார்களா..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்...

உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது :

நீங்கள் மற்றருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது மற்றவருக்கு பயந்து ஆனால் உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை செய்வீர்கள். எனவே இது உங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தி விடும். இவ்வாறு வெறுப்பு ஏற்படும் பொழுது உங்களுடைய தன்னம்பிக்கை குலைந்து, அது உங்கள் எதிர்கால வாழ்க்கையையே தீவிரமாக பாதிக்கலாம்.

நீங்கள் தனியாக இருக்க பயப்படுகிறீர்கள் :

நீங்கள் எப்பொழுதுமே மற்றொருவரின் நிழலிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஒரு சின்ன விஷயத்தைக்கூட உங்களால் முடிவு செய்ய முடியாது, அல்லது சில மணிநேரம் கூட உங்களால் தனித்து இருக்க முடியாது, இயங்க முடியாது என்பது உங்களுக்கான அடையாளத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்பதை குறிக்கிறது. இவ்வாறு நீங்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

வாழ்க்கை துணையை பிரிந்தபின் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆலோசனை..!

கடந்த காலத்தில் வாழ்ந்து வருகிறீர்கள் :

நிகழ்காலத்தில் உங்களுக்கு ஏகப்பட்ட பொறுப்புகளும் கடமைகளும் இருந்தாலும் நீங்கள் முழுக்க முழுக்க கடந்த கால நினைவுகளிலேயே வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிகழ்காலத்தில் நீங்கள் விரும்பிய வாழ்க்கை அமையவில்லை என்று அர்த்தம். அதை சரி செய்ய முடியாவிட்டால், பிரிவைப் பற்றி சிந்திக்க வேண்டும்!

கமிட்மென்ட் இல்லாத உறவு :

ஒரு சிலர் நல்ல புரிதல் இல்லாமல், ஆழமான உறவை வளர்த்துக்கொள்ள விரும்பாமல் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல், இருக்க விரும்புவார்கள். அத்தகைய உறவில் இருந்து உடனடியாக விலகிவிட வேண்டும்.

ஒரு பக்க உறவு :

நீங்கள் மட்டுமே உறவு நிலைக்க நீடிக்க எல்லா முயற்சியும் மேற்கொள்வீர்கள். உங்கள் பார்ட்னர் எதையும் செய்யாமல் இருந்தால், அவர் உங்களுக்கானவர் இல்லை.

First published:

Tags: Relationship Fights, Relationship Tips