• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அப்பா தன் மகனுக்கு கற்றுத்தர வேண்டிய அடிப்படையான 7 விஷயங்கள்..!

அப்பா தன் மகனுக்கு கற்றுத்தர வேண்டிய அடிப்படையான 7 விஷயங்கள்..!

அப்பா மகனுக்கு கற்றுத்தர வேண்டிய விஷயங்கள்

அப்பா மகனுக்கு கற்றுத்தர வேண்டிய விஷயங்கள்

ஒருவரை சந்திக்கும்போது உறுதியான கைகுலுக்கல், கண்களை பார்த்து பேசும் பழக்கம், மரியாதை செலுத்துவது, மற்றவர்களின் கருத்துக்களை கேட்பது ஆகிய விஷயங்கள் எல்லாம் உங்கள் மகனின் இளம் வயதிலேயே நீங்கள் சொல்லித் தரவேண்டும்.

  • Share this:
குழந்தைகளின் வாழ்வில் அப்பாக்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. அம்மாக்களுக்கு சமமாக குழந்தை வளர்ப்பில் குழந்தை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அப்பாக்களும் பங்கெடுக்க வேண்டும். அதைத் தவிர்த்து, அப்பாக்களுக்கென்று ஒரு சில கடமைகள் உள்ளது. அம்மாக்கள் எப்படி பெண் குழந்தைக்கு சில விஷயங்களை கற்றுத் தர வேண்டுமோ. அதே போல அப்பாக்களும் ஆண் குழந்தைக்கு ஒரு சில விஷயங்களை கற்றுத் தர வேண்டும். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பொறுப்பின் முக்கியத்துவம் :

ஒரு அப்பாவாக உங்கள் மகனுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, பொறுப்பேற்றுக் கொள்வதின் முக்கியத்துவம். சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் பொறுப்பேற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் செயலின் வழியாக உங்கள் மகனுக்கு காட்ட வேண்டும்.

பொறுப்பேற்றுக் கொள்வது என்பது ஒரு செயலை செய்வது மட்டுமில்லை. ஒரு தவறு செய்தால், அதை நான் தான் செய்தேன் என்று ஒப்புக் கொள்வதும் அடங்கும். இதை நீங்கள் பள்ளி காலத்திலேயே உங்கள் கற்று தருவது மிகவும் முக்கியமானது.

மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும் :

வருத்தமாக இருந்தாலும், சோர்வாக இருந்தாலும், அல்லது கோபமாக, கவலையாக இருந்தாலும் உங்கள் மகன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும், அதை உங்களிடம் தயக்கமின்றி முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் மகனுக்கு கற்றுத்தர வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஆண்கள் அழக்கூடாது என்ற பரவலான கருத்தை தவறு என்று உங்கள் மகனுக்கு உணர்த்தி. உங்கள் மகனும் அழ வேண்டுமானால் அழலாம், தவறே இல்லை என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.



வெற்றி மட்டுமல்ல தோல்வி பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் :

தற்போது பல பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, தன்னுடைய பிள்ளைகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தான். வாழ்வில் வெற்றி தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். எனவே வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தோல்வியை எதிர்கொள்வதும் முக்கியம் என்பதை உங்கள் மகனுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் :

ஆண்கள் என்றாலே மிகவும் கோபப்படுபவர்கள் அல்லது கோபப்படுவது தான் ஆண்மை என்ற ஒரு கட்டமைப்பு ஆண்களை பற்றி உள்ளது. முன்கோபம், தேவை இல்லாமல் சண்டை போடுவது, மற்றும் ஆக்ரோஷமாக இருப்பது ஒருவரை தனித்துவமாக காட்டாது. அது மிகவும் தவறான எண்ணம் என்பதை உங்கள் மகனுக்கு உணர்த்த வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் செய்யவே கூடாதவை என்ன? மருத்துவர் பகிரும் விஷயங்கள்- Explainer

அதிகமான கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தேவையான இடங்களில் கோபப்படலாம், கோபத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு என்பதையும் சொல்லித்தர வேண்டும்.



பெண்கள் மீதான மரியாதை :

உங்கள் மகனுக்கு எல்லா விஷயங்களையும் நீங்கள் வார்த்தையாக சொல்லிவிடமுடியாது. ஒரு சிலவற்றை, நீங்கள் உங்கள் செயல்களின் வழியாகத்தான் வெளிக்காட்ட முடியும். பெண்கள் மீது நீங்கள் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்பதை பற்றி உங்கள் மகன் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை நீங்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும். உங்கள் மனைவி, மகள், உறவினர்கள், நட்பு வட்டம் மற்றும் அலுவலகம் என்று நீங்கள் பழகும் பெண்கள் வட்டத்திலும் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதின் வழியாக உங்கள் மகனும் அறிந்து கொள்வான்.

Parenting Tips : டீனேஜில் உள்ள உங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? டிப்ஸ் இதோ..

கண்ணியமாக நடந்து கொள்வது :

ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவரைப்பற்றி தவறான கணிப்பை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு ஜென்டில்மேனாக, கண்ணியமான ஆணாக நடந்து கொள்வது எப்படி என்பதை பற்றி உங்கள் மகனுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஒருவரை சந்திக்கும்போது உறுதியான கைகுலுக்கல், கண்களை பார்த்து பேசும் பழக்கம், மரியாதை செலுத்துவது, மற்றவர்களின் கருத்துக்களை கேட்பது ஆகிய விஷயங்கள் எல்லாம் உங்கள் மகனின் இளம் வயதிலேயே நீங்கள் சொல்லித் தரவேண்டும்.



அதேபோல, ஒரு நபர் எப்படி பேசுகிறார் என்பதும் அவரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும். எனவே, உங்கள் மகன் என்ன மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பதை நீங்கள் கண்காணித்து, அதனை திருத்த வேண்டும்.

உங்கள் மகன் உங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு பேசலாம். எனவே, நீங்களும் கண்ணியமான முறையில் பேச வேண்டும். அதுமட்டுமின்றி வார்த்தைகளை ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: