• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 'I Love You'னு சொன்னால்தான் காதலிப்பதாக அர்த்தமில்லை..! இப்படியும் காதலை வெளிப்படுத்தலாம்

'I Love You'னு சொன்னால்தான் காதலிப்பதாக அர்த்தமில்லை..! இப்படியும் காதலை வெளிப்படுத்தலாம்

மாதிரி படம்

மாதிரி படம்

காதல் என்பது அழகான மற்றும் சிக்கலான உணர்ச்சியாகும், இது உங்கள் இதயத்தையும் மனதையும் ஈர்க்கிறது. உங்களுக்கு ஒருவித பரவசத்தை அளிக்கிறது.

  • Share this:
காதல் என்பது ஒரு அரிய உணர்வு. இதை எளிதில் ஒருவரால் வெறுமனே விளக்க முடியாது. மேலும் காதல் என்பது அழகான மற்றும் சிக்கலான உணர்ச்சியாகும். இது உங்கள் இதயத்தையும் மனதையும் ஈர்க்கிறது. உங்களுக்கு ஒருவித பரவசத்தை அளிக்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்களின் அன்றாட செயல்களின் மூலம் இந்த உணர்வை மற்றவர்களுக்கு பல வழிகளில் தெரிவிக்கின்றனர்.

இது பல்வேறு சைகைகள், தொடுதல் அல்லது வேறு ஏதேனும் செயல் மூலம் இருக்கலாம். இருப்பினும், இன்றைய நாளில் ஆன்லைன் டேட்டிங் மூலம் இளைஞர்கள் தங்கள் காதலை ஒப்புக்கொள்வதற்காக SMS செய்கின்றனர். தொற்றுநோய் இப்போது நம்மை விட்டு விலகுவதாக இல்லை. அதோடுகூட பல இடங்களில் ஊரடங்கும் நிரந்தரமாக இருப்பதால், ஒருவரை சந்தித்து உங்கள் அன்பை நேரில் ஒப்புக்கொள்வது கடினம். சமூக இடைவெளி விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதால், இப்போது காதலர்கள் அடிக்கடி சந்திப்பதும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதும் கடினம்.

GIFS மற்றும் ஈமோஜிகளைப் பயன்படுத்தவும் : வார்த்தைகளின் மூலம் அன்பை வெளிப்படுத்த நாம் அடிக்கடி வெட்கப்படுகிறோம். சொற்கள் சில நேரங்களில் நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் நியாயப்படுத்தாது, அவ்வாறான நிலையில், உங்கள் அன்பை வெளிப்படுத்த நீங்கள் ஈமோஜிகள் அல்லது ஜிஃப்களைப் பயன்படுத்தலாம்.

பாராட்டு முக்கியம் : ஏதாவது நல்ல விஷயம் அவர்கள் செய்தால் அவரை மனதார பாராட்ட வேண்டும். அனைவருக்கும் தெரியும்படி பாராட்ட வேண்டும். உங்களின் பாராட்டுக்கு அவர்கள் ஏங்கி இருப்பார்கள். சிறு சிறு விஷயங்களையும் ஊக்கப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் காதலி அல்லது காதலன் ஏதேனும் நல்ல காரியங்கள் செய்தால், அவரை ஊக்குவித்து பாராட்டுவது முதல் ஆளாக நீங்கள்தான் இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.

அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து அவர்களின் மேல் உங்கள் அன்பை காட்ட வேண்டும். நிச்சயமாக நீங்கள் அவர்களை ஒவ்வொரு விஷயத்திற்கும் ஊக்குவித்து பாராட்டி கொண்டிருந்தால் அது திரும்ப உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை நீங்கள் அவர்கள் என்ன நல்ல விஷயம் செய்தாலும் அவர்களை பாராட்டாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு நீங்கள் இருந்திருந்தால் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். நாம் என்ன செய்தாலும் நம்மை கண்டு கொள்ளவே மாட்டார் என்கிற எண்ணம் அவர்களுக்கு உள்ளே வரும்.

அந்த எண்ணம் சிறிது சிறிதாக உங்களின் மேல் வெறுப்பை உண்டாக்கும். அதேநேரம் அவர்களின் சிறிய சிறிய விஷயங்களை வேறு யாராவது பாராட்டினால் அவர்களின் உள்ளம் அவர்களின் மீது அன்பை செலுத்தும். இது ஒரு இயல்பான காரியம். இது மனது சம்பந்தப்பட்டது. எனவே அவர்கள் நல்ல காரியம் எதுவும் செய்தால் நமக்கு அது பிடித்திருந்தால் மனதார பாராட்ட வேண்டியது

மெசேஜ் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள் : எல்லோருக்குமே மற்றவரிடம் பேச மிகவும் பிடிக்கிறது. அப்படி பேச்சு பிடிக்காமல் போய் இருந்தால் இந்தியாவில் இத்தனை செல்போன் நிறுவனங்கள் லாபத்தில் இயங்குமா என்ன? அதனால் உங்கள் துணையிடம் அமர்ந்து போனில் பேசுங்கள். நீங்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்க ஒருவர் இருக்கிறார் என்னும் உணர்வே உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். அதேபோல அவர் சொல்வதையும் நீங்கள் முழுதாகக் கேட்டு அதுகுறித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது நார்மல் போன் காலாக இருக்கலாம், SMS ஆக இருக்கலாம்.

உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் : அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும், நீங்கள் இருக்கும் அதே மனநிலையில் எப்பொழுதும் அவரும் இருப்பார் என்று அறிந்துகொண்டு அவர்களை தவறாக புரிந்து விடக்கூடாது. நீங்கள் ஒருவேளை சந்தோஷமான மனநிலை இருந்து, அவர் சோகமாகவும் கோபமான மனநிலையில் இருந்தால், உடனே கோபப்படுகிறாய், நீ என்னிடம் சரியாக பேசுவதில்லை என்று அவருடன் சண்டை போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டு அறிந்து அவர்களின் பிரச்சினைக்கு ஒரு ஆறுதலாக நீங்கள் இருக்க வேண்டும். அப்பொழுது அவர்களின் மனநிலை மாறி அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்று எண்ணம் அவர்களுக்குள் வரும் பொழுது உங்கள் மேல் உள்ள அன்பு அவருக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விரைவான பதில்களைக் கொடுங்கள் : உடனுக்குடனான வேகமான பதில்கள் எப்போதும் யாருக்கும் பிடிக்கும். விரைவான பதில்களைக் கொடுப்பது, அவர்களுடன் பேச நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதையும், அவர்களுடன் டேட்டிங் செய்வதற்கான நோக்கங்களில் நீங்கள் ஆர்வமாக இருப்பதையும் காட்டுகிறது.

ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்வதற்கு முன்பாக, உங்கள் மீது சிறு அளவிலாவது அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு 'ஐ லவ் யூ' சொல்லுங்கள். அதையும் மேற்சொன்ன டிப்ஸ்களை கொண்டு மெசேஜ் மற்றும் மேலே சொல்லப்பட்ட வழிகள் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: